Sunday, February 19, 2012

கோபால கிருஷ்ண காந்தி

இவரு வேற யாரும் இல்ல, நம்ம காந்தி தாத்தா பேரன் தான். மேற்கு வங்காளத்துல கவர்னரா கொஞ்ச நாள் இருந்தாரு. அவருக்கென்னன்னு கேட்குறீங்களா, கடைசில சொல்றேன்.

தமிழ்நாடு பூரா கரண்ட் கட், டயத்தை கொஞ்சம் கொஞ்சமா கூட்டி இப்ப முந்தா நாள் வரைக்கும் காலைல 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், சாயங்காலம் 6 - 10க்குள்ள ஒன்றரை மணி நேரம்னு மொத்தம் ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரம் கரண்ட் கட். இப்ப இரண்டு நாளைக்கு முன்னால இருந்து இரவு 12 - காலைல 6 மணிக்குள்ள 30 நிமி­ம் 30 நிமி­மா 3 தடவை கரண்ட் போகுது. ஆக டோடல் கரண்ட் கட் 9 மணி நேரம். ஒரு நாளைக்கு மக்கள் படுற வேதனை கொஞ்ச நஞ்சமில்ல.

தமிழ்நாடு பூரா கரண்ட் கட்டாம், சென்னைல மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தானாம். அங்க இருக்கவனும் தமிழன் தான. தமிழ்நாடே கரண்ட் கட்டுல கஷ்டப்படும் போது சென்னைத் தமிழன் அந்தக் கஷ்டத்தைப் பங்கு போடக் கூடாதா ?. தான், தனக்கு, தனது என்று தமிழன் சுயநலவாதியா மாறி ரொம்பநாளாச்சு.

சென்னை தலை நகராம். அங்கு எம்என்சி எனப்படும் மல்டி நேசனல் கம்பெனிகள் அதிகம். அவங்க தொழில் ஆரம்பிக்கும் போதே தடையில்லா மின்சாரம் வேணும்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு தான் தமிழ்நாட்டுக்குள்ள வர்றான். இதேமாதிரி கார்பரேட் கம்பெனிகள், ஹை எண்ட் யூசர்ஸ் எனப்படும் மின்சாரத்தை அதிகம் செலவழிக்கிறாங்க. அவணுக தொழில் பண்ணி சம்பாதிக்கறதுக்கு தமிழ்நாடே கரண்ட் கட்ல இருக்கணுமா ?

பரீட்சைக்கு பிள்ளைக படிக்க முடியல. சின்னப் பிள்ளைக காத்து இல்லாம தூங்க முடியல. தொழில் பூரா முடங்கிக் கிடக்கு. தொழிலாளிக்கு வேலை கொடுக்கமுடியல. அரசாங்கத்தோட ஓர வஞ்சனையைப் பாருங்க.

இங்க தான் கோபால கிருஷ்ண காந்திய பத்தி ஞாபகம் வருது. அவரு மேற்கு வங்காளத்துல கவர்னரா இருக்கப்ப மேற்கு வங்காளத்துல சரியான கரண்ட் கட். கொல்கத்தாவிலும் தான். மக்கள் கரண்ட் கட்ல வாடும் போது நமக்கு எதுக்கு கரண்டுன்னு கவர்னர் மாளிகைல கரண்ட் கட்டைக் கொண்டு வந்தவர். அவரும் யுபிஎஸ் போடாம, ஜெனரேட்டர் ஓட்டாம கரண்ட் கட்ட அனுபவிச்சார்.

அடுத்தவன் கஷ்டப் பட்டா என்ன ? ... நம்ம ஜாலியா இருக்கோம்ல, இதான் இன்னைக்கி தமிழன்.

Monday, January 30, 2012

ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்க - தும்மக்குண்டு பேச்சி

கிராமத்து மக்கள் எப்பவுமே வெளிப்படையா பேசறவங்க. மதுரையே ஒரு பெரிய கிராமம் தான். அதச் சுத்தி உள்ள கிராமங்கள்ல இருந்து வைத்தியம் பாக்க மதுரைக்கு வருவாங்க.

தும்மக்குண்டுன்னு ஒரு ஊர்.... செக்காணத்துல இருந்தும் போகலாம், திருமங்கலத்துல இருந்தும் போகலாம், உசிலம்பட்டில இருந்தும் போகலாம். மதுரைல இருந்து 45 கிமீ. அங்க இருந்து பேச்சி வந்தாங்க.

முனியப்பன் கிட்ட முழங்கால் வலின்னு ஊசி போட வந்தாங்க.

பேச்சிக்கு முழங்கால் வலி ... 40 ‡ 50 வயசுல யாராயிருந்தாலும் வரும். Knee Joint மொத்த உடம்பையும் தாங்குற இணைப்பு. அதில lubrication இருக்கும். வயசாகும் போது wear & tear ல lubrication fluid கொறஞ்சு வலி வரும்.

சிலிம் பாடின்னா கொஞ்ச நாள்ல வலி போயிரும். கொஞ்சம் எக்சர்சைஸ், கொஞ்சம் மாத்திரை அவ்வளவு தான்... சொகமாயிரும்.

குண்டானவங்க .. obese னா சிக்கல் தான். Osteoarthritis வந்துரும். அதுக்கு மாத்திரை, பிசியோ தெரபின்னு போய்க்கிட்டே இருக்கும். சொகமாகாது.

தும்மக்குண்டு பேச்சி சிலிம் பாடிங்கிறதால முழங்கால் வலி சரியாயிடுச்சி. நாலஞ்சு தடவ முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்தாங்க. நல்லாய்ட்டாங்க.

அவங்க ட்ரீட்மெண்டுக்கு வந்த மொதநாள் ஜோக் அடிச்சிட்டாங்க. சும்மா ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்கன்னு. அங்க இருந்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க. கிராமத்து சனங்களுக்கு மனசுல இருக்கது அப்படியே வெளிய வந்துரும்.

Friday, September 23, 2011

பால் பாய்

முனியப்பனோட அப்பா கே.வேலுசாமி பிஏ பிஎல்... சென்னை லா காலேஜில படிக்கிறப்ப டென்னிஸ் வெளையாண்டு பழகி 25 வரு­ம் தொடர்ச்சியா டென்னிஸ் வெளையாண்டவர். முனியப்பன் சின்னப்பையனா இருக்கும் போது அவுக அப்பாவுக்கு பந்து பொறுக்கி போட்டிருக்கார். அவுக அப்பா 40 வரு­த்துக்கு முன்னால வெளையாண்ட டென்னிஸ் ராக்கெட் முனியப்பன்கிட்ட இப்பவும் இருக்கு.

அமர் 10 வயசுக்கு பக்கத்துல வந்த ஒடனே, அவருக்கு ஒரு ஜூனியர் ராக்கெட் வாங்கிக் குடுத்து வீட்டு காம்பவுண்ட் சுவத்துல வால் பிராக்டீஸ் செய்யவைத்தார்.

அமருக்கு டென்னிஸ் கேம் பிடிச்சுப் போச்சு. ஒடனே அமர மதுரை யூனியன் கிளப்ல டென்னிஸ் கோச்சிங்குக்கு சேத்து விட்டார் முனியப்பன். அமர் எப்படி வெளையாடுறார்னு செக் பண்ண பத்து நாளைக்கு ஒரு தடவ முனியப்பனும் போயிருவார். ஏப்ரல், மே, ஜூன் காலைல கோச்சிங்.

ஜூலைல சாயங்கால டைம்ல மாத்திட்டாங்க. இதுல மேல ஊருக்குப் போயிட்டார் அமர். காலைல வெளையாண்டாத்தான் நல்லா இருக்கும். அப்புவோட எட்வர்டு ஹால்ல அமர் காலைல கோச்சிங் போக ஆரம்பிச்சார். ரெண்டு நாள் அப்பு, 4 நாள் யூனியன் கிளப். 3 மாசம் வெளையாண்டவுடனே அமர் மேட்ச் வெளையாடணும்னுட்டார்.

அப்ப சென்னைல ஜோலா அகாடமி டோர்னமெண்ட் வந்துச்சு. பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவுல மூணு ரவுண்ட்ல ஜெயிச்சிட்டார். 4 வது ரவுண்ட தாண்ட முடியலை. அந்த டோர்னமெண்ட்ல வின்னர் நம்ம வைகோ பேரன். இப்ப வெளையாடுற வெளையாட்ட அப்ப காமிச்சிருந்தா வைகோ பேரன் கூட அமர் மோதியிருப்பார்.

அப்புறம் மதுரை மாவட்ட அணித் தேர்வுக்கு போய்ட்டார். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெளையாடினார். வெளையாண்டவன் பூராம் 13,14 வயசு, நம்மாளு 10 வயசு.

அடுத்து மண்டல அளவிலான போட்டி. மொத ரவுண்ட்ல எஸ்பிஓஏ ஸ்கூல் பையன் 13 வயசு. அமர் அவனை ஜெயிச்சிட்டார். அடுத்த ரவுண்ட் டிவிஎஸ் ஸ்கூல் பையன், 14 வயசு.

4-3 பாய்ண்ட் இருந்தப்ப பெஸ்ட் ஆஃப் 7ன்னு மேட்ச்ச முடிச்சிட்டாங்க. அமருக்கு ரொம்ப வருத்தம். இன்னும் ஒனக்கு வயசு இருக்குப்பான்னு எல்லாரும் தேத்துனாங்க.

இப்ப வாரம் 6 நாள் அமர் டென்னிஸ் வெளையாடுறார். அதுல 3 நாள் அவர் கூட முனியப்பனும் போயிருவார். அமரும் அப்புவும் வெளையாடும் போது பால் சப்ளை பண்ற பால் பாய் வேலை நம்ம முனியப்பனுக்கு.

நம்ம அஷூ, இப்ப ரெண்டு வாரமா அமர் அண்ணன் கூட டென்னிஸ் கோர்ட்டுக்கு வர்றார். ஒரு நாள் எட்வர்டு ஹால், ஒருநாள் ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியம், ரெண்டுலயும் நம்ம பால் பாய் அஷூ குட்டி. முனியப்பனும், அஷூவும் பந்து பொறுக்கி பால் சப்ளை பண்ண அமர் டென்னிஸ் ஆடுறார்.

எட்வர்டு ஹால்ல ஆடுறப்ப அஷூவும் டென்னிஸ் வால் பிராக்டீஸ் பண்றார்.

அமருக்கு பிடிச்ச டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மற்றும் அமர் ஒரு டார்கெட் வச்சு டென்னிஸ் ஆடுறார், அஷூ .... பார்ப்போம்.

Saturday, August 27, 2011

வெளிய போய் நில்லு - அஷூ

நேத்து திடீர்னு அஷூ வாத்தியார் அவதாரம் எடுத்துட்டார். ஸ்டூடண்ட்ஸ் .... வழக்கம் போல அமர் அண்ணனும் முனியப்பனும் தான்.

அமர் அவர் வாங்குன ராமாயணம் புத்தகத்த எடுத்துக்கிட்டு அஷி சாரோட கிளாஸ்க்கு வந்துட்டார்.

அமர்கிட்ட ராமாயணப் புத்தகம் இருக்கிறதப் பாத்த முனியப்பன், ஆர்வக் கோளாறுல அமரை கேள்வியால துளைச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டார். ராமரோட அப்பா பேர் என்ன ? சீதையோட அப்பா பேர் என்ன ? வாலி, சுக்ரீவன் யாரு, இப்படி பல கேள்விகள்.

அமரும் ராமர், மாயமான், வில்லை வளைச்சார் இப்படி புத்தகத்தப் பாத்துப் பாத்து சொல்லிக்கிட்டு வந்தார்.

அஷூ எப்பவும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றவர். அண்ணன் பதில் சொல்ல திணறுவதைப் பாத்துக்கிட்டு எப்படி சும்மா இருப்பார் ? ... பொங்கி எழுந்துட்டார்.

அஷூ சார் முனியப்பனைப் பாத்து, என்ன கிளாஸ் நடத்தவிடாம பேசிக்கிட்டு இருக்க. வெளிய போய் நில்லுன்னு அதட்டி ஒரு ஆர்டர் போட்டார்.

அஷூ சார் ஆர்டர் போட்ட பிறகு அமர் அண்ணனை எப்படி கேள்வி கேட்க முடியும் .... ?

Wednesday, July 27, 2011

பதநீ, நொங்கு ...... வன்னியம்பட்டி

வீட்ல பூனை குட்டி போட்ருச்சு, பூனைக்குட்டி பாத்தாச்சு. கோழி வாங்கி, அடை வச்சு கோழிக்குஞ்சு பாத்தாச்சு நம்ம அமரோட அண்ணன் மார்­ஷல் (கன்னி வேட்டை நாய்). அவர் வாரிச பாக்க வேணாமா?

முனியப்பன், அமர், அஷூ மூணு பேரும் மார்ஷ­லுக்கு ஜோடியா ஒரு ராஜபாளையம் நாய்க்குட்டிய வாங்க ராஜபாளையம் போனாங்க. ராஜபாளையத்துல ஒரு Dog Breeder கிட்ட போன் பண்ணி நல்ல ஃபீமேல் குட்டியா செலக்ட் பண்ணிட்டுத் தான் போனாங்க.

போற வழில ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் இடையில ரோட்டோரமா, ஒரு எடத்துல இளநீர் வித்துக்கிட்டிருந்தாங்க. திரும்ப வர்றப்ப அங்க இளநீர் குடிக்கணும்னு முனியப்பன் முடிவு பண்ணிட்டார். ராஜபாளையம் போனாங்க, நாய்க்குட்டிய வாங்கிட்டு ஒடனே மதுரைக்கு ரிட்டர்ன்.

இளநீர் கடைல காரை நிப்பாட்டியாச்சு. அமர் இளநீர் வாங்க போய்ட்டார். கடையில மூணு பாத்திரம் வச்சிருந்தாங்க. முனியப்பன் காபி இருக்கான்னு கடைக்காரர்ட்ட கேட்டார். கடைக்காரர் சிரிச்சிட்டார். என்னன்னு பாத்தா ... அந்தக் கடையில இந்தப் பக்கம் நொங்கு. பாத்திரத்துல பதநீ. பதநீல நொங்க போட்டு கொடுக்கறாங்க.

நொங்கு .... சூப்பர் டேஸ்ட். ரொம்ப இள நொங்கு, பச்ச நொங்கு எப்படி இருக்கும் ? ..... ரொம்ப நைஸ். அந்த இடம் வன்னியம்பட்டி. ஒரு டம்ளர் அஞ்சு ரூபா தான்.

பதநீல நொங்கு கலந்து கொடுக்கறது குறிப்பிட்ட காலத்துல மட்டுந்தான். அது தை மாசத்துல இருந்து ஆடி வரைக்கும் தான்.

வித்தியாசமான அனுபவங்கள்.... இந்த மாதிரி எப்பவாவது கிடைக்கும். அது ஒரு தனி அனுபவம்.

Friday, July 8, 2011

OAP உம்மா

OAP ங்கறது Old age pension. தமிழக அரசால் ஆதரவற்ற முதியோர்களுக்கு, விவசாயக் கூலிகளுக்கு, விதவைப் பெண்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, வயது 50ஐக் கடந்தும் மணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை. சுருக்கமா OAP. மாசா மாசம் ஒரு தொகை வந்துரும்.

மொதல்ல மாசம் 150 ரூபா, அப்புறம் 200 ரூபா , அதுக்கப்புறம் 250 ரூபா, பிறகு 400 ரூபா, அடுத்து 500 ரூபா, இப்ப மாசா மாசம் 1000 ரூபா.

இந்த திட்டத்துக்கு மனு போட்டு VAO, RI, தாசில்தார் கையெழுத்து வாங்கி கலெக்டர் ஆபிஸ்ல கொடுத்தா தகுதியானவங்களுக்கு சாங்சன் ஆயிரும்.

இந்த ஓஏபில வயதுச் சான்றிதழ் டாக்டர்கிட்ட வாங்கணும். முனியப்பனும் வயதுச் சான்றிதழ் போட்டுக் குடுத்துருவார். 1989ல இருந்து OAPக்கு வயதுச் சான்றிதழ் கொடுக்கும் முனியப்பன் அதுக்கு காசு வாங்குறது இல்லை...ஃப்ரீ ... எல்லாருக்கும்.

இந்த 22 வரு­த்துல ஒருத்தர் ஒரு கேக் வாங்கி கொடுத்திருக்கார். ஒருத்தர் ரெண்டு பச்சை வாழைப்பழம் கொடுத்திருக்கார். ஒரு கிழவி 10 ரூபாய கையில திணிச்சிட்டு போயிருக்கு.

ஒத்தக்கடை மார்க்கெட் ஏரியால இருந்து ஒரு கிழவி வரும். "அப்பே, நீ கையெழுத்து போட்டு எல்லாருக்கும் ரூபா வருதுப்பே"ன்னு முனியப்பன் மொகத்தோட அது மொகத்த வச்சு கொஞ்சி ஒரு முத்தம் - உம்மா கொடுத்துட்டுப் போயிரும்.

OAP நல்ல விசயம் ... அதுல வயதுச் சான்றிதழுக்குக் காசு வாங்காம கையெழுத்து போடுறது, ஒரு சேவை - சர்வீஸ். முனியப்பனுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு.

Friday, May 20, 2011

அபிஷேக் அஷ்மிதா 100%

விஏஓ ஜீவகனும், அவங்க மனைவி விஜியும் முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றாங்க .... அவங்க பிள்ளைக அபிஷேக் 7 அஷ்மிதா ரெண்டு பிள்ளைகளுமே என்ன சுகமில்லன்னாலும் ஊசிய போட்டு, மாத்திரை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போற ஆளுக. ஒருநாள் கூட ஸ்கூல் கட் பண்ண மாட்டாங்க.

எல்கேஜில இருந்து +2 வரைக்கும் ஸ்கூல்ல லீவ் எடுக்காம படிச்ச அபிஷேக் இப்ப தேனி மருத்துவ கல்லூரில மெடிக்கல் ஸ்டூடண்ட். 7 வது படிக்கிற அவன் தங்கச்சி அஷ்மிதா இதுவரைக்கும் ஸ்கூல் கட் பண்ணதில்லை.

அபிஷேக், அஷ்மிதா ரெண்டு பேருமே வருஷா வரு­ம் எஸ்பிஓஏ ஸ்கூல் Annual Day ஃபங்க்­ன்ல 100% அட்டெண்டன்சுக்காக பரிசு வாங்கறவங்க. 100% அட்டெண்டன்சுக்காக ஒரு வரு­ம் கூட தவறாம பரிசு வாங்குனது அபிஷேக், அஷ்மிதா தான்.

பிள்ளைகளோட ஆர்வமும், பெற்றோருடைய வழிகாட்டுதலும் தான் இந்த மிகப்பெரிய சாதனைக்கு அடித்தளம்.