Thursday, March 31, 2011

நம்மாளல முடியாதுப்பா - அஷூ

அஷூ, அமருக்கு மார்ச் 21ந் தேதி முழுப் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டுட்டாங்க. கிட்டத்தட்ட 80 நாள் லீவு, அந்த 80 நாள்ல அவங்களுக்கு பிரயோஜனமா ஏதாவது செய்யனும்ல. முனியப்பன் ஐடியா பண்ணார். அமருக்கு டென்னிஸ், அஷிவுக்கு அதலெடிக்ஸ்னு. அமர் கொஞ்சம் ஃபேவரான ஆள், டென்னிஸ்ன ஒடனே ஒத்துக்கிட்டார். பாப்ளி பிரதர்ஸ் கடையில போய் டென்னிஸ் ராக்கெட், பால் வாங்கியாச்சு.

நைட் வீட்டு காம்பவுண்ட் சுவர்ல அடிச்சு அமர் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டார். அஷூவும், முனியப்பனும் ­ட்டில்.

முறைப்படி ஆட பழக்கணும்ல, கோச் வச்சு பழகுறது தான் நல்லாயிருக்கும். அஷூ, அமர அவுக அப்பா கூட ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்துக்கு முனியப்பன் அனுப்பி வச்சார். அவங்க போனப்ப டென்னிஸ் கோச் இல்லாததால நேரா யூனியன் கிளப்ல போய் அங்க டென்னிஸ் ஆட சேந்துட்டார். கோச் லட்சுமணன்.

நம்ம அஷி ரேஸ்கோர்ஸ்ல ஓடுறதுக்காக போனார்ல. அங்க இருந்த கோச் ஓடுறதுக்கு காலைல 5.30 டூ 6.30 வரச் சொல்லிருக்கார். முனியப்பன் நைட் கிளினிக் முடிச்சு வீட்டுக்கு வந்த ஒடனே அஷூ கறாரா சொன்னார். "காலைல 5.30க்கு வரச் சொல்றாங்கப்பா. 5.30க்
கு அங்க போகணும்னா 5 மணிக்கு எந்திரிக்கணும். என்னால 7 மணிக்குத் தான் எந்திரிக்க முடியும்". " நம்மாளால முடியாதுப்பா ". அஷூவுக்கே உரிய நச்.