படர்வது கொடி மட்டும் அல்ல என்மேல்
படரும் நீயும் தான்
கொடியிடையாளே
கொடிபோல் சுருள்பவளே
பாரியின் தேரில் படர்ந்த முல்லைக்கும்
படர்ந்த என் தோளில் படரும் உன் தொல்லைக்கும்
பல ஒற்றுமை உண்டு
படரும் முடிவில்லாத பந்தம்
மணம் வீசும் பூங்கொடியே
சினம் நிறைந்த பூ விழியே உன்
கோபம் என்மேல் படரும்வரை மட்டும்
கோபமும் படரும் ஒரு கொடிதான்
கொடியில் இல்லாத ஒன்று
கொடியிடையாள் உன்னிடம் உண்டு
புன்னகை அதுவும்
மெல்லிய புன்னகை......
Friday, September 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஆகா.... அருமை சார்....
நல்லாயிருக்கு
Nandri Gnanaseharan,itz a thing in everyone's life.
என்னா ஆச்சு டாக்டர்.இப்பிடியே வீட்ல இல்லாம ஊசி போட்டுக்கிட்டு.ஹொஸ்பிட்டலே கதின்னு இருந்தா யாருக்குத்தான் கோவம் வராது.பரவாயில்ல கவிதை சொல்லிச் சமாளிக்கத் தெரிஞ்சிருக்கு.
அதுவரைக்கும் சந்தோஷம்.கவிதை - கலக்கல்.
டாக்டர்,தொடர் பதிவுக்கு உப்புமடச் சந்தில உங்களைக் கூப்பிட்டு இருக்கேன்.வாங்க.
Nandri Hema ,thank you for calliong me in ur Uppumada Santhi.
அருமையாக இருக்கின்றது
Nandri Santhru.
Kavidhai nayam nandraaga irukku.
Nandri Dikshith.
Post a Comment