அமர் டென்னிஸ் விளையாட ஆரம்பிச்சு 10 மாசம் ஆகுது. அமர் 10 வயசு 6 மாச பையன் தான். நடு நடுல மேட்ச் ஆட போயிருவார். அவர் படிக்கிற ஸ்கூலுக்காக 3 மேட்ச் ஆடியிருக்கார். ஓபன் டோர்னமெண்ட் 2 ஆடுனார். இப்ப ஸ்டேட் ரேங்கிங் டோர்னமெண்ட் 2 ஆடிட்டார். பொங்கல் டயத்துல சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ, இப்ப 25, 26ல சென்னை ஜெயின் காலேஜ்ல.
அமருக்கு மேனேஜர், பாடி கார்டு நம்ம முனியப்பன் தான். ஸ்டேட் ரேங்கிங் டோர்னமெண்ட் ஆடுறதுல ஒரு சிறப்பம்சம், வெளையாட வர்ற பயலுவ 3 வருமாவது ஆடுற பயலாத்தான் இருப்பான். அவனுகளோட மேட்ச் விளையாடும் போது தான் விளையாட்டு நல்லா ஷேப் ஆகும். அமர் சின்னப் பையன்கிறதால முனியப்பன் அமர்கிட்ட சொல்லியிருக்கார். 2012 பூரா தோத்தாலும் பரவாயில்லை, ஸ்கோர்ல முட்டை மட்டும் வாங்கக் கூடாது. பாயிண்ட் எடுத்துத் தான் தோக்கணும். இப்ப ஜெயின் காலேஜ்ல 3 - 8, 5 - 8னு தான் அமர் தோத்திருக்கார். அமர் விளையாடுற category அண்டர் 12 மற்றும் அண்டர் 14.
இப்ப ஜெயின் காலேஜ் டோர்னமெண்ட் விளையாட போனப்ப, பிப்.24, 25, 26, 27ல சாப்பாடு காரப்பாக்கம் ஹாட் சிப்ஸ் ஹோட்டல்ல தான். மொத தடவை சாப்பிடப் போறப்ப, அமர் அவர் உடம்பை நெளிச்சு ஆடிக்கிட்டே போய் சாப்பாடு டேபிள்ல உட்கார்ந்தார். அதப் பாத்து அந்த ஓட்டல்ல டேபிள் கிளீன் பண்ற பொம்பள பிள்ளை சிரிச்சுகிட்டு அமர் பக்கத்துல வந்திருச்சு.
"அக்கா, அந்த டேபிளை கிளீன் பண்ணுங்க" அப்படின்னு சொன்னதும், பக்கத்து டேபிளை கிளீன் பண்ணிட்டு அமர் கூட பேச ஆரம்பிச்சிருச்சு. அமர் கூட இன்னொரு பையன் பிரின்சும் முனியப்பன் கூட வந்திருந்தார். பிரின்சும், அமரும், அந்தப் பிள்ளையும் பேசுனாங்க. இந்தப் பிள்ளை பேசுதுன்னு இன்னும் ரெண்டு பிள்ளைகளும் அந்தக் கலாய்ப்புல கலந்துகிட்டாங்க.
3 கிளீனர்களும், அமரும், பிரின்சும் அங்க சாப்பிடப் போறப்ப எல்லாம் சிரிப்புத் தான். 3 பிள்ளைகளும் அமர டேய் தம்பின்னு தான் கூடும். அமர், பிரின்ஸ், 3 பிள்ளைக சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கும் போது முனியப்பன் அவங்களை தொந்தரவு பண்ண மாட்டார். அக்கா - தம்பி பாசம் 3 நாளு பொங்கி வழிஞ்சிச்சு. 26ம் தேதி நைட் சாப்பிடப் போனப்ப அமர், நாங்க 27ம் தேதி கிளம்புறோம்னு சொல்லவும் 3 பிள்ளைகளுக்கும் தாங்க முடியல.
டேய் நாளைக்கு நாங்க லீவுடா, அன்னைக்கு நைட் சாப்பிட்டு கெளம்பினப்ப 3 பிள்ளைகளும், ஒன்னா நிண்ணு அமர், பிரின்சுக்கு டாடா சொல்லிச்சுக. அதுல ஒரு பிள்ளை டேய் தம்பி நாளைக்கு எனக்கு லீவுன்னாலும், உன்னைப் பாக்க காலைல வருவேன்னு சொல்லி, அதே மாதிரி 27ந் தேதி காலைல அமர், பிரின்ச பாக்க வந்துருச்சு.
சமுதாயத்தில் அடித்தட்டு மக்களோட பாசம் அலாதியானது. அந்தப் பிள்ளைக நாங்க கஸ்டமர் யார்க்கிட்டயும் பேசமாட்டோம்மா, ஒங்கிட்டதான் இப்படி சிரிச்சுப் பேசறம்னு அமர்கிட்ட சொல்லுச்சுக. Machine மாதிரி ஓடிட்டிருந்த 3 பிள்ளைகளுக்கும் முகத்துல ஒரு மலர்ச்சி அமரப் பாத்து.
பாசம்கிறது காசு குடுத்து வாங்குறது இல்ல. இந்த மாதிரி தன்னால வரணும்.