Saturday, August 27, 2011

வெளிய போய் நில்லு - அஷூ

நேத்து திடீர்னு அஷூ வாத்தியார் அவதாரம் எடுத்துட்டார். ஸ்டூடண்ட்ஸ் .... வழக்கம் போல அமர் அண்ணனும் முனியப்பனும் தான்.

அமர் அவர் வாங்குன ராமாயணம் புத்தகத்த எடுத்துக்கிட்டு அஷி சாரோட கிளாஸ்க்கு வந்துட்டார்.

அமர்கிட்ட ராமாயணப் புத்தகம் இருக்கிறதப் பாத்த முனியப்பன், ஆர்வக் கோளாறுல அமரை கேள்வியால துளைச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டார். ராமரோட அப்பா பேர் என்ன ? சீதையோட அப்பா பேர் என்ன ? வாலி, சுக்ரீவன் யாரு, இப்படி பல கேள்விகள்.

அமரும் ராமர், மாயமான், வில்லை வளைச்சார் இப்படி புத்தகத்தப் பாத்துப் பாத்து சொல்லிக்கிட்டு வந்தார்.

அஷூ எப்பவும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றவர். அண்ணன் பதில் சொல்ல திணறுவதைப் பாத்துக்கிட்டு எப்படி சும்மா இருப்பார் ? ... பொங்கி எழுந்துட்டார்.

அஷூ சார் முனியப்பனைப் பாத்து, என்ன கிளாஸ் நடத்தவிடாம பேசிக்கிட்டு இருக்க. வெளிய போய் நில்லுன்னு அதட்டி ஒரு ஆர்டர் போட்டார்.

அஷூ சார் ஆர்டர் போட்ட பிறகு அமர் அண்ணனை எப்படி கேள்வி கேட்க முடியும் .... ?