வீட்ல பூனை குட்டி போட்ருச்சு, பூனைக்குட்டி பாத்தாச்சு. கோழி வாங்கி, அடை வச்சு கோழிக்குஞ்சு பாத்தாச்சு நம்ம அமரோட அண்ணன் மார்ஷல் (கன்னி வேட்டை நாய்). அவர் வாரிச பாக்க வேணாமா?
முனியப்பன், அமர், அஷூ மூணு பேரும் மார்ஷலுக்கு ஜோடியா ஒரு ராஜபாளையம் நாய்க்குட்டிய வாங்க ராஜபாளையம் போனாங்க. ராஜபாளையத்துல ஒரு Dog Breeder கிட்ட போன் பண்ணி நல்ல ஃபீமேல் குட்டியா செலக்ட் பண்ணிட்டுத் தான் போனாங்க.
போற வழில ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் இடையில ரோட்டோரமா, ஒரு எடத்துல இளநீர் வித்துக்கிட்டிருந்தாங்க. திரும்ப வர்றப்ப அங்க இளநீர் குடிக்கணும்னு முனியப்பன் முடிவு பண்ணிட்டார். ராஜபாளையம் போனாங்க, நாய்க்குட்டிய வாங்கிட்டு ஒடனே மதுரைக்கு ரிட்டர்ன்.
இளநீர் கடைல காரை நிப்பாட்டியாச்சு. அமர் இளநீர் வாங்க போய்ட்டார். கடையில மூணு பாத்திரம் வச்சிருந்தாங்க. முனியப்பன் காபி இருக்கான்னு கடைக்காரர்ட்ட கேட்டார். கடைக்காரர் சிரிச்சிட்டார். என்னன்னு பாத்தா ... அந்தக் கடையில இந்தப் பக்கம் நொங்கு. பாத்திரத்துல பதநீ. பதநீல நொங்க போட்டு கொடுக்கறாங்க.
நொங்கு .... சூப்பர் டேஸ்ட். ரொம்ப இள நொங்கு, பச்ச நொங்கு எப்படி இருக்கும் ? ..... ரொம்ப நைஸ். அந்த இடம் வன்னியம்பட்டி. ஒரு டம்ளர் அஞ்சு ரூபா தான்.
பதநீல நொங்கு கலந்து கொடுக்கறது குறிப்பிட்ட காலத்துல மட்டுந்தான். அது தை மாசத்துல இருந்து ஆடி வரைக்கும் தான்.
வித்தியாசமான அனுபவங்கள்.... இந்த மாதிரி எப்பவாவது கிடைக்கும். அது ஒரு தனி அனுபவம்.
Wednesday, July 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ம்...அனுபவம் புதுசோ டாக்டர்.இந்த விஷயம் அமர்க்குத் தெரியுமோ !
unga rajapalayam kuttiyum super padha neer nungu anubhavamum super vazhthukkal
pathanila nongu pottu ,ithaan first time Hema.atulayum ,izhasaana pachchai nongu,anubavam very nice.Amar also had that,on that day.
Rajapalayam vellai kutty nallaa irukku Dikshith.
அருமை...பதனீ. நொங்கு....இதெல்லாம் சாப்பிடதே இல்ல...ஹூம்....
Nandri Aaaranya Nivas Ramamoorthy,itz a pleasure to hv Nongu & Pathani.where r u ?U visit Tamil Nadu or not.
நுங்கு ரொம்ப பிடிக்கும். சென்ற முறை சென்னை வந்திருந்த பொது அண்ணா சாலையில் உள்ள ஆவின் பார்லரில் ரொம்ப ஆசைப்பட்டு பதனி குடித்தேன். கழுநீர் மாதிரி இருந்தது! கொடுமை!
Post a Comment