Wednesday, March 9, 2011

வாக்கிங் காபி

முனியப்பன் மதுரைல பைபாஸ் ரோட்ல குடியிருக்கவர். அந்தக் காலத்துல மதுரைக்கு பைபாஸ் ரோடா போட்டது இப்ப கிட்டத்தட்ட ஹார்ட் ஆஃப் த சிட்டி மாதிரி ஆயிருச்சு. மக்கள் தொகை, வாகனங்களோட எண்ணிக்கை பெருகி ஃபுல்லா டிராஃபிக் தான்.

பைபாஸ் ரோட்ல காலைல வாக்கிங் போற ஆளுகள்ல நம்ம முனியப்பனும் ஒருவர். அப்பா நீதிபதி கு.வேலுசாமி கிட்ட இருந்து பழகுனது தான் வாக்கிங். முனியப்பன் பக்கங்கள்ல பழைய பதிவில சோடியம் வேப்பர் லேம்ப் வெளிச்சத்துல வாக்கிங் போறதப் பத்தி முனியப்பன் ஒரு கவிதையாவே போட்டிருக்கார். முனியப்பனோட வாக்கிங் நேரம் காலை 5.30 டூ 6.00

காலைல வாக்கிங் போறப்ப எதுத்தாப்புல வர்ற ஆளு தயாளன். ஒரு சிரிப்பு அவ்வளவு தான். இப்ப கொஞ்ச நாளா தயாளனக் காணோம். இன்னிக்கு ட்ரீட்மெண்டுக்கு வந்தப்ப கேட்டா தயாளனும் வாக்கிங் போய்க்கிட்டு தான் இருக்கார். அப்ப டைமிங் பத்தி விசாரிச்சா 5.50 டூ 6.10.

பைபாஸ் ரோடு EMAR ஹோட்டல்ல காபி சாப்பிடறதா சொன்னார். முனியப்பன் அந்த ஹோட்டலைக் கடக்கும் போது மணி சரியா 5.55. அதான் தயாளனைப் பார்க்க முடியலை.

அப்ப தயாளன் EMAR ஹோட்டல் காபிய பத்தி சொன்னார். காலைல 5.30ல இருந்து 7.30 வரைக்கும் வாக்கிங் போறவங்க காபி சாப்பிட அங்க வர்றாங்க. அந்த நேரத்துல அங்க காபி சாப்பிடறவங்க எல்லாருக்கும் காபி 6 ரூபா தான். காபி பேரே வாக்கிங் காபி. காலைல 7.30க்கு அப்புறம் அதே காபி அதே அளவு 10 ரூபா.வாக்கிங் போறவங்கள உற்சாகப்படுத்தற இந்த வாக்கிங் காபி குடுக்கற EMAR ஹோட்டலைப் பாராட்டலாம். லாபம் கம்மியாயிருக்கும். இருந்தாலும் இது நச்.