Tuesday, February 23, 2010

ஆப்பரேஷன் பண்ணிட்டீங்களா - அஞ்சுகம்

குபீர் சிரிப்பலைகள் எதிர்பாராமல் என்றாவது எழும். சிரிப்பை யாராலும் அடக்க முடியாது.

முனியப்பனின் பால்ய பருவத்தில் அடிக்கடி சளி, இளைப்பு காரணமாக அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. மூன்று Course ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அவருக்கு போட்ப்பட்டது. ஒரு couse என்பது 90 ஊசி. ஆக 3 x 90 = 270 ஊசிகள். ஸ்டெரப்டோமைசின் ஊசியின் பக்க விளைவு Ototoxicity செவி கேட்கும் திறனை குறைத்து விடும்.

இப்பொழுது ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அதிகம் பயன்படுத்துவதில்லை. அப்படியே ஸ்ரெப்டோமைசின் போட நேரிட்டாலும் 45 ஊசிதான். நெடு நாள் குணப்படுத்த முடியாத MDRTB க்கு மட்டும் ஊசி. அவ்வளவுதான். ototoxic என்பதால்தான் இந்த கட்டுப்பாடு.

270 ஊசி முனியப்பனுக்கு என்ன பாடுபடுத்தியிருக்கும். செவி கேட்கும் திறன் சற்று குறைவு.

16.02.10ந் தேதி குண்டு குமார் ஊசி போட வந்திருக்கார். அப்பொழுது அஞ்சுகம் என்ற நோயாளி ஊசி போட வருகிறார். அவர் செவி கேட்கும் திறன் முற்றிலும் குறைந்தவர். முனியப்பன் குமாரிடம் " நமக்கே காது சரியா கேக்காது, இந்த அம்மாவுக்கு சுத்தமா கேக்காது" என்று சொல்லி விட்டு அஞ்சுகத்தை பரிசோதனை பண்ணி treatment எடுக்கிறார்.

அடுத்தநாள் 17.02.10 அதே போல குண்டு குமார் ஊசி போட வந்த நேரத்தில் அஞ்சுகமும் ஊசி போட வருகிறார். அஞ்சுகம் தனக்கு உள்ள வியாதி முதல் நாள் இருந்ததுக்கு இப்பொழுது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசினார்.

"இப்ப ஒங்களுக்கு காது நல்லா கேட்குது. காது ஆப்பரேஷன் பண்ணீட்டீங்களா"

அடக்க முடியாத பொறுக்க முடியாத சிரிப்பு குமாருக்கு, முனியப்பனுக்கு சிரிப்பை கிளப்பி விட்ட அஞ்சுகமும் சிரிப்பில் சேர்ந்து கொள்ள ஒரே சிரிப்பு.

இந்த மாதிரி சிரிக்கும் சமயங்கள் மனசு இலகுவாயிருக்கும். நடிகர்கள் மாதிரி, மருத்துவர்களை கவனிக்கும் நோயாளிகள் உண்டு. அதில் ஒருவர்தான் அஞ்சுகம்.