மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.
தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.
மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?
மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.
அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.
கலி காலமய்யா .... !
Tuesday, April 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆமாம் சார்! இந்த காலத்துல இப்படிப்பட்ட பய புள்ளங்க இருக்கிறதாலதான் மழை பெய்யறதில்லை!
அதே சமயம் அப்பாக்களும் கொஞ்ச முன் ஜாக்கிரதையா இருக்கனும்னும் தோனுது!
பிரபாகர்...
Most of the children are like this Prabahar.
INDHA ULAGATHTHIL ELLAMAY PANAM PANAM PANAMDHAAN. Andha kaalathule oru paattu undu Panam yennada panam panam Gunam thanadaa Nirandharam yendru. Indha madhiri IRUMBU NENJAM konda aalungalukku andha paadalai orudharam ketka sollanum. Valluvar Vaakku : PIRARKKINNA MURPAGAL SEYYIN THAMAKKINNA PIRPAGAL THAAME VARUM. Idhu vedha vaakkum kooda.
Nandri Dikshith,how these son's will be looked by their sons in their old age ?
டாக்டர் ரொம்பவே மனசு வலிக்குது.எங்க அப்பா அம்மாவையும் நினைக்கிறேன்.
என்னையும் நினைச்சுக்கிறேன்.
பெருமூச்சு மட்டும்தான்.யார் தலையில எப்பிடியோ !
தனக்கென்றும் முதியவர்கள் சிறிது வைத்துக் கொள்ள வேண்டும் சார்... அது என்றைக்கும் நல்லது
Nandri Thenammai for ur suggestion.In yester years when the father gave the properties to their sons,they retained a part of their property for them which was to be shared by their sons after their death.That property was meant for Anna Vasthiram which mean Food and Dress.Now the upper class people have their own safety while the lower class people meet with this sort of ill treatment.
Post a Comment