Sunday, September 2, 2012

சாவிய எடுக்கங்குள்ள



வாழ்க்கைல வித்தியாசமான நிகழ்வுகள் என்னைக்காவது வரும். 20.06.12ல முனியப்பனுக்கு அப்படி ஒரு சம்பவம்.

முனியப்பன் படிக்கிற காலத்துல 11க்கு அப்புறம் பியூசி. +2 கிடையாது. மதுரை ‡ நாகமலை எஸ்விஎன் காலேஜ்ல முனியப்பன் பியூசி படிச்சார். ஹாஸ்டல் ரூம் நம்பர் 16.

அன்னைக்கு மதியம் அஷூ, அமருக்கு டெய்ரி மில்க் வாங்க ஒரு கடைக்கு வாங்கப் போனார் முனியப்பன். வாங்கிட்டு திரும்பறப்ப டூ வீலர்கிட்ட ஒருத்தர் வந்தார். நீங்க முனியப்பன் தான... வந்தவர் கேக்கவும், முனியப்பன் ஆமான்னார். டாக்டர் தான...அதுக்கும் ஆமாம். என் பேர் ராமசாமி நான் ஒங்க கூட படிச்சேன்னார்.

முனியப்பன் எங்கன்னு கேட்ட ஒடனே நாகமலை காலேஜ்ல ... பியூசி ஹாஸ்டல்ல இருந்தோம் அப்படின்னார். முனியப்பன் ... நான் 16ம் நம்பர் ரூம், நீங்கன்னார்... அதுக்கு ராமசாமி 24 ன்னார். அப்புறம் பரஸ்பர விசாரிப்புகள். தொடர்ந்து ஒன்னச் சொல்லி மிரட்டிட்டார் ராமசாமி.

நீங்க வண்டிய நிப்பாட்டிட்டு போகும் போதே பாத்துட்டேன். வண்டியிலயே சாவிய விட்டுட்டுப் போய்ட்டீங்க. சாவிய எடுத்துட்டு ஒங்க கூட பேசலாம்னு வந்தா, சாவிய எடுக்கங்குள்ள திரும்பிட்டீங்கனன்னார்.... கிசும்புக்கார அன்பு.

ரெண்டு பேரும் சந்திச்சது 40 வரு­ம் கழிச்சு. அதுல முனியப்பன் மூஞ்ச வச்சு கண்டுபிடிச்சது பெரிய விசயம். அந்த நேரமும் சாவிய எடுத்து வச்சுக்கிட்டு பேச நினைச்ச கிசும்பைப் பாருங்க.

2 comments:

Dikshith said...

anbai pala vidhangalil velippaduthalaam. adhil idhu oru vagai pola.

Unknown said...

அன்புக்கு மதுரை மக்கள். அவர்களின் வெள்ளந்தியான பேச்சு, உடனடிக் கோபம் எல்லாமே அலாதி. எம் மக்கள் எம் மக்களே.