Saturday, February 14, 2009

அப்பா பிள்ளை விளையாட்டு

அமர், Ashu & முனியப்பன்

முனியப்பன் சொந்தக்கதை சோகக்கதை, காதல் தோல்வி, திருமண தோல்வி. இருந்தாலும் ஆள் ஒரு ஜோக் பார்ட்டி. பொதுவா சபை (கூட்டம்) களை கட்டனும்னா, அதுக்கு ஒரு ஆள் வேணும். நம்ம முனியப்பன் இருக்கற எடம் கலகலப்பாயிரும்.

முனியப்பனைக் கிறுக்குப் பிடிக்க வைக்க ரெண்டு பேர் இருக்கானுவ. முனியப்பன் தங்கச்சி பையங்க. பேரு அமர் 7 வயசு. Ashu 4 வயசு. சின்ன புள்ளைக வெளையாட்டு மாறிக்கிட்டே இருக்கும். புதுசு புதுசா அவனுக கற்பனைல உதிக்கிற வெளையாட்டை வெளையாடுவானுங்க. நாமளும் அதுக்கேத்த மாதிரி update ஆயிரணும், எப்படின்னா, பாட syllabus, Computer, TV, Cell Phone புதுசா update ஆன உடனே நாமளும் அதை தெரிஞ்சிக்கிற மாதிரி, சின்னப் புள்ளைக வெளையாட்டுக்கும் update ஆயிரணும்.

இப்ப ஒரு 4 நாளா அமர், Ashu வெளையாட்டு புதுசா இருக்கு. Ashu அப்பாவாம், முனியப்பன் Ashuவோட பிள்ளையாம். அமர் கார் டிரைவராம். Ashu பிரிகேஜி. முனியப்பன் 60 கிலோ, வெளையாட்டைப் பாருங்க. Ashuவுக்கு ஒரு நாள் பொழுது எப்படிப் போகுதோ, அதை அப்படியே முனியப்பன் சின்னப் பிள்ளையா வெளையாடணும். அமர், Ashu ரெண்டு பேரும் சேந்து விளையாடுவாங்க.

முனியப்பன் தூங்குற மாதிரி படுத்துக்கிடுவார். "ஏ பிள்ளை எந்திரி," Ashu எழுப்ப, "இன்னும் அஞ்சு நிமிஷம்" எந்திரிக்க Ashu மாதிரி முனியப்பன் டைம் கேப்பார். "அஞ்சு நிமிஷம் ஆச்சு எந்திரி" Ashu மறுபடி எழுப்ப முனியப்பன் எந்திரிக்கணும், Ashu முனியப்பன் கையப் பிடிச்சிக்கிட்டு போய் "one toilet போப்பா", பல் தேய்க்க paste குடுப்பார் Ashu (Action தான்). முனியப்பன் பல் தேய்க்கிற மாதிரி நடிக்கணும், பெறகு பிள்ளையக் குளிப்பாட்டி Ashu துவட்டி விடுவார். பெறகு schoolக்கு கெளம்பற மாதிரி, uniform, shoes, lunch box. "டிரைவர் அண்ணன் வந்தாச்சா" முனியப்பன் கேப்பார். அமர் "நான் வந்து 30 மினிட்ஸ் ஆச்சும்பார்". பிறகு முனியப்பன் school bagஅ தோள்ல தூக்கிப்போட்டு schoolக்கு கெளம்பி கார்ல ஒக்காருவார். அமர் காரை ஓட்டிக்கொண்டு போய் முனியப்பனை schoolல drop பண்ணிருவார்.

இந்த வெளையாட்டு நடக்குற நேரம் இரவு 10.30 மணி. எடம் முனியப்பனோட துயில் அறை. school முடிஞ்சு அப்பா Ashu, பிள்ளை முனியப்பனைக் கூப்பிட்டு வருவார். வரும் போது பிள்ளை தண்ணிப் பழ ஜீஸ் குடிக்கும். ரெகுலரா schoolல இருந்து வந்த ஒடனே, அமர் கார் டிரைவர் உதவியுடன் கார் ஓட்டுவார். அதை முனியப்பன் அப்பா பிள்ளை வெளையாட்டுல சேத்துக்கிடுவார். தலையணை - அது மேல pencil box - அதான் car steering. அத பிடிச்சுக்கிட்டு, பின்னால car driver அமர் ஒக்காந்திருக்க, முனியப்பன் car ஓட்டுவார்.

இது இப்ப 4 நாளா நடக்குது. நம்மாளு முனியப்பனும் ஜோக் பார்ட்டில்ல, அவரும் அமர், Ashu கூட சேந்து கலக்குவார். "அப்பா எனக்கு Horlicks குடு". Ashu குடுக்கும் action டம்ளர்க்குள் விரல விட்டு, நாக்குல கைய வச்சுப் பாத்து இன்னும் கொஞ்சம் Horlicks, Ashu ஹார்லிக்ஸ் கொட்டுவார், பிறகு முனியப்பன் குடிப்பார். அமர் சொல்றதையும் அவுத்து விடுவார். "அப்பா டிரைவர் அண்ணனை 3.15க்குக் கூப்பிட வரச்சொல்லுப்பா ", Ashu அமர்கிட்ட சொல்லுவார். பெறகு ஒண்ணு சொல்லுவார் முனியப்பன். அமர், Ashu ரெண்டு பேரும் தலைல அடிச்சிக்கிடுவாங்க. முனியப்பன் "2 toilet கழுவி விடும்"பார். அமர், Ashu ரெண்டு பேரும் "ச்சீய்"ன்ருவாங்க.

Ashu, முனியப்பன் வெளையாட்ல ஓரளவு பங்கெடுத்துக்கிற அமரோட comment, "இப்படி ஒரு பிள்ளை planetல கெடையாது. Outer galaxyலயும் கெடையாது."

சிறு பிள்ளைகளுடன் நம் உறவு உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே போதாது, நமது அருகாமையும் தேவை, அவர்களுடன் கலந்து அவர்களுடைய கற்பனையை, அறிவை மேம்படுத்த வேண்டும்.

முனியப்பனோட அப்பா இதே மாதிரி முனியப்பனை வளத்தார். அதை தங்கச்சி பிள்ளைகள் வளர்ப்பில் முனியப்பன் பின்பற்றுகிறார்.

7 comments:

ஹேமா said...

//முனியப்பன். அமர், Ashu ரெண்டு பேரும் தலைல அடிச்சிக்கிடுவாங்க. முனியப்பன் "2 toilet கழுவி விடும்"பார். அமர், Ashu ரெண்டு பேரும் "ச்சீய்"ன்ருவாங்க.//

முனியப்பன் குழந்தைங்களோட குழந்தையா எவ்ளோ கொண்டாட்டம் உங்களுக்கு.இப்பிடி ஒரு மாமா எனக்கு இல்ல.என் மாமன்கள் எல்லாம் வில்லன் மூஞ்சி.

//சிறு பிள்ளைகளுடன் நம் உறவு உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே போதாது, நமது அருகாமையும் தேவை, அவர்களுடன் கலந்து அவர்களுடைய கற்பனையை, அறிவை மேம்படுத்த வேண்டும்.//

முனியப்பன் நீங்க ரொம்பவே அதிஸ்டசாலி.உங்க அப்பாபோல ஒரு மனிதர் கடவுள்தான்.

Muniappan Pakkangal said...

Nandri Hema,bringing up children is an art,they should be useful to the society.I'll be reposting the article on my father soon.

vellaisamy said...

Very intresting to study muniappan and his nepews. Also intresting to study Davasi story

Muniappan Pakkangal said...

Nandri Vellaisamy.it is a beauty to pl ay with children in their way.

Muniappan Pakkangal said...

Nandri valaipookkal.

Dikshith said...

Idhai padikkumbodhu naan chinna vayadhil eppadiyellam irundiruppennu ninaikka thonudhu. U touched the heart of the reader. Thank u.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,after reading this post-u had a flashback of ur childhood,hope u had a good time.