இவரு வேற யாரும் இல்ல, நம்ம காந்தி தாத்தா பேரன் தான். மேற்கு வங்காளத்துல கவர்னரா கொஞ்ச நாள் இருந்தாரு. அவருக்கென்னன்னு கேட்குறீங்களா, கடைசில சொல்றேன்.
தமிழ்நாடு பூரா கரண்ட் கட், டயத்தை கொஞ்சம் கொஞ்சமா கூட்டி இப்ப முந்தா நாள் வரைக்கும் காலைல 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், சாயங்காலம் 6 - 10க்குள்ள ஒன்றரை மணி நேரம்னு மொத்தம் ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரம் கரண்ட் கட். இப்ப இரண்டு நாளைக்கு முன்னால இருந்து இரவு 12 - காலைல 6 மணிக்குள்ள 30 நிமிம் 30 நிமிமா 3 தடவை கரண்ட் போகுது. ஆக டோடல் கரண்ட் கட் 9 மணி நேரம். ஒரு நாளைக்கு மக்கள் படுற வேதனை கொஞ்ச நஞ்சமில்ல.
தமிழ்நாடு பூரா கரண்ட் கட்டாம், சென்னைல மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தானாம். அங்க இருக்கவனும் தமிழன் தான. தமிழ்நாடே கரண்ட் கட்டுல கஷ்டப்படும் போது சென்னைத் தமிழன் அந்தக் கஷ்டத்தைப் பங்கு போடக் கூடாதா ?. தான், தனக்கு, தனது என்று தமிழன் சுயநலவாதியா மாறி ரொம்பநாளாச்சு.
சென்னை தலை நகராம். அங்கு எம்என்சி எனப்படும் மல்டி நேசனல் கம்பெனிகள் அதிகம். அவங்க தொழில் ஆரம்பிக்கும் போதே தடையில்லா மின்சாரம் வேணும்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு தான் தமிழ்நாட்டுக்குள்ள வர்றான். இதேமாதிரி கார்பரேட் கம்பெனிகள், ஹை எண்ட் யூசர்ஸ் எனப்படும் மின்சாரத்தை அதிகம் செலவழிக்கிறாங்க. அவணுக தொழில் பண்ணி சம்பாதிக்கறதுக்கு தமிழ்நாடே கரண்ட் கட்ல இருக்கணுமா ?
பரீட்சைக்கு பிள்ளைக படிக்க முடியல. சின்னப் பிள்ளைக காத்து இல்லாம தூங்க முடியல. தொழில் பூரா முடங்கிக் கிடக்கு. தொழிலாளிக்கு வேலை கொடுக்கமுடியல. அரசாங்கத்தோட ஓர வஞ்சனையைப் பாருங்க.
இங்க தான் கோபால கிருஷ்ண காந்திய பத்தி ஞாபகம் வருது. அவரு மேற்கு வங்காளத்துல கவர்னரா இருக்கப்ப மேற்கு வங்காளத்துல சரியான கரண்ட் கட். கொல்கத்தாவிலும் தான். மக்கள் கரண்ட் கட்ல வாடும் போது நமக்கு எதுக்கு கரண்டுன்னு கவர்னர் மாளிகைல கரண்ட் கட்டைக் கொண்டு வந்தவர். அவரும் யுபிஎஸ் போடாம, ஜெனரேட்டர் ஓட்டாம கரண்ட் கட்ட அனுபவிச்சார்.
அடுத்தவன் கஷ்டப் பட்டா என்ன ? ... நம்ம ஜாலியா இருக்கோம்ல, இதான் இன்னைக்கி தமிழன்.
Sunday, February 19, 2012
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்க. தன்னலமில்லாத் தலைவர்களின் காலத்தில் வாழ்ந்திருக்கீங்க.
Itz not a old time story Hussai-namma.Gopala Krishna Gandhi is still alive & this happened some 4 or 5 years back only.We stillhave politicians who share with people
indha gopalakrishna gokale enbavar ovvoru oorukkum oruvar irundha thaan indha naadu uroppadum illatta dum dum dhan...
Oorla irukkanum Dikshith,naatla ethanai per intha maathiri irukkaanga
Post a Comment