நுரையீரல் கல்யாணம் இல்லப்பா இது.
முனியப்பன் கிளினிக். காலைல 11 மணி இருக்கும். ஒரு 20 வயசுப் பொண்ண சிகிச்சைக்குக் கூட்டிகிட்டு வர்றாங்க. டாக்டர் டேபிள்ல அந்தப் பொண்ணு கைல தலய வச்சுப் படுத்துருது. உட்கார முடியல, 20 நாள் காய்ச்சலாம், மூச்சு வாங்குது. வேற எடத்துல ட்ரீட்மென்ட் பாத்துட்டு முனியப்பன்கிட்ட வர்றாங்க. "பொண்ணுக்கு 4 நாள்ல கல்யாணம். பத்திரிக்கை வச்சாச்சு. கல்யாண மேடைல உட்காரணும்' அப்படிங்கிறாங்க.
முனியப்பனுக்கு ஒரு ஒதறல். நம்மளால முடியுமான்னு. இருந்தாலும், எல்லா டெஸ்ட்டும் பண்ணி, ஸ்கேன் வரைக்கும் பாத்து வியாதி என்னன்னு கண்டுபிடிச்சர்றார். TBயால, ஒரு பக்க நுரையீரல் அவுட். ட்ரீட்மென்ட் கொடுக்குறார். காய்ச்சல் கொறையுது. பொண்ணு கல்யாண மேடைக்குப் போய் கல்யாணமும் முடிஞ்சிருது.
ரெகுலர் செக் அப்புக்கு வந்து வியாதிய சரி பண்ணி, நுரையீரல் பழைய செயல்பாட்டுக்கு வந்துருது. இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு 2 பையன்கள். 2ம் நார்மல் டெலிவரி.
பிழைக்குமா, முடியாதாங்கிற பொண்ணு இன்னைக்கு நுரையீரல் சரியாகி, நல்ல சுகமா இருக்கு.
சபாஷ் யாருக்கு ? ஒழுங்கா வைத்தியம் பாத்த அந்தப் பொண்ணுக்கா, டயக்னோஸ் பண்ணி ட்ரீட்மென்ட் குடுத்த நம்மாளு முனியப்பனுக்கா ? .................
Monday, December 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ரெண்டு பேருக்கும் தான் சார்.
Thank u Sridhar Kannan,it was a nice case.
சூப்பர் முனியப்பன்.நீங்கதானே அந்த வைத்தியர்.இரண்டு பேருக்குமே சபாஷ்தான்.நீங்க சரியா கவனிச்சு மருந்து குடுத்தாலும் அந்தப் பொண்ணும் அதை ஒழுங்கா அந்த மருந்தைக் குடிச்சபடியாதானே சுகமா ஆனாங்க!
Yes Hema I treated her.Now she comes for treating her 2 boys.The credit goes to GOD.
Doctor treatment eduthukkkonnu solliyum udhasina paduthugira indha kaalathil Treatment sariya edutha patientayum paraattanum , vyaadhi ennannu bull's eye pola correcta kandupudicha ungalayum parattanum
Ungal parattukku nandri Diksith.
Post a Comment