முனியப்பனோட அப்பா கே.வேலுசாமி பிஏ பிஎல்... சென்னை லா காலேஜில படிக்கிறப்ப டென்னிஸ் வெளையாண்டு பழகி 25 வரும் தொடர்ச்சியா டென்னிஸ் வெளையாண்டவர். முனியப்பன் சின்னப்பையனா இருக்கும் போது அவுக அப்பாவுக்கு பந்து பொறுக்கி போட்டிருக்கார். அவுக அப்பா 40 வருத்துக்கு முன்னால வெளையாண்ட டென்னிஸ் ராக்கெட் முனியப்பன்கிட்ட இப்பவும் இருக்கு.
அமர் 10 வயசுக்கு பக்கத்துல வந்த ஒடனே, அவருக்கு ஒரு ஜூனியர் ராக்கெட் வாங்கிக் குடுத்து வீட்டு காம்பவுண்ட் சுவத்துல வால் பிராக்டீஸ் செய்யவைத்தார்.
அமருக்கு டென்னிஸ் கேம் பிடிச்சுப் போச்சு. ஒடனே அமர மதுரை யூனியன் கிளப்ல டென்னிஸ் கோச்சிங்குக்கு சேத்து விட்டார் முனியப்பன். அமர் எப்படி வெளையாடுறார்னு செக் பண்ண பத்து நாளைக்கு ஒரு தடவ முனியப்பனும் போயிருவார். ஏப்ரல், மே, ஜூன் காலைல கோச்சிங்.
ஜூலைல சாயங்கால டைம்ல மாத்திட்டாங்க. இதுல மேல ஊருக்குப் போயிட்டார் அமர். காலைல வெளையாண்டாத்தான் நல்லா இருக்கும். அப்புவோட எட்வர்டு ஹால்ல அமர் காலைல கோச்சிங் போக ஆரம்பிச்சார். ரெண்டு நாள் அப்பு, 4 நாள் யூனியன் கிளப். 3 மாசம் வெளையாண்டவுடனே அமர் மேட்ச் வெளையாடணும்னுட்டார்.
அப்ப சென்னைல ஜோலா அகாடமி டோர்னமெண்ட் வந்துச்சு. பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவுல மூணு ரவுண்ட்ல ஜெயிச்சிட்டார். 4 வது ரவுண்ட தாண்ட முடியலை. அந்த டோர்னமெண்ட்ல வின்னர் நம்ம வைகோ பேரன். இப்ப வெளையாடுற வெளையாட்ட அப்ப காமிச்சிருந்தா வைகோ பேரன் கூட அமர் மோதியிருப்பார்.
அப்புறம் மதுரை மாவட்ட அணித் தேர்வுக்கு போய்ட்டார். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெளையாடினார். வெளையாண்டவன் பூராம் 13,14 வயசு, நம்மாளு 10 வயசு.
அடுத்து மண்டல அளவிலான போட்டி. மொத ரவுண்ட்ல எஸ்பிஓஏ ஸ்கூல் பையன் 13 வயசு. அமர் அவனை ஜெயிச்சிட்டார். அடுத்த ரவுண்ட் டிவிஎஸ் ஸ்கூல் பையன், 14 வயசு.
4-3 பாய்ண்ட் இருந்தப்ப பெஸ்ட் ஆஃப் 7ன்னு மேட்ச்ச முடிச்சிட்டாங்க. அமருக்கு ரொம்ப வருத்தம். இன்னும் ஒனக்கு வயசு இருக்குப்பான்னு எல்லாரும் தேத்துனாங்க.
இப்ப வாரம் 6 நாள் அமர் டென்னிஸ் வெளையாடுறார். அதுல 3 நாள் அவர் கூட முனியப்பனும் போயிருவார். அமரும் அப்புவும் வெளையாடும் போது பால் சப்ளை பண்ற பால் பாய் வேலை நம்ம முனியப்பனுக்கு.
நம்ம அஷூ, இப்ப ரெண்டு வாரமா அமர் அண்ணன் கூட டென்னிஸ் கோர்ட்டுக்கு வர்றார். ஒரு நாள் எட்வர்டு ஹால், ஒருநாள் ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியம், ரெண்டுலயும் நம்ம பால் பாய் அஷூ குட்டி. முனியப்பனும், அஷூவும் பந்து பொறுக்கி பால் சப்ளை பண்ண அமர் டென்னிஸ் ஆடுறார்.
எட்வர்டு ஹால்ல ஆடுறப்ப அஷூவும் டென்னிஸ் வால் பிராக்டீஸ் பண்றார்.
அமருக்கு பிடிச்ச டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மற்றும் அமர் ஒரு டார்கெட் வச்சு டென்னிஸ் ஆடுறார், அஷூ .... பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//பால் பாய் வேலை நம்ம முனியப்பனுக்கு.//
அப்பாகிட்ட செஞ்ச வேலை, இப்ப பேரனுக்கு!!
குடும்பமே டென்னிஸில் ஆர்வமா இருப்பது மகிழ்ச்சியானது. வாழ்த்துகள்.
Neenga amar a encourage pannikitte irunga dr. Kandippa oru nalla champion a varuvar. Enakku nambikkai irukku. Indha nambikkai amarukku irukkanum vetripera vazhthukkal.
Nandri- Hussainamma.Itz a pleasure to make a player
Nandri Dikshith,unga vaazthu palikkattum
Post a Comment