வியாதியக் கண்டுபிடிக்கும் டயக்னாசிஸ் முக்கியமானது. ஒரு பேஷண்டோட ட்ரீட்மெண்ட்டே அத வச்சுத் தான். ஒரு டாக்டர் டயாக்னசிஸ்ல கோட்டை விட்டா பேஷண்ட் பாடு திண்டாட்டம் தான். அது சரியா அமைஞ்சுட்டா தனிக் கலை, சரியா இல்லைன்னா தனிக் கதை. இப்போ ஒரு ஜோக்கான டயாக்னசிஸ் கதை.
முனியப்பன் கிட்ட நம்ம தங்கவேல் வயித்த வலிக்குதுன்னு ஊசி போட வர்றார். முனியப்பன் பாத்துட்டு அல்சர் அப்படின்னு முடிவு பண்ணி ஊசி போட்டு மாத்திரை குடுக்கறார். ஊசியப் போட்ட உடனே நம்ம தங்கவேலு வாந்தி எடுத்துர்றார்.... அதுவும் ரத்த வாந்தி. உடனே நம்ம முனியப்பன் பக்கத்துல ஒரு குடல் அறுவை சிகிச்சை நிபுணர் கிட்ட ரெஃபர் பண்றார். ரத்த வாந்தின்னா... ரைல்ஸ் ட்யூப் போடணும். வாய் வழியா ஏதும் குடுக்கக் கூடாது. டிரிப்ஸ் போடணும்.
அந்த டாக்டர் குடலுக்குன்னு (Gastro Enterology) புராஜக்ட் பண்ணி ஆஸ்பத்திரி நடத்துறார். மதுரை பெரிய ஆஸ்பத்திரிலயும் அறுவை சிகிச்சை நிபுணரா இருக்கார். அந்த ஆஸ்பத்திரியல இருந்து முனியப்பனுக்கு போன். உங்க பேண்ட்டுக்கு சிக்மாய்டு வால்வஸ் (Sigmoid Volvus). GH அனுப்பிட்டோம். சிக்மாய்டு வால்வஸ்னா வயிறு வீங்கும், மோஷன் போகாது.
நம்ம தங்கவேலு சிக்ஸ்பேக் ஆளு, மோஷன் தொந்தரவும் இல்ல, முனியப்பனுக்கு ஒரே குழப்பம்.
அடுத்த நாள் காலைல நம்ம தங்கவேலு முனியப்பன் கிட்ட நல்லா தெம்பா வந்து நிக்கிறார். நீங்க குடுத்த மாத்திரை, போட்ட ஊசியிலேயே சரியாப் போச்சு அப்படிங்கறார்.
தங்கவேலுவுக்கு அல்சர் தான். அவங்க டயாக்னசிஸ் பண்ண மாதிரி சிக்மாய்டு வால்வஸ் இல்ல.
அப்ப என்ன நடந்துச்சுங்கிறீங்களா ?
நம்ம குடல் டாக்டர், தங்கவேலுக்கிட்ட குடல் அடைச்சுக்கிச்சு. ஆபரேன் பண்ண ஒன்றரை லட்ச ரூபான்ணு ரேட் பேசியிருக்காரு. போன பேண்ட ரைல்ஸ் டியூப் போட்டு, டிரிப்ஸ் போடாம கூத்து பண்ணியிருக்காங்க. இந்த டாக்டர் ஜியஹச்ல வேற இருக்கார்.
ஆனா தங்கவேலு பாருங்க சூப்பரா இருக்கார்.
இப்ப வர்ற சில டாக்டர்களோட டயாக்னஸ்டிக் பவர் எப்படி இருக்கு பாருங்க. இவங்கள என்ன செய்றது. நம்மளே சுவத்துல முட்டிக்கிட வேண்டியது தான்.
Monday, April 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
U are 100% right dr. Right diagnosis oru spl art. Adhilaye patient paadhi gunamayiduvaaru. Balance by taking good medicine. Idha thaan makkal Indha dr kitte poana gunappaduthiruvaaru KAIRAASIK KAARAR endru solluvaanga. Idhu thaan periya Certificate to a Dr. Am i right dr?
ம்.. இதத்தானே வள்ளுவரும், ‘நோய் நாடி, நோய்முதல் நாடி..”ன்னு சொல்லிருக்கார்.
சில மெடிக்கல் டெர்ம்ஸ் புரியலை.. ”ரைல்ஸ் ட்யூப்”னா என்ன? ஊசி போட்டதும் ஏன் ரத்த வாந்தி வந்தது?
Nandri Dikshith.u r absolutely right.
Nandri Hussainamma,Ryle's tube is inserted thru nose into the stomach ,for feeding liquid diet ,the patient should not take anything by mouth,He vomitted just after injection ,not bcz of the injection.He was about to vomit when he came.In Acidity disorders vomiting is one of the discomforts ,the patient has.
சார்ர்ர்... இப்பதான் இதை பற்றி ஒரு நண்பனிடம் பேசினேன்.... இப்ப உள்ள மருத்துவரிடம் இந்த பவர் இல்லை சார்....
மருத்துவம் ஒரு சேவை என்பதிலிருந்து காசு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி தள்ளப்பட்டதினால் மருத்துவமும் பாழாபோகின்றது. உங்களை போன்று சிலர் இருப்பதால்தான் நாங்கள் எல்லாம் தப்பித்துக்கொண்டுள்ளோம்.....
மிக்க நன்றி சார்
Nandri Gnanaseharan,itz money oriented service.Present new comers lack in diagnostic skills.
Post a Comment