Tuesday, February 9, 2010

இசை அரசி பேரன் பொறந்தாச்சு

இசை அரசி பேரன் பொறந்தாச்சு

இசை அரசி மதுரைல ஒரு தபால் துறை ஊழியரா பணியில இருந்தாங்க.

அவங்க வீட்டுக்காரரு உடற்பயிற்சி ஆசிரியரா அரசு மேல்நிலைப் பள்ளியில வேலைப் பாக்குறார். பெண் ஒண்ணு, ஆண் ஒண்ணு. 2 குழந்தைகள் அவங்களுக்கு பிள்ளைகள் வளர்றாங்க. பொண்ணு PG முடிச்சு B.Ed., பண்ணுது. பையன் +2 முடிச்சு காலேஜ்ல மொத வருஷம்.

ஒரு குடும்பம் நல்லா இருக்குறது கடவுளுக்கு பிடிக்காதுல்ல. தண்ணி தொட்டி கழுவ போன மகன், மேல 3வது மாடியில இருந்து தவறி விழுந்துர்றான். பெத்த பிள்ளை ரத்த வெள்ளத்துல, தலை காயத்தோட உயிரில்லாம ... பெத்த தாயால எப்படி தாங்க முடியும்? இசை அரசி அதிர்ச்சியில உறைஞ்சுர்றாங்க. அவங்க வீட்டுக்காரரும் அதே நிலைதான். ஒரு வருஷம் ஆகுது. இசை அரசியோட கணவரும் போய்ச் சேந்துர்றார். அடுத்தடுத்து ரெண்டு உயிரிழப்பு. அதுவும் சாகக்கூடிய வயசு கெடையாது. இசை அரசி கடுமையான அதிர்ச்சியில இருக்காங்க.

முனியப்பனை பார்க்க வந்தா அழுதுருவாங்க. அழுகவிட்டு, ஆறுதல்படுத்தி அனுப்பிருவார். அவங்க மகளுக்கு அரசு வேலை கெடைச்சு ஆசிரியராயிர்றாங்க. மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு மருமகனும் அரசு ஆசிரியர். மொதல்ல இசை அரசிக்கு பேத்தி பொறக்குது.PG முடிச்சு B.Ed.,

இசை அரசி கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர்றாங்க. அப்புறம் முனியப்பனை பாக்க வர்றப்போ அழுக மாட்டாங்க. கண்ணு மட்டும் கலங்கும். இப்ப அவங்க பொண்ணுக்கு ரெண்டாவது குழந்தை பிறக்குது. ஆண் குழந்தை பேரனை பார்த்ததும் இசை அரசி சந்தோஷமாயிர்றாங்க. பேரன் வடிவில மகன் அவங்களுக்கு தெரியிறான்.

எல்லா குடும்பத்துலயும் உள்ள பழக்கம் இது. உயிருக்கு உயிரானவங்க இறந்த பிறகு, அடுத்து பொறக்குற குழந்தை வடிவில அவங்க தெரியிறது ஐதீகம்னு கூட சொல்லலாம்.

மகன் பேரன் வடிவில வந்து இசை அரசிக்கு புத்துணர்ச்சியை குடுத்திருக்கான். வாழ்க்கை சந்தோஷமா, சலிப்பில்லாம போறதுக்கு ஒரு பிடிப்பு வேணும். பேரன்கிற பிடிப்பு இசை அரசியை இனிமே கண்கலங்காம பாத்துக்கும்.