Saturday, December 27, 2008

முனியப்பனும் குழந்தைகளும்

குழந்தைகளை முனியப்பனுக்குப் பிடிக்கும்
குழந்தைகளுக்கும் முனியப்பனைப் பிடிக்கும்

ஒரு விரல் நீட்டி, ஊசி போட்ட பின்
மிரட்டிய ஒன்றரை வயது சந்தியா சென்னையில்

ஊசிபோடு என்று தரையில்
உருண்ட மூன்று வயது பிரியா now BE

முனியப்பன் is a bad boy என்று
மூன்று பேப்பரில் எழுதிய
ஆறுவயது ராஜசூர்யா now BE

"Doctor loves children"
டக்கென எழுதிய ஜெயா I std Now +2

ஊசி போட்டபின் தாய் தந்தையை
உண்டு இல்லை என்றாக்கும் தீபிகா 2std.

போடுவதற்கு ஊசி எடுக்கும் வேளையில்
ஓடி escape ஆகும் ஒரு சில Boys

தனியாக வந்து
தனக்கென ட்ரீட்மென்ட் பார்க்கும்
முத்து சாரதா 4th std.

ஆஸ்பத்திரி சாலையில் திரும்பியவுடன்
அழுக ஆரம்பிக்கும் 2-3 வயசு குழந்தைகள்

அடிபட்டு தையல்போட
அலறும் குழந்தைகள்
அரட்டிய உடன்
ஆகும் கப்சிப்

ஆஸ்பத்திரி வரும் வழியில் வணக்கம் சொல்லும்
அருகிலுள்ள சிறுவர்கள்

கன்சல்டிங் கதவு திறந்தவுடன்
கண்சிமிட்டி சிரிக்கும் 4-8 வயசுகள்
கைகாட்டி டாட்டா காட்டும் 1-3 வயசுகள்
கையால் flying kiss கொடுக்கும் 1-2 வயசுகள்

சிறு பிள்ளைகளின் சிருங்கார
சிரிப்புக்கு ஈடு இணை இல்லை
கள்ளங் கபடமில்லா சிரிப்பில்
கலந்த ஒரு வெட்கம் காண்பது ஒரு சுகம்

கண்சிமிட்டி கைகுலுக்கி
கரமசைக்கும் சிறுபிள்ளைகளை
அனுதினம் கடப்பது
அசைபோடும் அனுபவம்

குழந்தைகள் பலவகை அந்த
குதூகலம் அனுபவிக்கக் கொடுத்த
...................................இறைவனுக்கு நன்றி

Monday, December 22, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் - டாக்டர் KP

செத்தும் சொல்லிக் கொடுக்கிறார் Anatomy - டாக்டர் KP

டாக்டர் K. பொன்னுச்சாமி, K.Pன்னா தான் தெரியும். உடற்கூறியல் துறைல பணிபுரிஞ்சார். இவர் மொதல்ல மதுரை மருத்துவக் கல்லூரியிலும், பிறகு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் Anatomy டிபார்ட்மென்ட்ல துணைப் பேராசிரியரா பணிபுரிஞ்சார். ரெண்டு எடத்துலயும் உள்ள உடற்கூறியல் துறைல உள்ள specimenகள்ல பாதி இவர் ஏற்படுத்துனது தான். மனித உறுப்புகளைப் பாதுகாப்பு திரவத்தில் போட்டு கண்ணாடி jarல் அடைத்து வைப்பது Specimen. ஒவ்வொரு பகுதியும் அழகா, மருத்துவ மாணவர்கள் படிக்கப் புரியற மாதிரி இருக்கும்.

இவர் specimen உண்டாக்குனது 40 வருஷத்துக்கு முன்னால. இன்னமும் ரெண்டு மருத்துவக் கல்லூரிலயும் இருக்கு. பாடம் சொல்லிக் கொடுக்கறதுலயும் மிகவும் தேர்ந்தவர். ரொம்ப சுலபமா புரியற மாதிரி சொல்லிக் கொடுப்பார். மாணவர்களிடம் கண்டிப்பானவர். அவருக்கும், துறை பேராசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன் பணியை ராஜினாமா செய்து வெளியேறினார். முனியப்பனுக்கு அவரிடம் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெளியே வந்த KP பாளையங்கோட்டை அசோக் தியேட்டர் அருகில் மருத்துவராகத் தொழிலை ஆரம்பித்தார். மிகவும் கம்மியான கட்டணம். 1 ரூபாய் 50 காசு. ஊசி போட்டு மாத்திரயும் குடுப்பார். அப்பொழுது இரவு நேரம் 10 லிருந்து 1 மணி வரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அனாடமி டியூசன் எடுப்பார். அந்த இரவுநேர வகுப்பில் முனியப்பனும் ஒரு மாணவன். ரொம்ப எளிதாக, சொல்லிக் கொடுப்பார். 3 மணி நேரமும் போரடிக்காது. பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வரும் நோயாளிகளையும் கவனிப்பார்.

அவர் இப்பொழுது இல்லை. அவர் கடைசியாக வாங்கிய தொகை ரூ. 5. கடைசி வரையிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உடற்கூறியல் கற்பித்து வந்தார்.

உடற்கூறியல் மீது அவர் கொண்ட அன்பின் அடையாளச் சின்னமாக இன்றும் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் அவர் உருவாக்கிய Anatomy specimens, இன்னும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உடற்கூறியல் சொல்லித் தருகின்றன. செத்தும் சொல்லிக் கொடுக்கிறார் Anatomy.

CASE SHEET (நுரையீரல் கல்யாணம்)

நுரையீரல் கல்யாணம் இல்லப்பா இது.

முனியப்பன் கிளினிக். காலைல 11 மணி இருக்கும். ஒரு 20 வயசுப் பொண்ண சிகிச்சைக்குக் கூட்டிகிட்டு வர்றாங்க. டாக்டர் டேபிள்ல அந்தப் பொண்ணு கைல தலய வச்சுப் படுத்துருது. உட்கார முடியல, 20 நாள் காய்ச்சலாம், மூச்சு வாங்குது. வேற எடத்துல ட்ரீட்மென்ட் பாத்துட்டு முனியப்பன்கிட்ட வர்றாங்க. "பொண்ணுக்கு 4 நாள்ல கல்யாணம். பத்திரிக்கை வச்சாச்சு. கல்யாண மேடைல உட்காரணும்' அப்படிங்கிறாங்க.

முனியப்பனுக்கு ஒரு ஒதறல். நம்மளால முடியுமான்னு. இருந்தாலும், எல்லா டெஸ்ட்டும் பண்ணி, ஸ்கேன் வரைக்கும் பாத்து வியாதி என்னன்னு கண்டுபிடிச்சர்றார். TBயால, ஒரு பக்க நுரையீரல் அவுட். ட்ரீட்மென்ட் கொடுக்குறார். காய்ச்சல் கொறையுது. பொண்ணு கல்யாண மேடைக்குப் போய் கல்யாணமும் முடிஞ்சிருது.

ரெகுலர் செக் அப்புக்கு வந்து வியாதிய சரி பண்ணி, நுரையீரல் பழைய செயல்பாட்டுக்கு வந்துருது. இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு 2 பையன்கள். 2ம் நார்மல் டெலிவரி.

பிழைக்குமா, முடியாதாங்கிற பொண்ணு இன்னைக்கு நுரையீரல் சரியாகி, நல்ல சுகமா இருக்கு.

சபாஷ் யாருக்கு ? ஒழுங்கா வைத்தியம் பாத்த அந்தப் பொண்ணுக்கா, டயக்னோஸ் பண்ணி ட்ரீட்மென்ட் குடுத்த நம்மாளு முனியப்பனுக்கா ? .................

Wednesday, December 17, 2008

அப்பா உன் நினைவலைகள்

தந்தையிடம் வளர்ந்த
தனயன் முனியப்பன்
தவழ ஆரம்பித்தவுடன்
தந்தையிடம் சேர்ந்தவன்

மழலைகள் வளர்வதைக் கண்டு
மகிழ்ச்சி அடைந்தவன் நீ
காய்ச்சல் முனியப்பனுக்கு
கைகோர்த்து பக்கத்தில் படுப்பாய் நீ
பறந்து விடும் காய்ச்சல்
மறுபடி வராது

வெள்ளம் சூலப்புரம் ஓடையில் மகனை
தோளில் தூக்கி வெள்ளத்தைக் கடந்தவன் நீ

இரு தோள்களில்
இரு மகன்களையும் தொங்க விட்டு
சுற்றி விளையாடிய
சூப்பர் தந்தை நீ

காலாண்டு அரையாண்டு விடுமுறைக்கு
கல்லுப்பட்டி போடி மதுரை
முழுப்பரீட்சை லீவுக்கு
மூணார் camp ஒரு மாதம்
அனுப்பி வைத்தவன் நீ விடுமுறையை
அனுபவித்தவர்கள் நாங்கள்

அச் அம்மா தும்முவார்கள்
அச் அப்பா தும்மியவன் முனியப்பன்

செல்ல வேண்டும் சுற்றுலா
சென்று வா
மருத்துவம் படிக்கணும்
மறுக்காத தந்தை நீ

உன்னிடம் பிடித்தது
உணர்வுடன் நீ கொடுத்த சுதந்திரம்
எதில் குறை வைத்தாய்
உன்னைக் குறை சொல்ல

பிள்ளை வளர்க்க
பிறருக்கு ஒரு ரோல் மாடல் நீ .................

Tuesday, December 9, 2008

முனியப்பன் - இருப்பு மருத்துவர்

Compulsory Residential Rotatory Inter nee - CRRI

முனியப்பனின் வசந்த காலம்
முழுநேர சேவையான CRRI
அவனுக்கென ஒதுக்கப்பட்ட நோயாளிகளை
அவன்தான் பார்க்கணும்

அவனுக்கு மேல் ஒரு Asst. Surgeon
அதற்கு மேல் Chief

முதலில்
முனியப்பன் ரவுண்ட்ஸ்
அடுத்து அசிஸ்டெண்டுடன்
அதுக்கடுத்து Chief உடன்

மூணு ரவுண்ட்ஸ் முடித்த
முனியப்பனுக்கு
கிடைக்கும் கேப்பில்
காலை உணவு

ஊசிபோட ஸ்டீல் ஊசி காலம்
ஊசி ஆஸ்பத்திரியில் எடுக்க மாட்டான்
ஊசி தனியாக ஒரு Needle Box-ல், தனி
ஊசி அவன் நோயாளிகளுக்கு மட்டும்

ஊசி போட்டு ட்ரிப் மாட்டி
ஊர் சுற்ற நேரம் இல்லாத காலம்
மூணு மணிக்கு முடியும்
முனியப்பன் வேலைகள்

மதிய உணவு
மதிய தூக்கம் கொஞ்ச நேரம்
முழித்தவுடன் மறுபடி
முனியப்பன் வேலைகள்
இரவு 9 மணிக்கு Free ஆகும்

இரவுப் பறவை
அப்புறம் கொஞ்சம்
ஆட்டம் பாட்டம்

அவ்வப் பொழுது வரும்
அவசர அழைப்புகள்
அட்டெண்ட் பண்ண
அர்ஜெண்டாகப் பறக்கும் முனியப்பன்

ICU Casuality
அயராமல் உழைத்த நாட்கள்
Accident ward Operation Theatre
அதற்காக அலைந்த வேளைகள்

பக்கத்திலிருக்கும் வீட்டிற்கு
பத்து நிமிடம் கூட செல்லாத காலம்
பாம்புக்கடி பாய்ஸன் கேஸ்களை
பக்கத்து கட்டிலில் படுத்துப் பார்த்த காலம்

ஒரு வருடம்
ஓடியது தெரியவில்லை
இப்பொழுதும் நினைவுக்கு வரும்
இனிமையான நாட்கள் ...................

80 வயது பெருசு

முனியப்பன் சந்திச்ச வித்தியாசமான கேஸ்

மதுரைல ஒரு பெரிய பணக்காரர், 80 வயசு. இவருக்கு சொத்து அதிகம். அவருக்கு என்ன ஆகுது ...., கோமாவுக்குப் போயிர்றார். அய்யாவத் தூக்கிட்டு முனியப்பன்கிட்ட கூட்டமா வர்றாங்க.

முனியப்பன் பெருச அட்மிட் பண்ணி உயிர் இருக்க மாதிரி Life line Support குடுக்குறார். மூளை பாதிச்ச ஆளுக்கு, அதுவும் 80 வயது பெருசுக்கு, பெருசா ஒண்ணும் செய்ய முடியாது. வந்தவங்க சொல்றாங்க "உயிர மட்டும் பிடிச்சு வச்சுக்குங்க (காப்பாத்த வேணாமாம்), ரிஜிஸ்ட்ரர் வர்றார், பத்திரத்துல எல்லாம் ரேகை வைக்கணும். "

அடப்பாவிகளா, உயிர் வேணும்ல கைரேகை வைக்கிறதுக்கு, செத்த பெறகு ஒண்ணும் செய்ய முடியாதுல்ல... 12 மணிக்கு ரிஜிஸ்ட்ரர் வருவார்னு எல்லாரும் ஒக்காந்திருக்காங்க.

மணி 11.30 பெருசு ஹார்ட் நின்னுருச்சு. எல்லாருக்கும் பக்குன்னு ஆயிருது. முனியப்பன் ஒடனே ஹார்ட்டுக்குள்ள Inracardiac adenalin அ போட்றார். கார்டியாக் மசாஜ் குடுக்கறார். பெருசுக்கு ஹார்ட்பீட் வந்துருச்சு, மூச்சும் விடுறார். Life செட் ஆயிருச்சு, எல்லாருக்கும் நிம்மதி.

மணி 12.00, மறுபடியும் Inracardiac adenalin, கார்டியாக் மசாஜ், உயிர் வருது.

மணி 12.15, ரிஜிஸ்ட்ரர் வர்றார். பெருசு கைய புடிச்சு கைரேகை வக்கிறாங்க, 20 - 30 பேப்பர்ல. 1.00 மணி, சுத்தியிருந்த கூட்டம் எல்லாத்தையும் காணோம். ரேகை வச்சாச்சுல்ல, வந்த வேலை முடிஞ்சிச்சுல. அப்புறம் எதுக்கு பெருசு ?, ஒரே ஒரு
வேலைக்காரம்மா மட்டும் இருக்கு.

சாயங்காலம் 8 மணி வரைக்கும் மூச்சு விடுற பெரிசு, மூச்சு 8.15 மணிக்கு மொத்தமா நின்ருச்சு. ரேகை வாங்க வந்தவன்கள்ல பாடிய வாங்க ஒருத்தன் மட்டும் 9.30க்கு வர்றான். ரேகை வாங்க வந்த கூட்டம் பாடி வாங்க வரலை.

உயிர் பெரிசா .... ? சொத்து பெரிசா .... ? போப்பா போ, புரியாத ஆளா இருக்க.

முனியப்பனும் மூணார் MIST ம்

நெஞ்சைத் தொட்டுச் செல்லும்
மஞ்சு மூட்டம்தான் MIST

தேனி தாண்டினால்
தெரியும் போடி மெட்டு
அதில் MIST இருந்தால்
அன்றைய தினம் ஆனந்தம்

MIST-க்குள் பயணம்
மனதிற்கு உற்சாகம்

மலரும் பொழுதின் MIST ம்
மயங்கும் பொழுதின் MIST ம்
ஆண்டவன் அளித்த வரம்
அங்கு இருப்பவர்களுக்கு

மூணாரே MIST தான் அதில்
மூன்று இடங்களில் கண்டிப்பாக MIST

முனியப்பனின்
MIST Valley
ராஜமலை MIST
ரசனையான cape road MIST

பத்தடி தெரியும் MISTக்குள்ளும்
பல அடி தெரியும் MISTக்குள்ளும்
பயணிப்பது ஒரு சுகம்
பயணம் fog lamp உடன்

முன்னால் ஒரு முறை நடந்து பார்த்து
பின்னால் காரைச் செலுத்தி
முரட்டுத்தனமான MISTக்குள்
மாட்டிய thriller நேரங்கள்

புல்லரித்த
புது அனுபவம்
மழைக்கு அடுத்து
மனம் கவர்வது MIST தான்

பள்ளி நண்பர்கள்

காணாமல் போன
கல்லூரி நண்பர்களுக்கிடையே
பழையதை மறக்காத
பள்ளி நண்பர்கள்

நீண்ட காலம் கழித்து
மீண்டும் பார்த்த பள்ளி நண்பர்கள்
முதுகைப் பார்த்து
முகம் கண்ட தனுஷ்கோடி
முப்பது வருடம் ஓடியும்
முதுகை மறக்காத தமிழ் வாத்தியார்

கைவிரல் காயத்துக்கு
கட்டுப்போட வந்த Mr. Ravi திருப்பூர்
கைக்காயத்தை மறந்து நண்பனை
காண பிடித்த காலம் 33 வருடம்

செண்டுவாரை சுரா
சினிமாவில் PRO
சந்தித்த காலம்
சற்றேறக் குறைய 32 வருடம் கழித்து

VIVA குடித்ததை 34 வருடம் கழித்து
விளக்கிய சிவநேசன் K.K. பட்டியில்

மன்னர் மன்னனைப் பார்க்கும் போது
கண்டக்டர் PRC- யில் 15 வருடம் போனபின்

பனிரெண்டு வருடம் கழித்து பார்த்து
இனிதாகத் தொடரும் நண்பர்கள்
அக்ரிகல்சர் ஆபிசர்
ஆண்டிபட்டி திலகர்
இரயில்வேயில் அஜிமுல்லாகான்
இராசாசி அரசு மருத்துவமனை Dr. சம்பத்
பத்துத் தூண் சந்து A.மோகன்

இப்போது கனடாவில்
திருத்தங்கல் வெங்கடேசன் - அவனிடம்
திருடிய தயிர்சாத தினங்கள்
ராஜேந்திரன் IOB யில் இன்னொரு
ராஜேந்திரன் அச்சம்பத்தில்

மிட்டாய் கடை ஜெகதீசன்
மிலிட்டரியில் சங்கர்
பள்ளி நடத்தும் ஈஸ்வரமூர்த்தி
பட்டும் படாத தலைமலையான் Dr.விஜயராஜ்

மதுரை வந்த 23 வருடமும்
இதுவரை அரணாக நிற்கும் White God வெள்ளைச் சாமி
நண்பர்களும் மறக்க வில்லை
நானும் மறக்க வில்லை

பள்ளி நட்பின்
பாசப்பிணைப்பு ஈடு இல்லாதது

ரம்ஜான் பிரியாணி

ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் முனியப்பனின் முஸ்லீம் நண்பர்கள் சிலர், ரம்ஜான் அன்னைக்கு செய்யும் பிரியாணியை முனியப்பனுக்கும் கொடுப்பாங்க. முன்னாடி நாலஞ்சு வீட்டுல இருந்து வந்த பிரியாணி, முனியப்பன் வீட மாத்திட்டதால, இப்ப இரண்டு பேர் வீட்டுல இருந்து மட்டும் ரம்ஜான் அன்னைக்கு மதியம் 2.30ல இருந்து 3 மணிக்குள்ள வரும்.

ரம்ஜான் அன்னைக்கு முனியப்பன் வீட்ல எல்லாருமே காலை சாப்பாடு லைட்டா வச்சுக்குவாங்க. முனியப்பன் காலைல சாப்பிட மாட்டான். மத்தியானம் பிரியாணி வருது, ரவுண்டு கட்டி அடிக்கணும்ல பிரியாணி நல்லாயிருக்கும். அதுலயும் பாய் வீட்டு பிரியாணி பட்டயக் கிளப்பும். பிரியாணி, தால்சா அப்புறம் தயிர் வெங்காயம், அவ்வளவுதான். இது போதாதா நம்மாளுக்கு .....

மத்தியானம் 3 பிளேட், சாயங்காலம் 1 பிளேட், நைட் 2 பிளேட், நடக்க முடியாத அளவுக்கு சாப்பிடுவார் முனியப்பன். முனியப்பனுக்கு 24 வருஷமா ஆரப்பாளையத்துல இருந்து பிரியாணி வரும். ஹபீப் பாய், மதுரை மாநகராட்சில வேலை பாக்கும் போது ஆரம்பிச்சி, இப்ப ரிடையர் ஆன பிறகும் அவர் வீட்ல இருந்து பிரியாணிய முனியப்பன் வீட்ல கொண்டு வந்து குடுத்துருவாங்க. இன்னைக்கு வரைக்கும் வந்துகிட்டு இருக்கு.

10 வருஷத்துக்கு முன்னால அவங்க வீட்ல இருந்து பிரியாணி வரலை. என்ன காரணம்னு புரியலை. 3 மாசம் கழிச்சு அவங்க வீட்ல இருந்து ட்ரீட்மெண்டுக்கு வர்றாங்க. அப்ப சொல்றாங்க அவங்க வீட்டு மருமகன் திடீர்னு இறந்துட்டார்னு. 32 வயசுக்காரர். பொண்டாட்டி, 3 பிள்ளைய தவிக்க விட்டுட்டு போய்ச் சேர்ந்துட்டார். முனியப்பன் இதயம் கனமாயிருச்சு.

Friday, December 5, 2008

பள்ளி விடுதி நாட்கள்

மறக்க முடியாத நாட்கள்
மறக்க முடியாத நினைவுகள்

காலை ஓட்டம், பின்னால்
கையில் பிரம்புடன் வார்டன்
காலை குளியல், அங்கும் வார்டன்
குளிக்க 4 விசில், கொடுமையய்யா கொடுமை

வகுப்பு மாறும் நேரத்தில்
வயிற்றில் மறையும் Day Scholor உணவுகள்
அடுத்தவன் உடையை
அணிந்த அழகான நாட்கள்

அன்னை தந்தை வரவை
ஆவலோடு எதிர்பார்த்த நாட்கள்
ஹோம் சிக்னஸ் நாட்கள்

கோஷ்டி சண்டைகள்
கண்களில் வேப்பம் பழத்தை பிழிந்து
கண்கள் சிவக்க வைத்து வீட்டுக்கு ........

பெல்ட் போட்டு ஷூ போட்டு
பிராசோ போட்டு பாலிஷ் ஏற்றி
NCC பரேடில்
நிமிர்ந்து நடந்த நாட்கள்

முறைப்பு, முரட்டு வார்த்தைகள்
முட்டல் மோதல், பின் நட்பு
நட்புக்கு இலக்கணம் வகுத்த
நண்பர்கள் ..............

அரசியல் மாற்ற காலத்தில்
அதிரடியாய் சாலையில் போர்க்களம்
உள்ளிருப்புப் போராட்டம்
உரிமைகளுக்காக உணர்வுகளுக்காக ..........

உரிமை, பேச்சு சுதந்திரம்
திரைப்படம் மாதம் ஒருமுறை
படிப்பு இல்லாமலா ............... ?
படிப்புதான் முக்கியமானதே


வெளி உலகம் அறிய ஆரம்பித்த நாட்கள்
வருங்காலத்தின் அடிப்படை நாட்கள்
பயமறியா பள்ளி நாட்கள்
பல காலம் கழித்தும் நினைவில் .....................................

Wednesday, December 3, 2008

Case Sheet (எங்கப்பா செத்துட்டார் ...... நீங்க இருக்கீங்க)

முனியப்பன்கிட்ட 42 வயதுக்காரர் ஒருத்தர் X, மூஞ்சி, கை, கால் வீங்கி வர்றார். செக் பண்ணி பாத்தா, இரத்த அழுத்தம், ஹார்ட் பெயிலியர். ஒடனே முனியப்பன் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இதயநோய் நிபுணர்ட்ட அனுப்புறார். அங்க பெட்ல
அட்மிட் பண்ணி, 5 நாள் வச்சிருக்காங்க. சுகமாகி வீட்டுக்கு X வந்துர்றார்.

சிகரெட் குடிக்கக் கூடாது. திரவ அளவு ஒரு நாளைக்கு 1 லிட்டர் உப்பு கூடாது. முட்டை, மட்டன் கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் Xக்கு. முனியப்பன் கிட்ட வருவார், செக் அப் பண்ணிக்கிருவார். நார்மலாயிருக்கும். Xன் பையன் 5 ஆம் வகுப்பு மாணவன். முனியப்பன் Xஅ அட்வைஸ் பண்ணும் போது கவனமா கேப்பான். முனியப்பன் X கிட்ட "நானும் ஹார்ட் பேஷண்ட் தான். உணவுக் கட்டுப்பாடு மாத்திரைல இருக்கேன்" அப்படிம்பார்.

ரெகுலரா வந்துக்கிட்டிருந்த X, அதுக்கப்புறம் ஆளைக் காணோம். திடீர்னு ஒருநாள் மூஞ்சி மொகரையெல்லாம் வீங்கி முனியப்பன்கிட்ட வர்றார். சிகரெட், திரவ உட்கொள்ளளவு கட்டுப்பாடு இல்லை, மாத்திரை சாப்பிடலை, மறுபடியும் முனியப்பன் இதயநோய் சிறப்பு மருத்துவர்கிட்ட Xஅ அனுப்பி வைக்கிறார், அட்மிட் ஆகி அஞ்சு மணி நேரத்தில் ஆள் அவுட்.

10 நாள் கழிச்சு டெத் சர்டிபிகேட் வாங்க வர்றாங்க, X மகனும், அம்மாவும். X மகன் முனியப்பன்கிட்ட கேட்டான்,

"ஒங்களுக்கும் இதய வியாதி, எங்கப்பா செத்துட்டார், ...... நீங்க இருக்கீங்க"

அவனோட மனசுல உள்ள தாக்கத்தை எப்படி சொல்றதுன்னு அவனுக்குத் தெரியலை.

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (அக்ஷ்யா ட்ரஸ்ட்டும், ராமய்யாவும்)

எல்லா ஊர்லயும் புகலிடமின்றி இருக்கும் புறக்கணிக்கப் பட்டோர் நிறையப் பாத்திருப்பீங்க.

இவங்கள்ல அதிகம் மனநிலை பாதிக்கப்பட்டவங்க தான். அவங்க பொறந்து வளந்த இடம் வேற. இப்ப இருக்க இடம் வேற. எதைப்பத்தியும் கவலை இல்லாம எதாவது ஒரு உடைல இருக்காங்க. அவங்க சாப்பிட்டாங்களா? என்ன செய்றாங்கன்னு யாரும் அக்கறை எடுத்துக்கிறதில்லை. திரும்பிக் கூட பாக்கிறது கிடையாது.

அதுக்குன்னு மதுரைல ஒருத்தர் பொறந்திருக்கார் பாருங்க....... அவர் பேரு கிருஷ்ணன். B.Sc., ஹோட்டல் மேனஜ்மென்ட் படிச்சுட்டு பெங்களூரில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்ல வேலைக்குப் போனார். போய்ட்டு லீவுல மதுரைக்கு வரும் போது ஒரு காட்சிய பாக்குறார்.

In June 2002, While coming down the bridge near Periyar Bus stand, Madurai, Krishnan lost himslf totally on seeing a horrifying condition of a man eating his own excreta. When Krishnan realised, the old man was suffering from acute hunger, then he bought food & offered. The man held Krishnan's hands which passed on high voltage energy.

கிருஷ்ணன் பெங்களூருவுக்குப் போறார். மனசுல அசை போடுறார். வேலை பாக்க முடியலை. மனசுக்குள்ள மணி அடிக்குது. This is not your place. Your job is to look after the needy and deserving hungry.

கிருஷ்ணன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு, மதுரைக்கு வந்து, புறக்கணிக்கப் பட்டோருக்கு உணவு வழங்க ஆரம்பிச்சார். மொதல்ல வெளிய ஹோட்டல்ல வாங்கிக் குடுத்தார். அப்புறம் தானே சமையல் பண்ணி குடுக்க ஆரம்பிச்சார். வேன்ல போய் சாப்பாடு குடுக்கிறார். ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பாடு 2003 ல இருந்து...

செப்டம்பர், 2007ல் இருந்து 3 வேளை சாப்பாடு 200 பேருக்கு, அவங்க இருக்க இடத்துக்கு மாருதி ஆம்னி வேன்ல போய் குடுக்குறாங்க. ஒருநாள் செலவு ரூ. 8000 ஆகுது. பொருளாதார உதவி நிறைய பேர் செய்றாங்க.

கிருஷ்ணன் ஒரு சமையல்காரர். ரெண்டு உதவியாளர்கள், ரெண்டு பெண் ஆயாக்கள், ரெண்டு டிரைவர்கள் இதான் அவங்க டீம்.

மூணு வேளை சாப்பாடும் நேரம் தவறாம, பிரேக் இல்லாம குடுக்குறாங்க. முழுநேர வேலையே இதான். அவரோட

ஈ மெயில் : ramdost@sancharnet.in
வெப்சைட் : www.akshayatrust.org


ராமய்யா


மதுரைல இவரும் பொது சிந்தனை உள்ளவர். அக்ஷயா ட்ரஸ்ட் சாப்பாடு குடுக்குறாங்க... நாம டீ குடுப்போமே அப்படின்னு யோசிச்சார். சைக்கிள்ல தலைல ஒரு தொப்பி, கண்ணாடியோட இவர நீங்க காலைல 6.30க்கு ஒருத்தருக்கு டீ ஊத்தி குடுத்துகிட்டு இருக்கறதப் பாக்கலாம். 01.01.2006ல இருந்து சொந்தக் காசுல டீ வாங்கி, கெட்டில்ல கொண்டு போய், கொறைஞ்சது இருபது பேருக்கு குடுக்குறார். ஒரு நாள் செலவு ரூ. 50 (ஐம்பது) மட்டும். இவர் BSNL ஊழியர். டீ ஊத்திக் குடுத்துட்டு வேலைக்குப் போயிடுவார். ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை.ராமய்யா, 11, சுந்தரம்மாள் இல்லம், கிழக்குத் தெரு, பொன்மேனி, மதுரை - 16
மொபைல் : 94428 82911

ரெண்டு பேர்ல யார் சிறந்தவங்க .. கிருஷ்ணனா ? .... குசேலனா ? அப்படின்னு பட்டி மன்றம் வேண்டாம்.

ரெண்டு பேரும் சமூகச் சிந்தனையோடு, எந்த வித பிரதிபலனும் இல்லாம செயல்படுறாங்க. இவங்களோட உதவி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்டோ ருக்குத் தான் போய்ச் சேருது. பிச்சைக்காரர்கள், மனநிலை நன்றாக உள்ளவர்கள், உழைக்கக் கூடியவர்கள் இவர்கள் list ல் கிடையாது.

Monday, December 1, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (60 வயசு பெருசு)

ரொம்ப நாளாச்சா ....... ஹி ஹி

முனியப்பன் நோயாளிகளுடன் நன்றாகப் பழகக் கூடியவர். அதுனால அவர்கிட்ட பெர்ஸனல் விஷயங்களையும் சிலர் பேசுவாங்க.

அப்படி ஒருத்தர்தான் 60 வயசு நம்மாளு. இவரு ஒரு நாள் முனியப்பன் கிட்ட அசதிக்கு ஊசி போட வந்தார். ஊசி போடுறதுக்கு முன்னாடி சிரிச்சிக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சார். அவரு சம்சாரமும் பக்கத்துல இருக்காங்க. "நேத்து ராத்திரி தூக்கம் வரலயா ...... ரொம்ப நாளாச்சா ....." இன்னும் கொஞ்சம் சிரிச்சார். தன்னுடைய மனைவிகிட்ட, உறவு வச்சுக்கிட்டத சொல்லாமல் சொன்னார்.

எவ்வளவு நாகரீகமாக, இயற்கையான ஒரு விஷயத்தை, நம்மாளு சிம்பிளா சொன்னார் பாத்திகளா ..... ?

முனியப்பனின் அதிகாலை

விடியும் நேரம்
விழிப்பவன் முனியப்பன்
காலை எழுந்த உடன்
காபி காலைக் கடன்

புத்துணர்வுக்காக
புறப்படுவான் நடை பயிற்சிக்கு
விடிவதற்கு முன் கிளம்பினால்
விடிய ஆரம்பிக்கும் போது திரும்புவான்

பரபரப்பு இல்லா நேரத்தில்
பால்கேனுடன் பால் காரர்கள்
போக்குவரத்துக் கழக
பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்
வீட்டு வேலைக்குச் செல்லும்
வேலைக்கார மகளிர்
காய் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்
காய்கறி விற்கும் பெண்கள் கூடையுடன்

அதிகாலை இவர்களுக்கு மட்டுமா ......... ?

அதிவேகமாக ஓடும் விளையாட்டு வீரர்கள்
உடல் மெலிய நடப்பவர்கள்
உடல் வியாதிக்காக நடப்பவர்கள்
உடல் நலத்துக்காக நடப்பவர்கள்
உடல் உறுதிக்காக நடப்பவர்கள்

நடைபயிலும் பெருசுகளின்
நடைபாதை சாமி தரிசனம்
தொலைவில் இருக்கும் தொழிற்சாலைக்கு
காலையில் செல்லும் தொழிலாளர்கள்

மாணவர்கள் இல்லாத காலையா
மாணவர்களின் சைக்கிள் பயணம்
நல்ல மார்க் வாங்க
நல்ல மேற் படிப்புக்காக காலை டியூசன்
இத்தனை பேரைக் ........... கடந்து
......................................புத்துணர்வுடன் முனியப்பன்

யானை - ஹெர்னியா - முனியப்பன்

குடலிறக்கம்ங்கிறது ஹெர்னியா. சாதாரணமா, Indirect inguinal Hernia தான் அதிகம். அடுத்து Direct inguinal Hernia.

அதுக்கப்பறம் அறுவை சிகிச்சை செய்த இடத்துல வரும் Incisional Hernia, அதுக்கடுத்து தொப்புளில் வரும் Umbilical Hernia, மிக அபூர்வமாக பெண்களுக்கு Femoral Hernia.

நம்ம பேஷண்ட் X, திருநெல்வேலி. ஒரு கோயிலுக்கு பக்கத்தில நிக்கிறார். அந்த வழியா அந்தக் கோயில் யானை வருது. வர்ற யானையை சீண்டுறார். யானைக்கு என்ன செய்யத் தெரியும் .. ? X - ஐத் துதிக்கையால தூக்கிக் கீழே போட்டு வயித்துல ஒரு மிதி. யானை அதுக்கு மேல X - ஐ எதும் செய்ய விடாம யானைப் பாகன் கொண்டு போறார்.

X - ஐத் தூக்கி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு (TVMC Hospital) கொண்டு வர்றாங்க. அவசரப் பிரிவுல அட்மிட் பண்றாங்க.

அறுவை சிகிச்சை யூனிட்ல இருந்து வந்து X ஐப் பரிசோதிக்கிறாங்க. X வயித்துல யானை மிதிச்சதுல குடலைப் பாதுகாக்கக் கூடிய அப்டாமினல் சதைகள் கிழிஞ்சு Traumatic Hernia. காயத்தினால் ஹெர்னியா. அறுவை சிகிச்சை யூனிட்ல நம்ம
முனியப்பனும் ஒருத்தர்.

X க்கு ஆப்பரேஷன் பண்ணி ஆப்பரேஷன் சக்சஸ். பேஷண்டும் நல்லா சுகமா அவர் வீட்டுக்குப் போறார். வித்தியாசமான கேஸ் இத மாதிரி எங்க கெடைக்கும் ? இந்த கேஸப் பத்தி நம்மாளு முனியப்பன் தயார் பண்ணி ஒரு டாக்டர் மீட்டிங்லயும் பேசி அசத்திர்றார்.

கோயில் யானைய சீண்டுனா அதுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

மாரல் கிளாஸ்

மாரல் கிளாஸ்

மாரல்னா நல்லொழுக்கம். இதப்பத்தி ஸ்கூல்ல வாரத்துக்கு ஒரு பீரியட் கிளாஸ் எடுப்பாங்க. இப்ப அந்த வகுப்பு கிடையாது. ஸ்கூல் Time Table ல மட்டும் மாரல் கிளாஸ் இருக்கலாம்.

அடிப்படையா மனிதனுக்கு ஒழுக்கம் தேவை. அதை சொல்லிக் கொடுத்து, சமுதாயத்துல நல்ல நிலமைக்கு வர்றதுக்கும், சமுதாயத்துக்கு பயன்படர்றதுக்கும், சமுதாயம் நல்லா இருக்க உழைக்குறதுக்கும் தான் மாரல் கிளாஸ்.

இப்ப இருக்குற சுயநலமான ஒலகத்துல, சமுதாயம் எப்படி இருந்தா ... ? எவன் எப்படி போனா என்ன ...? அப்புறம் எதுக்கு மாரல் கிளாஸ். நியாயமான சிந்தனை. ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஒரு ஓரத்துல ஈரம் கசியுது.

முனியப்பனின் மழைக் காலங்கள்

இரவுப் பறவை முனியப்பனுக்கு
இரவு மழை பிடிக்கும்
பணிக்கு இடையூறு இல்லை
பணி முடிந்த நேரம் பெய்யும் மழை
ஊர் சுற்ற
உல்லாசமாகத் திரிய
மனசைத் தூண்டும்
மனம் போன போக்கில்
மழையில் நனைந்த
மழைக் காலங்கள் மறக்காதவை
மேல வெளிவீதி ரயில் நிலையம்
முழங்கால் தண்ணீரில்
மோட்டார் பைக் சைலன்சர்
முங்காமல்
ஆக்சிலேட்டரை அழுத்தி
அசத்திய காலங்கள்
கட்டபொம்மன் சிலை பக்கம்
உருட்டி வரும் டூ வீலருக்கு
ஸ்பார்க் பிளக் கிளீன் பண்ணும்
ஸ்மார்ட்டான திடீர் மெக்கானிக்குகள்
தண்ணீர் ஓடும் தெற்கு மாசி வீதி
தப்பாத சிம்மக்கல்
தண்ணீர் புரண்டோ டும் இடங்களில்
தவறாமல் சீறிப் பாய்ந்த காலங்கள்
முனியப்பன் வண்டியில்
முழுவீச்சில் சுற்றிய பருவங்கள்
கண்ணை மறைக்கும்
கடுமையான மழையிலும்
உற்சாகமாக வண்டி ஓட்டி
உடை நனைந்து
உடைமைகள் நனைந்து
உடல் நனைந்து
தலை நனைந்த
நனைந்த உடையோடு இன்னும்
நனைய கடை காபி
இன்னும் கொஞ்சம் சுற்றி
இனி முடியாது போதும்
வழியும் தண்ணீரை
வடிய விட்டு
வீட்டில் நுழைய
துவட்ட துண்டோ டு தாய்
சொத சொத உடையை மாற்றி
கதகதப்பாக காபி
உடல் வலி
உபயம் மழை
அந்த சுகம்
அடுத்த ஒரு மழை நாளில் ..............

Monday, November 24, 2008

காதல் போஸ்ட்மார்ட்டம்

டெட் பாடிக்குத் தான் போஸ்ட்மார்ட்டம்
டெட்பாடி காதல் தோல்வியும்தான்

என் சட்டையில் .....
உன் நெற்றிக் குங்குமம்
என் புஜத்தில் .....
உன் பிச்சிப்பூ வாசம்

ஏன் நெருங்கிப் பழகினாய்
என்னை ஏமாற்றவா .... ?
உன் முதுகின் மச்சம் காட்டிய நீ
என் முதுகில் குத்தி விட்டாயே

என்னிடம் எதைக்கண்டு
என்னைக் காதலித்தாய் .... ?
என்னை நாசம் பண்ணவா
இன்னொருவர் சொல் கேட்டா

உன்னைப் பெண் கேட்க
என் வீட்டார் வரவில்லை
உன்னைப் பெண் கேட்டு
உன் வீட்டிற்கு நான் வந்தேனே

ஏன் என்னை ஏமாற்றினாய்
என்னைப் பித்தனாக்கவா .....?

சென்னை முகவரி கொடுத்தாய்
உன்னை அழைக்க ஆள் அனுப்பினேன்
விதி விளையாடியது அன்று
வீரமங்கை இந்திரா மரணம் - கலவரம்

காலம் கோழைகளுக்காக அல்ல
காலம் துணிந்தவனுக்குத் தான்

அன்றைய தவறை
இன்று உணர்ந்திருப்பாய்
ஏழையாயிருந்தாலும்
கோழையா யிருக்காதே

காதல் துரோகி இல்லை நீ
காதல் கோழை நீ

Tuesday, November 18, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (குடிகாரன் - நம்பர் 1)

இவர் குடிகாரர்களில் நம்பர் 1 ஆ செலக்ட் பண்ண காரணம் இருக்கு.

இவர் ஒரு கரைவேட்டி மந்திரியின் மைத்துனர். மந்திரி இவருக்கு லாரியெல்லாம் வாங்கிக் கொடுத்தார். லாரிய வச்சு இவர் என்ன பொழைக்கவா போறார். குடிச்சே லாரியக் காலி பண்ணிட்டார்.

அப்பப்ப முனியப்பன் கிட்ட வருவார். 30 ரூபாய் வாங்கிட்டுப் போவார். எங்க? குடிக்கத்தான். இப்படியே போய்க்கிட்டிருந்துச்சா;

ஒரு நாள் காலைல 6.30க்கு முனியப்பன் வீட்டுக்கு வந்தார். முனியப்பனைப் பாத்த ஒடனே அழுக ஆரம்பிச்சார். "என் மக செத்துப் போச்சுன்னார்." வாங்கன்னு சொல்லி அவரை டூவீலர்ல பின்னால ஒக்கார வச்சு முனியப்பனும் கூடக் கெளம்பினார். பொறவு கேதம்ல.

பெரியார் பஸ் ஸ்டாண்ட், கட்டபொம்மன் ரவுண்டானா வந்ததும், வண்டிய நிப்பாட்ட சொல்லி, "மாலை வாங்க ரூவா குடுங்க"ன்னு கேட்டு 50 ரூவா வாங்கிட்டுப் போனவரு .... போனவரு தான்.

முனியப்பன் 15 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு கெளம்பி போயிட்டாரு. 3 மாசம் கழிச்சு முனியப்பன் ஆபிசுக்கு மேற்படியான் வந்தாரு. மொதல்ல அவருக்கு ஒரு அடியப் போட்டாரு முனியப்பன்.

குடிக்க காசு வேணும்கிறதுக்காக தன்னோட மகள் செத்துப்போயிட்டதா சொல்லி காசு வாங்கினார் பாருங்க. குடிப்பழக்கம் மனுஷனை எப்படில்லாம் பேச வைக்குது பாருங்க... குடிக்க ஒரு காரணம் மக செத்துப் போயிட்டா. கொடுமைடா சாமி ......

முனியப்பன் ஓபனிங் பேட்ஸ்மேன்

முனியப்பன் ஸகூல் நாட்கள்ல தான் கிரிக்கெட்டப் பரவலா விளையாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு இருக்க கிரிக்கெட் பைத்தியத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதுல முனியப்பனும் ஒருத்தர்.

பள்ளிக்கூடம் லீவு விட்டா போதும். கிரிக்கெட் ஸ்டெம்ப், மட்டை, பந்து எடுத்துக்கிட்டு முனியப்பன் கோஷ்டி கெளம்பிடும்.

அவர் சொந்தக் கிராமத்துக்கு லீவுக்குப் போவார். அங்கயும் 40 வருஷத்துக்கு முன்னாடியே கிரிக்கெட் விளையாட்ட ஆரம்பிச்சு வச்சுட்டார். முனியப்பன் ஒரு ஆல்ரவுண்டர். மட்டையும் அடிப்பார், பந்த வீசி விக்கட்டையும் சாச்சிருவார். முனியப்பனின் கிரிக்கெட் கூட்டாளிகளில் ஒருவர் இடது கை ஆட்டக்காரர் உலக நாயகன்.

முனியப்பன் விளையாடுற நேரம் மட்டும் தான் விளையாடுவார். மத்தபடி படிக்கப் போயிருவார். ஸ்கூல் முடிச்சு காலேஜ்க்கு போனார். காலேஜ் டீம்ல செலக்ட் ஆயி 'அவுட்' ஸ்டாண்டிங் பேட்ஸ்மேனாயிட்டார். அதாங்க மேட்ச்ல விளையாடாம வெளிய நிப்பாங்களே அவுட் ஸ்டாண்டிங் அதான். அதுக்கப்புறம் முனியப்பன் சீரியஸா படிக்க ஆரம்பிச்சார்.

மறுபடியும் கிரிக்கெட் வெளையாட ஒரு சந்தர்ப்பம் கெடைச்சது. காலேஜ் ஸ்போர்ட்ஸ் மீட்ல ஒரு அணிக்காக வெளையாண்டார். இவர் தான் ஓபனிங் பேட்ஸ்மேன். பேட் மாட்டி, கார்டு மாட்டி, ஸ்டம்ப் முன்னாடி நின்னு சுத்தி ஃபீல்டிங் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பாத்துட்டு மொத பந்த எதிர் கொண்டார். வந்தது யார்க்கர். அண்ணன் என்ன செய்வாரு, அவுட் தான்.

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (பாதுகாப்பான உடலுறவு)

உடலுறவை எப்படி பாதுகாப்பா வச்சிக்கணும்கிற டாபிக் இல்லை இது.

டாக்டர் எக்ஸின் நோயாளிகள் ஒரு தம்பதி. திரு & திருமதி என அப்படி வச்சுக்குவோம்.

திரு என்ன பண்றார் ?. இன்னொரு பொம்பளயோட தொடர்பு வச்சிக்க ஆரம்பிக்கிறார். இது ரொம்ப நாள் நடக்குது. யாரும் திருமதி கிட்ட இதப்பத்தி சொல்லல. ஏன்னா குடும்பம் கெட்டுப் போயிரும்ல.

இப்படியே போய்க்கிட்டிருக்கும் போது திரு ரெண்டு மூணு கிரிமினல் கேஸ்ல சம்பந்தப்படறார். நீதிமன்றத்தில் அவரோட உயிருக்குப் பாதுகாப்பாக ஒரு போலீஸை நியமிக்க உத்தரவு போடுறாங்க. 24 மணி நேரமும் திருவுக்கு பாதுகாப்பாக ஒரு போலீஸ் கூடவே இருக்காங்க.

திரு போலீஸ் பாதுகாப்போட செட்டப் வீட்டுக்குப் போய்ட்டு வர்றார். பாதுகாப்பு போலீஸ் ஒருத்தர் மனசு கேக்காம திருமதி கிட்ட விஷயத்தை சொல்லிர்றார். பிறகு கேக்கனுமா கலவரத்தை. செட்டப் வீட்டுக்கு போற திருமதி ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சா தெருவே நாறுது.

பிறகு ஒருநாள் திரு & திருமதி டாக்டர் கிட்ட வர்றாங்க. கிளினிக் வாசல்ல திரு, திருமதியை டூ வீலரை விட்டு இறக்கி விடுறார். திருமதி திருவை சத்தம் போடுகிறார். 'டேய் ஒன்னை வெட்டிக் கொல்லாம விட மாட்டேன்டா'. திரு டூ வீலரை எடுத்துப் பறக்கிறார்.

டாக்டர் எக்ஸ் திருமதியை அமைதிப் படுத்துகிறார். அப்பொழுது திருமதி செட்டப் விஷயம் தனக்கு இப்பொழுது தான் தெரியும் என்று சொல்லி நடந்த விவரங்களைக் கூறுகிறார். சொல்லி முடித்து 'பாதுகாப்பான உடலுறவு' என்று போலீஸ் துணையுடன் திரு செட்டப் வீட்டுக்கு சென்று வந்ததைக் கூறினார். போலீஸ் பந்தோபஸ்து எதுக்கு யூஸ் ஆகியிருக்கு பாருங்க !

Saturday, November 15, 2008

முனியப்பன் இதுவரை

முளைத்து மூணு இலை விடும்போதே
முன்னேற்றத்திற்கு சுழிபோட்டவன்
முனியப்பன்
படிக்க நினைத்த தொழிலை
படித்தான்
கேட்ட தெல்லாம் கிடைத்தது
தொட்ட தெல்லாம் துலங்கியது
காலம் மாறியது
காட்சிகள் மாறின
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்ட வில்லை
காதலி கிடைத்தாள்
காதல் தோற்றது
கல்யாணம் இன்னொருத்தியுடன்
கலங்க வைத்த மரண அடி
அடுத்தடுத்த இடிகள்
ஆளை அமுக்கின

வாழ்க்கை ஆரம்பிக்கையில்
வழுக்கி விழும்போது
வந்த வழியும் தெரியாது
போற வழியும் தெரியாது
பித்துப் பிடித்தும்
சித்தம் கலங்கவில்லை
தோல்வியில் துவண்டாலும்
தொழிலில் தொய்வடைய வில்லை
மக்கள் பணியல்லவா
மகேசனுக்கு ஆற்றும் தொண்டல்லவா
இதயத்தை அறுக்க நினைத்தவன்
இதயம் பிளந்தது
கனவுகளோடு வளர்ந்தவன்
கனவுகள் கல்லறைக்குப் போயின
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதில்
காணாமல் போனான்
களவாணி முனியப்பன்
வெள்ளத்தில் சிக்கியவன்
பள்ளத்தில் சிக்கவில்லை
மூச்சு முட்டும் நேரம்
முதலுதவி கிடைத்தது
கைப்பற்ற கிளையொன்று
கைக் கெட்டும் தூரத்தில்
உடன் பிறந்தவள்
உடன் பிறந்தவனை தவிக்கவிடவில்லை
தங்கை பிள்ளைகள்
தவறாமல் பிறந்து தாய்மாமனை
நிலைக்கு கொண்டு வந்தன
தன்னிலை அடைந்தான்
மாளிகை கட்ட முடியாதவன்
மாளிகை கட்டும் முடிவை
மாற்ற வில்லை
காற்று மாறி வீசும்
கடமையைச் செய் என
காலத்திற்காக காத்திராமல்
படித்த தொழிலில்
பயணத்தை நிறுத்தாமல் தொடர்கிறான்

Some people
Stand the test of time
So did Muniappan

Thursday, October 30, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

நேரு
நேருன்னு பேரைப் பாத்த உடனே மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவ நெனச்சுராதீங்க.

இவர் பேர் நேரு வயது 50 ரொம்ப வித்தியாசமான ஆள்

1990 ல எம்.ஏ பி.எட். (ஆங்கிலம்) படிச்சு முடிச்சார். ஒடனே அரசாங்க வேலை கெடைக்குமா? கெடைக்கலை பிரைவேட் ஸ்கூல்லயும் சம்பளம் கம்மி. என்ன செய்றார் பாருங்க. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துல மதுரைல பஸ் கண்டக்டர் ஆயிர்றார். பஸ்ல ஒடிக்கிடடே வாழ்க்கயை ஓட்டுறார்.

கண்டக்டராயிருந்துகிட்டே பல்வேறு எடங்கள்ல டீச்சர் வேலைக்கு அலையறார். ஒரு எடத்துலயும் கெடைக்கல. அரசாங்க வேலைக்கு ஆங்கில ஆசிரியரா 3 பேரை எடுக்குறாங்க. அதுல எம்ப்ளாய்மெண்ட் சீனியாரிட்டி இல்லாததுனால அப்பவும டீச்சர் வேலை மிஸ்ஸாகுது. ஒரு வழியா 2004ல TRB பரீட்சை எழுதி அதுல செலக்ட் ஆகி 2005ல வாத்தியார் வேலைல சேந்துர்றார்

அவர் வேல பாக்கற இடம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிளாக்ல மாணிக்கம்பட்டி கிராமத்துல பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல்ல ஆங்கில ஆசிரியரா வேலை பாக்குறார். பிஆர்சில பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிகிட்டு கிருந்தவரு தொகுப்புஊதியமா 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்கு சேந்து இப்ப வழக்கமான சம்பளம் வாங்குறார். 2005ல அரசு வேலைக்கு சேந்ததுனால அரசாங்க ஓய்வூதியம் கெடையாது. (2004ல இருந்து அரசாங்க வேலைக்கு சேர்றவங்களுக்கு அரசு ஓய்வூதியம் கெடையாது. கான்ட்ரிபியூட்டரி ஓய்வூதியம் தான்).

பொருளாதார இழப்பு இருக்கும்போது ஏன் ஆசிரியர் வேலைக்கு சேந்தீங்கன்னு கேட்டா நான் ஆசிரியராறதுக்குன்னு படிச்சேன். நான் கற்ற பாடத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கறதுல சந்தோஷப்படுறேன். ஆசிரியர் வேலைல எனக்கு மனசு திருப்தி கெடைக்குதுங்கறார்.

இவர் பேர் கருப்பு. இவரும் அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் தான். படிப்பு எம்.ஏ எம்.பில் எம். எஸ்சி. பி.எட் இவரும் ஆசிரியர் வேலை கெடைக்காம கண்டக்டர் வேலைல சேந்து அரசு ஆசிரியராகணும்னு முயற்சி பண்ணி கிட்டிருக்கார்.

இப்ப TRB வந்திருக்கு கருப்பு என்ன ஆனார்னு தெரியலை.

அரசு ஆசிரியராகனும்ற ஆசைய நிறைவேத்துன திரு.நேருக்கும் ஆசைப்படுற கருப்புவுக்கும் எனது சல்யூட்.

முனியப்பனும் மூணார் யானையும்

முனியப்பன் தாத்தா மூணார்ல சாராயம் வித்த காசுல ஏலக்கா தோட்டம் ஒண்ணு வாங்கிப் போட்டாரு அது இப்ப முனியப்பன் கிட்ட இருக்கு மதுரைல இருந்து வருஷத்துக்கு ஒரு தடவை ஏலத் தோட்டத்த போய் பாத்துட்டு வருவாரு முனியப்பன்.

வரையாடு (Nilgiri Thar)

அவர் தாத்தா சின்ன தாத்தா காலத்துல மூணாறுக்கு பஸ் கெடையாது. நடந்துதான் போகணும். நடந்து போறப்ப யானை பக்கத்துல வரும் ஏலத் தோட்டத்துக்கும் யானை வரும். அதனால முனியப்பன் சின்னப் பிள்ளயா இருக்கப்ப கதை சொல்றப்ப யானைக் கதையும் நெறய சொல்லுவாங்க யானை முனியப்பன் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.


அதுனால முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய தேடிப்போய் பாத்துட்டு வருவார்.
2000த்தில மாட்டுப்பட்டி டேம்ல போட்டிங் போனார் முனியப்பன ஒரு கோஷ்டியோட. சாயஙகால நேரம. ஸ்பீட் போட் ஒடடுறவர். யானை அங்க தண்ணி குடிக்குதுன்னு ஒரு எடத்துக்கு கூப்பிட்டு போனார். தூரத்துல யானை தெரியுது. கரைல இருந்து காட்டுக்குள்ள போக மேல ஏற ஆரம்பிச்சிருச்சு போட் யானைய நெருங்க ஆரம்பிச்சது. மொத்தம் 3 யானை ஒரு குட்டி ரெண்டு பெரிசு. முனியப்பன் ஜாலியாய்ட்டாரு. கேமாரவ வச்சு போட்டா எடுக்க ஆரம்பிச்சாரு. ஸ்பீட் போட் கரைய ஒட்டி நின்ன ஒடனே படகு ஓட்டுநர் என்ஜினை ஆப் பண்ணிட்டார். மேல காட்டுக்குள்ள போன யானை திரும்பி நின்னுச்சு. 3 யானையும் சத்தம் போட்டுச்சு பாருங்க போட்ல இருந்த எல்லாரும் கடவுளே காப்பாத்து முருகா காப்பாத்துன்னு கத்த ஆரம்பிச்சாங்க. யானைக்கு கோபம் வந்தா வாலை ஸ்ட்ரெய்ட்டா தூக்கும். 2 யானை வாலை ஸ்ட்ரெய்ட்டா தூக்கிருச்சு. 3 யானையும் மேட்ல இருந்து முனியப்பன் இருந்த போட்டுக்கு இறங்க ஆரம்பிச்சுது.

முனியப்பனை முறைக்கும் காட்டு யானை

எல்லாருக்கும் இருதயம் ஒரு செகன்ட் நின்னுச்சு. படகு ஓட்டுநர் என்ஜினை ஆன் பண்ணி படகை ரிவர்ஸ் எடுத்தார். எல்லாருக்கும் அப்பத்தான் மூச்சு வந்துச்சு யானை வெரட்டின பிறகும் யானை பாக்க போறத முனியப்பன் இன்னும் விடவில்லை.

இந்தியாவும் ஒலிம்பிக்சும்

இந்தியாவும் ஒலிம்பிக்சும்

ஒலிம்பிக்ஸ்ங்கிறது உலக அளவுல 4 வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிற விளையாட்டு போட்டி. எல்லா நாட்டு விளையாட்டு வீரர்களும் தங்களோட திறமைய நிரூபிக்க வாய்ப்பு உள்ள ஒரு போட்டி

உலகத்தில இரண்டாவது ஜனத்தொகை உள்ள நாடு நமது இந்தியா அப்ப விளையாட்டு போட்டில எங்க இருக்கணும்? டாப்ல எப்படி நம்ம ஆளுக இருப்பாங்க நம்ம கௌரவம் என்னாறது!

இதுவரைக்கும் நடந்த ஒலிம்பிக் போட்டிகள்ல ஒவ்வொரு ஒலிம்பிக்லயும் ஒரே ஒரு பதக்கம்தான் பெற்று வந்தாங்க. ஹெல்சிங்கி ஒலிம்பிக்ல மட்டும் ஹாக்கில தங்கமும் மல்யுத்தத்துல வெண்கலம் என இரண்டு பதக்கங்கள். இப்ப பீஜிங் ஒலிம்பிக்ல அயினவ் பிந்த்ரா தங்கம் சுஷில்குமார் மற்றும் விஜேந்தர் தலா ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை பெற்று சாதித்திருக்கின்றனர். ஒண்ணுல இருந்து மூணு பதக்கம் வாங்கினதுக்கே நம்ம ஆளுகளுக்கு பெருமை தாங்கல

ராஜ்யவர்தன் ரதோர் துப்பாக்கி சுடுறதுல வெள்ளியும், கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதல்ல வெண்கலமும், டென்னிஸ்ல வெண்கலமும் வாங்கியிருக்காங்க. தனி நபர் பதக்கங்கள் இவ்வளவுதான். ஹாக்கில தான் வரிசையா தங்கப் பதக்கங்கள். யார் கண்ணு பட்டுச்சோ பீஜிங் ஒலிம்பிக்ல விளையாட ஹாக்கி அணி தகுதி பெறவில்லை.

தடகளத்தில ஒலிம்பிக்ல இந்தியா பெற்ற சிறப்பான இடம் மில்கா சிங் (பறக்கும் சீக்கியர்) 100 மீட்டர் ஆண்கள் ஓட்டத்துல 4வது இடமும் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா 100 மீட்ட பெண்கள் ஓட்டத்துல 4வது இடமும் பெற்றிருக்காங்க.

மொதல்ல பீஜிங்ல துப்பாக்கி சுடுறதுல தங்கம் வென்ற அவினவ் பிந்த்ரா விற்கும் மல்யுத்தத்துல வெண்கலம் பெற்ற சுஷீல் குமாருக்கும் குத்து சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தருக்கம் நமது பாராட்டுக்கள்.
பீஜிங் ஒலிம்பிக்ல உலகத்துல ஜனத்தொகைல பெரிய நாடான சீனா விளையாட்டுலயும் முதல் இடம். ஜனத்தொகைல இரண்டாவது இடத்துல இருக்க நாம எங்கய்யா.

ஏன் இந்த நெலம. நம்மனால சாதிக்க முடியாதா? முடியும் ஆனா முடியாது இப்ப அப்படி இருக்கு

முதல் காரணம் - கிரிக்கெட். காலைல விடிஞ்ச ஒடனே எல்லா ஊர்லயும் இளவட்ட பயலுக பூராம் கிரிக்கெட் வெளையாட கௌம்பிர்ரானுவ. ஞாயிற்றுக்கிழமை பாருங்க 20-30 வயசு குருப் அன்னைக்கு அவனுகளுக்கு லீவாம், Relax பண்ண கிரிக்கெட் மொதல்ல நம்ம பயலுகளுக்கு கிரிக்கெட்ட தவிர வேற விளையாட்டில ஈடுபாடு இல்ல.

ரெண்டாவது. போட்டி & பொறாமை கோஷ்டி. இது வெளையாடுறவங்களுக்கு இடைல உள்ளது. பயிற்சியாளர்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் இதில வர்றாங்க திறமையானவங்களை வளக்கிறத விட்டுட்டு தனக்கு தெரிஞ்சவங்களை அவங்களுக்கு திறமை இல்லன்னாலும் ஆதரிக்கிறது. இப்படியே போனா எங்க மெடல் வாங்குறது?

மூணாவது காரணம்-அரசியல். ஆட்சிக்கு எப்படி வர்றது கெடைச்ச ஆட்சிய எப்படி தக்க வச்சுக்கிறதுன்னு நெனக்கிறதுக்குத்தான் அரசியல்வாதிகளுக்கு நேரம் இருக்கு. ஒலிம்பிக்ஸாவது புண்ணாக்காவது அட போய்யா.

நாலாவது ஸ்பான்ஸர் எனப்படும் நிதி உதவியாளர்கள் கிரிக்கெட் மேட்ச்ச நடத்த ஸ்பான்ஸர் பண்ணுவாங்க அதில அவங்களுக்கு விளம்பரம். அதுனால அவங்க பொருட்களோட வியாபாரம்.

அம்பானி, டாட்டா, லஷ்மி மிட்டல் இவங்கல்லாம் உலகளவில இந்திய கோடீசுவரர்கள். இவங்களுக்கு எல்லாம் எந்த கம்பெனிய வெலைக்கு வாங்குறது ? எப்படி பணத்தை பலமடங்கா பெருக்குறது ? இதான் அவங்களோட செயல்பாடே இந்தியா ஒலிம்பிக்ஸ்ல நெறய மெடல் வாங்குனா அவங்களுக்கென்ன கெடைக்கும்.

அஞ்சு-நம்ம பொருளாதாரம். இப்படியெல்லாம் இருக்குன்னு தெரியும்ல நீங்களாத்தான் போராடி முன்னுக்கு வந்து ஒங்க தெறமைய காட்டணும். நீங்க நெனக்கிறது சரி தன் கையே தனக்குதவி கிரிக்கெட்டுக்கு 6 ஸ்டம்ப் 1 பேட் ஒரு பால் போதும். மத்த விளையாட்டுக்கு அடிப்படை உபகரணங்கள் பயிற்சியாளர் செலவு இப்படி பெரிய அளவுல செலவழிக்க நம்ம ஆளுகளா முடியாது. ஏன்னா நம்ம பொருளாதாரம் வௌயாட்டுல ஆர்வம் திறமை இருக்கும் பொருளாதார தடையால அவங்களால மேல வரமுடியாது.

இன்னைக்கும் மைதானங்கள்ல கால்ல செருப்பு இல்லாம ஓடுறவங்களை நீங்க பாக்கலாம். அதே மாதிரி போலீஸ் செலக்ஷன்லயும் கால்ல செருப்பு இல்லாம ஓடுறவங்களை பாக்கலாம்.

பி.டி. உஷா பாருங்க உலக தரத்துல ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்துறாங்க. 2012 ஒலிம்பிக்ல தடகளத்தில தங்கம் வாங்கிரலாம்னு சொல்றாங்க.

ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிக்கிறது மிகப் பெரிய சவால். அதுக்காக உழைக்கிறதுக்கு விளையாட்டு வீரர்கள் இருக்காங்க அவங்களை ஊக்குவித்து, ஊக்கமளித்து, பயிற்சியளித்து ஜெயிக்க வைக்க முடியும் அதை யார் பொறுப்பெடுத்து செய்றது?

Friday, October 17, 2008

முனியப்பனின் காதலி

நங்கையை பற்றிய
நாலெட்ஜ் இல்லாத
முனியப்பன் வாழ்க்கையில்
காதல் காற்று வீசியது
வீசியவள் பேரழகியில்லை
வளைவுகள் சரிவரப் பெற்றவள்
ஒரே துறையில், ஒரே இடத்தில், இருக்கவும்
ஒரே வேகமான காதல்
முனியப்பன் பாடத்தை பற்றிய பேச்சாளனல்லவா
பேசுவதற்கு குறிப்பெடுப்பாள் பேதையவள்
வக்கனை காட்டுபவள்
வஞ்சிக்காமல் சிரிக்கவும் செய்வாள்
படிக்கட்டுகளில் வளர்ந்த காதல்
இக்கட்டில் சிக்காமல் வளர்ந்தது
ஓட்டலுக்கு சாப்பிடப் போனால்
பில் கட்டுபவள் அவள்தான்
டீ குடிக்க போனால் சேலைகட்டிய இடுப்பில்
காடிச்சீப்பில் காசு வைத்திருப்பவளும் அவள்தான்
அய்யா அம்மா என்று
பணிபுரிபவர்கள் அழைக்க
அம்சமான காதல் வளர்ந்தது
சொல்லால் கொள்ளாமல் ஒருநாள்
காணாமல் போனான் முனியப்பன்
காதலனை காணாமல் தவித்தாள்
காரணம் புரியாமல் மயக்கம் போட்டாள்
பதறிய தோழிகள், மேலதிகாரிகள்
மருத்துவ காரணம் தேடினால்
மயக்கத்திற்கான காரணம் ஒன்றுமில்லை
அவர்களுக்கு தெரியுமா காதலின் அருமை
முனியப்பன் காணாமல் போகவில்லை
காதலியிடம் சொல்லாமல்
அறுவை சிகிச்சையில் இருந்தான்
அசராமல் தேடியவள்
கண்டு பிடிக்காமல் விடுவாளா என்ன?
கண்டு பிடித்து போனும் போட்டாள்
மீண்டும் வந்தவனை
கண்டு துள்ளி ஓடினாள்
காதருகே ஒற்றை ரோஜாவுடன்
காதலும் வளர்ந்தது
பிரச்சினைகளும் வளர்ந்தது
காதல் பயணம் சுகமானது
கப்பல் கவிழாதவரை
நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்காது
சொன்னவள் அவள்
விதி எனும் சூறாவளியில்
சிக்கிய காதல் சின்னாபின்னமானது
விதி விளையாடிய விளையாட்டு
காதலர் இருவரையும் புரட்டிப் போட்டது
உள்ளத்தை கொடுத்து
உதடுகளையும் கொடுத்தவளுக்கு
உதவவில்லை காலம்
தொழில் படிப்பால் பணத்தில்
துவளவில்லை இருவரும்
வெவ்வேறு இடங்களில்
வேறொரு துணையோடு வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வீசிய
காதல் தென்றல் மறக்குமா?
முனியப்பன் காதலை, காதலியை மறக்கவில்லை
காதலியும் மறந்திருக்க மாட்டாள்
காதல் புதைக்கப்படும் போது, அழுத
கண்ணீர் வற்றும் போது
காதல் வரலாறாகிறது.

ஓட்டுநர், நடத்துநர், பேருந்து

ஓட்டுநர், நடத்துநர், பேருந்து

ஒரு பேருந்து (Bus) ஓடணும்னா அதுக்கு ஒரு ஓட்டுநர் (Driver) பயணிகளுக்கு டிக்கட் போட ஒரு நடத்துநர் (Conducter) தேவை, அப்பத்தான வழித்தடத்தில் (Route) பயணிகள் பஸ் போகும். இது வழக்கமான வியம் தானே, அப்படீங்கறீங்களா, வழக்கமான விஷயம் தான், இதப் படிங்க.

மதுரைல இருந்து ஒரு பஸ் ஒரு ஊருக்கு புறப்பட்டு போகுது, ஓட்டுநரும், நடத்துநரும் உற்சாக பானம் லைட்டா ஏத்தின நெலமைல டிரிப் எடுக்கறாங்க. 20 கிலோ மீட்டர் தாண்டின ஒடனே ஒரு ஊர் வருது. வண்டி நிக்குது. ஊர் வந்தா பஸ்ஸ நிப்பாட்டி ஆளை ஏத்துறது, இறக்குறது தான நடக்கும். இங்கயும் அப்படித்தான். ஆனா பஸ்ல வந்த எல்லாரையும்,மீதி காசை கைல குடுத்து எறக்கிவிட்டுட்டாங்க., ஊருக்குப் போறோம் அப்படின்னு அந்த பஸ்ல வந்த எல்லாருக்கும் எப்படி இருந்திருக்கும் ?.

ஓட்டுநரும், நடத்துநரும், எங்க போவாங்க, நேரா அரசு மதுக்கடைதான், சரக்க கொஞ்சம் ஊத்திகிட்டு இன்னும் கொஞ்சம் கைல எடுத்துகிட்டு பஸ்ல ஏறி எங்க போனாங்க? பஸ் போற பாதையா? அதெப்படி? ஒரு பக்க (oneway) ரோட்ல பஸ்ஸ ஓட்டிட்டு போய், நிப்பாட்டி சரக்கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது இப்படியிருக்க, பஸ் உரிமையாளர் என்ன செஞ்சாங்க?, பஸ் வரவேண்டிய டயத்துக்கு ஊருக்கு வரல, நடுல எங்கயாவது பிரேக்டவுண் ஆயிருக்கான்னு பாக்குறதுக்கு, பஸ்ஸோட வழித்தடத்துல வந்தா பஸ்ஸ காணோம். மதுரைல மேலிடத்துக்கு போன் பண்ணிட்டு, பஸ் எங்கயிருக்கும்னு தேட ஆரம்பிச்சு, கடைசில ஒரு வழியா பஸ்ஸ கண்டு பிடிச்சுட்டாங்க, ஓட்டுநரும் நடத்துநரும் முழிச்சிகிட்டா இருப்பாங்க?, மட்டை (flat). உபயம் அரசு மது. குடி, குடியை மட்டும் கெடுக்கல, பஸ் பயணிகளோட பயணத்தையும் கெடுத்துருச்சு.

வெங்கட்ராமன்

இவர் M.E. (சாப்ட்வேர்) என்ஜினீயர். பெங்களுருவில் டெக்ஸாஸ் கம்பெனியில் ஆபிசராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. படிக்கும்பொழுது 4வருடமும் தொடர்ந்து கோல்ட் மெடல் வாங்கினார். அடுத்து

M.E. சாப்ட்வேர் பெங்களுருவில் உலகத்தரம் வாய்ந்த IIM & IIS கல்வி நிறுவனங்களில் படித்தார். அங்கும் கோல்ட்மெடல் தான்.

படித்து முடித்ததும், அவரை MNC எனப்படும் மல்டி நேஷனல் கம்பெனிகள் அவரை வெளிநாட்டில் வேலை பார்க்க அழைப்பு விடுத்தன.

அவருடைய தகப்பனார் திரு ராமகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை தலைவராகவும், பேராசியராகவும்

இருந்தார். அவர் தன்னுடைய மகன் இந்தியனாக இருக்க வேண்டும். அவருடைய உழைப்பு இந்தியாவில்தான் இருக்க வேண்டும். என்று

ஆசைப்பட்டார். தந்தையை போல எண்ணமுள்ள மகனும் வெளிநாடு செல்லாமல் பெங்களுருவில் 'டெக்ஸாஸ்' என்ற மிகப்பெரிய கம்பெனியில்

ஆரம்பத்திலேயே மேலதிகா??யாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களுருவில் 1600 சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி

குடியிருப்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

அண்ணா பல்கலைகழகத்தில் B.E. படித்த 4 வருடமும் படிப்புக்கான தங்கப்பதக்கம், பெங்களுருவில் உலகத்தரம் வாய்ந்த IIS கல்வி

நிறுவனத்தில் M.E. பயின்ற 1 வருடத்திலும் தங்கப்பதக்கம் பெற்று, அயல் நாட்டுக்கு வேலைக்கு போகாமல் இந்தியாவில் பெங்களுருவில்

பணிபுரியும் திரு.வெங்கட்ராமன் மிகப்பெரிய பாராட்டுக்குரியவர். அவர் தந்தை திரு.ராமகிருஷ்ணனும் பாராட்டுக்குரியவர்.

ரஜினி, சிரஞ்சீவி, விஜயகாந்த்

ரஜினி வாய்ஸ் இது தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ரஜினி அரசியலுக்கு வருவார், வருவார்னு தமிழக மக்கள் ரொம்ப எதிர்பார்த்தார்கள், அவரும் எப்ப வருவேன்னு தெரியாது, ஆனா கரெக்டான டயத்துக்கு வருவேன்னு பஞ்ச் டயலாக் விட்டுகிட்டே இருந்தார். கடைசியா அவர் டுபுக்குன்னு தமிழக மக்கள் புரிஞ்சிகிட்டாங்க.

இப்பவும் பாருங்க ஒகனேக்கல் பிரச்சினைல ஒரு வாய்ஸ் குடுத்தார். குசேலன் பட ரிலீஸ் டயத்துல ரஜினி ஒரு பல்டி அடிச்சார் பாருங்க, அவர் பஞ்ச் டயலாக்கை விட சூப்பர் அதான், ரஜினி சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்க நடிகரா மட்டும் நின்னுக்குங்க, தமிழக மக்களோட பிரச்சினைகளுக்காக வாய்ஸ் குடுக்கிற தகுதி உங்களுக்கு இல்லை. ஒங்களுக்கு ஒங்க படம் ஓடணும்கிற சுயநலம் மட்டும் தான்கிற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சு.

ரஜினிய பத்தி பாத்துட்டோம். இப்ப விஜயகாந்த்தை பாப்போமா, இவர், மொதல்ல வலுவான பொருளாதார பிண்ணனிய உண்டாக்கிக்கிட்டார். பிறகு மக்களுக்கு உதவித் திட்டங்களை அவருடைய பிறந்த நாளைக்கு செயல்படுத்த ஆரம்பிச்சார். படங்கள்லயும் நல்லவன் மற்றும் அக்கிரம் செய்பவர்களை தண்டிக்கும் கதாபாத்திரங்களில் நடித்தார், மக்களின் மனதை ஒரளவுக்கு கவர்ந்தார்.

அரசியலுக்கு வருவேன், வருவேன்னு, ரஜினி மாதிரி சொல்லிக்கிட்டே இல்லாம, திடீர்னு அரசியலுக்கு வந்தார். பா.ம.க. கோட்டையான விழுப்புரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபீல்ட் ஒர்க் எனப்படும் கள வேலைகளில் இவர் கெட்டிக்காரர். இவர் செல்லும் இடமெல்லாம் இவர் பேச்சை கேட்க மக்கள் திரளாக கூடுகிறார்கள். இவர் கட்சியின் வாக்கு வங்கியும் கூடிக்கொண்டே வருகிறது. இவருடைய பலம் இவருடைய துணைவியார் மற்றும் தொண்டர்கள்.

இன்னும் ரெண்டு பெரிய நடிகர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே சாதிக் கட்சியினர், ஆகையால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை.

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிய பாத்தீகளா, ஆம்பிளை சிங்கம். அரசியல்ல குதிச்சிட்டார். ஆகஸ்ட் 17ல் அவர் ஒரு கூட்டத்தில் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்காக, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

கட்சியின் பெயர், கொடி முதலியன எல்லோரையும் கலந்து ஆலோசித்து சொல்வதாக சொல்லியிருக்கார். அவருடைய அறிவிப்பு அவரோட ரசிகர்கள் கிட்ட ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கியிருக்கு. ஆந்திர அரசியல்வாதிகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

கடைசில பாருங்க சிரஞ்சீவி ஆகஸ்ட் 26ந் தேதி 'பிரஜா ராஜ்யம்'னு கட்சி ஆரம்பிச்சுட்டார். கட்சி கொடி, கொள்கைகள் எல்லாத்தையும் மீட்டிங் போட்டு அறிவிச்சுட்டாரு, திருப்பதில நடந்த கூட்டம் திருப்பதிய உலுக்கி எடுத்துருச்சு. 10 லட்சம் பேர கூட்டுறதுன்னா லேசான விஷயமா?. அசத்தி காட்டிட்டார் சிரஞ்சீவி, 18 ட்ரெய்ன், 3000 பஸ்ல கூட்டத்துக்கு ஆட்கள். அதுக்கு மேல மத்த வாகனங்களில் 3000 போலீஸ் + 3000 தொண்டர்கள் பாதுகாப்பு, எங்க போய்ட்டார் பாருங்க சிரஞ்சீவிய

ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி இப்ப ஒங்களுக்கு புருஞ்சிருக்கும்.

Thursday, October 9, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

இந்தத் தலைப்பு நிச்சயமா நீங்கள் கடந்து வராத மனிதர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு.

தவசித்தேவர்

விருமாண்டி மாதிரி முரட்டுத்தனமான ஆள் கெடையாது.

ரொம்ப அமைதியான, பழய காலத்து காங்கிரஸ்காரர், 80 வயதை தாண்டிய இளைஞர். மடிச்சுக்கட்டின வேட்டி, முழங்கை வரை வர்ற சட்டை, தோள்ல ரெண்டுபக்கமும் தொங்கும் நீளமான துண்டு அவர் முழங்காலுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் வரும்.

காலைல மதுரை பைபாஸ் ரோட்ல வாக்கிங்வரும் அவர் காலில் செருப்பு அணிவது கிடையாது. முனியப்பன் அவரிடம் என்னய்யா கால்ல செருப்பு இல்லாம நடக்குறீங்க ? அப்படின்னதுக்கு அவரோடு பதில் 'அப்பேர்ப்பட்ட மனுன் காந்தியே மதுரைல வந்து மக்களை பாத்து சட்டையை கழட்டிட்டு இனிமே சட்டை போட மாட்டேன்னுட்டார். நம்மளுக்கு எதுக்கு கால்ல செருப்பு' அப்படின்னார். கிட்டத்தட்ட 40 வருஷமா கால்ல செருப்பு போடாம நடக்கிறார். அவர் பேரன் பேத்திகள்லாம் தேசிய அளவுல உலக அளவுல இந்தியாவுக்காக செஸ் விளையாட்டு விளையாடுறவுங்க. அவங்களை அவர் செஸ் விளையாட அழைச்சிட்டு போயிருக்கார். அப்பவும் செருப்பு போட்டதில்ல டெல்லில குளிர்காலத்துல கூட அவர் கால்ல செருப்பு போட்டதில்லை.

அவர் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் 'விருவீடு' எனும் ஊருக்கு அருகில் உள்ள விராலிமாயன்பட்டி.

மதுரையில தனது மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்தான் கோடாங்கி. தை பொங்கலுக்கு அடுத்த நாளும், மாசி பச்சையிலும் (மகா சிவராத்திரி) கையில் சூலாயுதத்துடன் ஊரில் சாமியாடுவார்.

அவர் மகள் வயிற்றுப் பேரன் தான் தீபன் சக்கரவர்த்தி. செஸ்ஸில் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர்.

ஒரு வாலிப வயோதிகர்

ஒரு வாலிப வயோதிகர்

நெறய பேர் வயசானாலும் வாலிப நினைப்போடயே திரியறானுவ முனியப்பனோட நண்பர் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர், ரபேல் நாடல் மாதிரி முக்கால் பேண்ட் போட்டுக்கிட்டு திரியறார். ஆஸ்பத்திரிக்கு போகும் போது மட்டும் பேண்ட்டு சட்டை போடுவார்.

அவருக்கே தெரியும், வயசாயிருச்சுன்னு, ஆனாலும் அதை ஒத்துக்கிட மாட்டார்.

முடி வெட்டப் போனவர் முடி வெட்டியாச்சு, அப்ப அவரோட உச்சந்தலையில பேன் காத்து அடிக்குது. தலய தடவிப்பாக்கிறார். தலையில சொட்டை ஆரம்பிச்சிருச்சு.

இப்பல்லாம் அவர்கிட்ட ஊசி போடற சின்னப் புள்ளைகல்லாம் அவரை தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சிருச்சு. அவருக்கு கோபம் வரும், ஆனாலும் கோபத்தை கட்டுப்படுத்திக்கிடுவார்.டாக்டர் எக்ஸ்

டாக்டர் எக்ஸ்

முனியப்பனோட நண்பர் டாக்டரை இனிமே எக்ஸ்னு கூப்பிடுவோம்.

டாக்டர் எக்ஸ் கிளினிக்ல ஒரு பேஷண்டை சீரியசா இருக்குன்னு கூப்பிட்டு வந்தாங்க. பேஷண்டை உள்ளே படுக்கப்போட்ட புது நர்ஸ் ட்ரெய்னீ, பேண்டை பாத்துச்சு.

டாக்டர் கிட்ட வந்து சார் டெம்பரேச்சர் நார்மல், பிபி பாக்க முடியலன்னுச்சு.

டாக்டர் பேஷண்டை பாத்தார், அது டெட்பாடி, செத்துப்போன ஆள் தூக்கிட்டு வந்திருக்காங்க.

செத்துப்போன பேஷண்ட்டுக்கு பல்ஸ், டெம்ப்பரேச்சர், பாத்திருக்க அப்படின்னு டாக்டர் சொன்னவுடனேயே அந்த டிரெயினிங் நர்ஸ் நடுங்குன நடுக்கம் சூப்பர் நடுக்கமாம்.


உலகத்தரம் - தமிழ் சினிமா

உலகத்தரம் - தமிழ் சினிமா

2008 ஆகஸ்ட் மாதம் முடிய வந்த தமிழ்படங்களில் நன்றாக ஓடியது எத்தனை படம். நாலே நாலுதான் 1) அஞ்சாதே, 2) சந்தோஷ் சுப்ரமணியம் 3) தசாவதாரம், 4) சுப்ரமணியபுரம்

'உலகை உலுக்கிய உலக நாயகன்' - இது தசாவதாரத்துக்கான விளம்பரம், டெக்னிக்கலா மிகச்சிறந்த படம், கதை ரொம்ப பலவீனமானது. படத்தோட கதை ரொம்ப பேருக்கு புரியலை. படம் பாத்தவனும் ஒரே படத்துல பத்து கமல பாக்கத்தான் போனாங்க.

ஆக 2008 ஜீலை வரைக்கும் வந்த படங்கள்ல தமிழ் நாட்ல ஓடுனது 4 படம் தான்.

ரஜினியோட குசேலன் 2) வாரப்படமா படுத்திருச்சி, விஷாலோட சத்யம் அவுட், தமிழ் நாட்லேயே தமிழ்படம் ஓட மாட்டேங்குது அப்புறம் எப்படிப்பா உலகத்துல போட்டி போடப் போறீங்க. கதை கெடையாது தம்பி, டெக்னாலஜிய மட்டும் வச்சு என்னப்பா செய்வ?

இந்த நிலை மாறாதா, அப்படின்னு நெனக்காதீங்க, நிச்சயமா மாறும். புதிய சிந்தனை, புதிய பரிணாமம், உள்ள படைப்பாளிகள் வரும்போது, உலகத்தை மிரட்டும் தமிழ்ப் படங்கள் வரும்.


டாஸ்மாக்

டாஸ்மாக்
கள்ளச் சாராயத்தால் ஏற்படும் உயிர்ப்பலிகளை தடுக்க தமிழக அரசால் தமிழக குடிகாரர்கள் மது குடிக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்தான் டாஸ்மாக், கள்ளச்சாராயம் கிட்டத்தட்ட இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல, எல்லை தாண்டிய கள்ளச்சாராயம்தான் எங்காவது அடுத்த மாநிலத்துடனான எல்லை அருகில் கிடைக்கிறது..

2003ம் ஆண்டு நவம்பர் மாதம் டாஸ்டிமாக் சில்லரை விற்பனை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களில் குடிப்பவர்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசே நேரடி விற்பனை செய்ய ஆரம்பித்தது. மதுவை விற்க ஒரு கடைக்கு ஒரு மேற்பார்வையாளரும் 3 விற்பனை ஊழியரும் அரசு வேலையில் பணியில் அமர்த்தப்பட்டனர். குடி, குடியைக் கெடுக்கும் என்ற வார்த்தைகள் மது பாட்டில்களிலும், கடை பெயர்ப்பலகைகளிலும் இடம் பெற்றன.

கடை மட்டும் இருந்தா போதுமா, ஒக்காந்து குடிக்க இடம் வேணாமா? அரசு சார்பிலேயே மது அருந்தும் இடம் (பார்) தொடங்கப்பட்டது. 01.02.2004ல் யார் ஊத்திக் குடுக்கறது?. மதுக்கடையையும் திறந்து மதுவை ஊத்தி கொடுத்த அரசே பார் ஊழியர்களை நியமித்தது. "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு இப்ப உலகம் சுத்துதடி பலரவுண்டு". தமிழக குடி மக்கள் தரமான சரக்கு சாப்பிட ஆரம்பித்தார்கள். சுண்டல். சோடா, கலர், ஸ்நாக்ஸ், மட்டும் தனியார் வசம். இதற்கு முன்னால இருந்த தனியார் மதுக்கடையில் போலி மதுபாட்டில்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது ஊரறிந்த ரகசியம்.

அரசாங்கம் ஏற்று நடத்தும் இடங்களில் முறைகேடுகள் நடப்பது சகஜம்தானே. ஊத்திக் கொடுக்கும் இடங்களில் மிகப்பெரும் அளவில் முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தவுடன், மதுவிற்பனையோடு மட்டும் அரசாங்கம் நிறுத்திக் கொண்டது. ஊத்திக் கொடுக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள், மதுக்கூட்ங்களில், போலி மது விற்பனையாகிறதா, கள்ளச் சாராயம் நடமாடுகிறதா, என்ற கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடி, குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கை வார்த்தைகளோடு ஏன் அரசாங்கமே மக்களுக்கு மது குடிக்க கடைகள் திறக்கிறது? இது ஒரு நியாயமான கேள்வி. துமிழக அரசின் பொருளாதாரமே டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் வருவாயை நம்பி இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. டாஸ்மாக்கின் மிகப்பெரிய வருமானம் தமிழக அரசின் நிதிநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது என்றால் அது மிகையல்ல.

சும்மா ஜாலியா குடிக்கிறது, கம்பெனி குடுக்க குடிக்கிறது, சந்தோஷத்துக்கு குடிக்கிறது, சோகத்துக்கு குடிக்கிறது, ஒடம்பு அலுப்புக்கு குடிக்கிறது, வாரலீவுக்கு குடிக்கிறது. விசேஷ வீட்ல, கேத வீட்ல குடிக்கிறது. இப்படி குடிக்கிறதுக்கு ஏகப்பட்ட வாயப்புகள், காரணங்கள்.

மது குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அளவோடு மது குடியுங்கள். மதுவுக்கு அடிமையாகாதீர்கள்.

ராஜதர்மம்

ராஜதர்மம்

ராஜாவே இல்லை, அப்பறம் எதுக்கு ராஜதர்மம்கிறீங்களா? இந்த தலைப்புல ராஜாங்கிறது கார்ப்பரேட் தலைவனை, தலைவனாகக் கூடியவனை, அவன் எப்படி இருக்கணும் அப்படின்னு பார்ப்போம்.

அரசன் திக்குப்பாலகர் சொரூரூபம், ஆதலால் அனைவரையும் அடக்கி ஆளும் சக்தி அவனுக்கு உண்டாயிற்று. கார்ப்பரேட் தலைவன், எல்லாரையும் அன்பால் அடக்கி ஆளணும்.

அரசன் காரியா காரியங்களையும், காலங்களையும் எண்ணி, அடங்கியும் பலமுள்ளபோது உயர்ந்தும் வருவான், கார்ப்பரேட் நிறுவனத்தை ஆரம்பித்து, அதைப்பலப்படுத்தி அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்வரை மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து, நல்ல முறையில் நிறுவனம் செயல்பட ஆரம்பித்ததும் புதிய பலம் பெற்று உயர்வான்.

இந்திரியத்தை அடக்கிய அரசனை உலகம் வணங்கும். உலகம் அரசனுக்கு வசப்படும். காமத்தை அடக்கி ஆளச் சொல்றாங்க. கண்டபடி மேயாம, ஒரு பொண்டாட்டி மட்டும் போதும், பெண்ணாசைல தவறு பண்ண ஆரம்பிச்சா கம்பெனி காலியாயிரும், அதைத்தான் இந்திரியத்தை அடக்கி ஆள் அப்படிங்கிறாங்க.

காமத்தால் உண்டான வேட்டையாடல், சூதாடல், குடித்தல், வீண் அலைச்சல், துரோகம், பொறாமை, பிறன் குணத்தைச் சகியாமை, ஒருவன் பொருளை அபகரித்தல் இதெல்லாம் அரசன்கிட்ட, அதாங்க கார்ப்பரேட் தலைவன்கிட்ட இருக்கக்கூடாது.

பொருளை விருத்தி செய்பவரையும், ஞானமுள்ளரையும், பலம், சாமர்த்தியம் உள்ளவர்களை அருகில் விலகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பத்தாங்க கம்பெனி டெவலப் ஆகும்

தேச விசாரணை, பொக்கிஷம், முதலியவற்றைத் தன் ஆதீனத்திலும் சண்டை செய்வதும், சமாதானமாவதும் ஆகிய இரண்டையும் தூதனிடத்தும் நியமிக்க வேண்டும். கம்பெனியில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிப்பதும், முடிவெடுப்பதும் தலைவன் கையில்தான் இருக்க வேண்டும். பணம் பெரிய விஷயம், நிதி நிர்வாகம் தலைவன் கையில் இருக்க வேண்டும். இல்லைன்னு வச்சிக்குங்க, இடைல உள்ளவங்க சாப்பிட்ருவாங்க, பணத்தை மட்டுமல்ல, தலைவனையும் சேத்து தான்.

சண்டை செய்வதும், சமாதானமாவதும், இது ரெண்டும் வக்கீல் பாத்துக்கிடுவார், லீகல் அட்வைசர் கண்டிப்பா வேணும்.

தன் பட்டணத்திற்கு சமீபத்தில் பல உபகிராமங்களை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் தலைமையகத்திற்கு அருகில் நிறுவனம் சார்ந்த கிளைகள் அல்லது உபநிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். விரிவாக்கம்.

தனக்காக பல அரண்கள் உள்ள கோட்டைகளையும், மனையையும் கட்டிக் கொள்ள வேண்டும். வீட கட்டிரலாம், இங்க அரண்கள் கொண்ட கோட்டைங்கிறது தலைவனோட பாதுகாப்பு பற்றியது. பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் போக, துப்பாக்கி உரிமமும் வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனம்னா மிகப்பெரிய தொழில் நிறுவனம்னு எடுத்துக்குங்க. மிகப்பெரிய நிறுவனத்தை உண்டாக்கி நடத்துற தலைவன், அரசனுக்கு சமமானவன்.

எல்லோருக்கும் மிகப் பெரிய நிறுவனம் நடத்தணும், அதுல 500 பேர், 1000பேர் வேலை பாக்கணும் அப்படிங்கற எண்ணம் இருக்கும் அவங்களுக்கான பக்கம்தான் இது.

இதுக்கெல்லாம் மேல தலைவனுக்கு, கல்வி அறிவு, தொலை நோக்கு, சுய சிந்தனை, துணிவு, நாவடக்கம், பண்பு, முடிவெடுக்கும் திறமை, சரியான திட்டமிடல், காலம் தவறாமை, மன உறுதி ஆகியவையும் வேண்டும்.
எங்க ..., ராஜாவாக கௌம்பிட்டீங்களா.

Wednesday, September 3, 2008

ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்

மாட்டினா, தப்பிக்க முடியாது, இது பழமொழி.

மதுரை டாக்டர் எக்ஸ்கிட்ட தவறான உறவு கொண்டவுடன் ஊசி போட வருபவர்கள் சிலர். பாதுகாப்புக்காக ஊசி போடுறாங்களாம்.

அப்படி மாட்டுன 2 பேர் 1) டாக்டர் எக்ஸ்சின் மிக நெருங்கிய உறவினர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவருடைய மருமகன் ஒரு காவல்துறை எஸ்.ஐ. அவர் இந்த மாதிரி தவறு செய்துவிட்டு டாக்டர் இன்னாரென்று தெரியாமல் ஊசி போட எக்ஸ்சிடம் வந்தார்.

2) டாக்டர் எக்ஸ்சின் தங்கச்சி மாப்பிள்ளையின் அத்தை மகனும் இதேபோல் டாக்டர் அடையாளம் தெரியாமல் இதே போல் தவறிழைத்து விட்டு ஊசிபோட வந்தார்.

பாலியல் தவறிழைப்பது மனித இயற்கை அதை செஞ்சுட்டு வந்து பாதுகாப்பு வேணுமாம் அதுக்கு ஊசியாம், நல்லாருக்கும்மா ?. அதுவும் முன்னபின்ன டாக்டர்கிட்ட தான் போய் ஊசிபோடுவாங்க, நம்மளை யார்னு தெரியாதுன்னு டாக்டர் எக்ஸ்கிட்ட ஊசிபோட்டு மாட்டுனவங்கதான் இவங்க ரெண்டு பேரும்.

சசிதரன் நாயர்

பேரை படிச்சவுடனே சொல்லிருவீங்க. இவர் மலையாளத்துக்காரன்னு கேரளாக்காரராயிருந்தாலும் இவர் படிச்சது சமஸ்கிருதம். சுமஸ்கிருத பேராசியரா துறைத் தலைவரா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இப்ப பணி மூப்படைந்துவிட்டார்.

இவர் மகனும் ஐ.ஏ.எஸ் மருமகளும் ஐ.ஏ.எஸ். ரெண்டு பேரும் டெல்லில பணியில் இருக்காங்க. இவர் மகள் கொச்சி பல்கலைக் கழகத்திலும் மருமகன் கொச்சி ஷிப்யார்டிலும் பணியில் இருக்காங்க.

ர்ட்டயர் ஆனவுடனே மகள் கூடயோ மகன் கூடயோ இல்ல சொந்த ஊரிலோ செட்டில் ஆக வேண்டியது தானே முறை முடியாதுங்கிறார்.

காரணம் மதுரையில் உள்ள அவர் சொந்த வீடு. தனக்கான வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கட்டினார் சசிதரன் நாயர். ஆசையாய் கட்டின வீட்டை பிரிய எப்படி மனசு வரும் அவர் வீட்டை 87லட்சம் ரூபாய்க்கு விலைக்கு கேட்டாங்க. முடியாதுன்னுட்டார். அந்த வீட்டிலேயே கடைசி வரை இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அவர் அணு அணுவாய் ரசித்து கட்டிய வீட்டின் மேல் அவருக்குள்ள காதலை பாராட்ட வேண்டியதுதானே இயல்பு.

மாந்தி

நம்ம நாட்டு வானிலை விஞ்ஞானிகள் இப்ப உள்ள ஆளுகளை சொல்லலை. நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பலன்களை சொன்னாங்களே அந்த குரூப்பை சொல்றேன். அவங்க சொன்ன ஒரு துணைக் கோள்தான் மாந்தி.

சனிக்கிரகம் இருக்கு அதோட துணைக்கோளை பாத்தீங்களா-டைட்டன் அதைத்தான் மாந்தி அப்படின்னிருக்காங்க நம்ம ஆளுங்க. சமீபத்து செய்தில டைட்டன்ல தண்ணி இருந்ததுக்கான அடையாளம் இருக்குங்கறாங்க.

ரஷ்ய விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளில் வரும் அயல் கிரகவாசிகள் டைட்டனில் இறங்கி ரெஸ்ட் எடுத்து பயணக் களைப்பை போக்கிட்டு பூமிக்கு வந்து பாத்துட்டு போறதா சொல்றாங்க.

எது எப்படியோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எந்த விதமான விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு மாந்திய பத்தியும் சொல்லியிருக்காங்க இது நிச்சயமா நம்ம ஆளுகளுக்கு வெளி கிரக தொடர்பு நிச்சயமா இருந்ததுக்கான ஒரு ஆதாரம். வெளிகிரக தொடர்பு எப்படி உணடாச்சு எப்படி கட் ஆச்சு இதெல்லாம் பெரிய டாபிக்.

பில்லி சுனியம் செய்வினை

நம்ம தமிழனுக்கு உள்ள மோசமான குணம் தனக்கு பிடிக்காத ஆளை எப்படியும் கெடுக்கணும் கவுத்தனும்கிற மனப்பான்மை தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்கிறது அவங்களோட விருப்பம்

பில்லி சுனியம் செய்வினை எல்லாம் அடுத்தவனை கெடுக்கிறதுக்காக வைக்கிறது. இது அமானுஷ்ய விஷயம்கிறாங்க. மனித சக்திக்கு அப்பாற்பட்டதுன்னு எடுத்துக்குங்க. ஒருத்தனோட ஜாதகக் கட்டத்தில 5ம்
பாகமும் 9ம் பாகமும் பலவீனமா இருந்தா பில்லி சுனியம் வேலை செய்யும்கிறாங்க 5ம் பாகமும் 9ம் பாதமும் நல்லா இருந்தாலும் தசாபுத்தி மோசமா இருந்தா பில்லி சுனியம் பலிக்குமாம்.

பில்லி சுனியத்தின் ஆப்ரிக்க கண்டத்து அடிப்படை ஊடூ எனப்படுகிறது. கறுப்பு மாந்தீரிகம் எனப்படும் பிரபலமான ஆப்ரிக்க பில்லி சுன்யம் ஊடூவை அடிப்படையாக கொண்டது.

செய்வினை வச்ச வீட்ல எதாவது ஒரு பக்கம் கைய காட்டி அந்த எடத்த தோண்டுவாங்க. அந்த எடத்துல ஒரு தகடு இருக்கும். இதை மோசடி மாந்திரீகம்கிறாங்க.

பில்லி சுனியம் செய்வினை வைக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க வச்சத எடுக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க.

பில்லி சுனியம் செய்வினை நீக்கிறதுக்குன்னே தெய்வீக திருத்தலங்கள் (கோயில்கள்) 3 இருக்கு அங்க போய் சாமிய தரிசனம் பண்ணிட்டு வந்தாலே தெய்வீக நிவாரணம் உறுதி.அந்த தலங்கள் 1) திருச்சி அருகே உள்ள குணசீலம் ஊரில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாசன் 2) வேலூர் மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோளிங்கர் ஊரில் உள்ள மலையில் வீற்றிருக்கும் பெருமாள்-யோகநரசிம்மர் 3). கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்.

நீதியரசர் ஸ்ரீனிவாஸன்

நீதிபதியுடைய கடமை நியாயமான தீர்ப்பை சொல்வது. ஒரு மேற்கொளை எடுத்துக்காட்டி தீப்பு சொல்பவர்கள் மிக அரிது. இவருடைய தீர்ப்பு பரபரப்பான தீப்பு. அதை இந்த பக்கத்தின் கடைசியில் சொல்கிறேன்.

அதற்கு முன் இவரைப் பற்றி சில வரிகள் ஆச்சாரமான பிராமண குடும்பம். நீதிமன்றத்துக்கு வரும் போது குடிக்க வெள்ளி கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார். தலையில் டர்பன். மிகவும் எளிமையானவர் நேர்மையானவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பின்னர் பதவி உயர்வில் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த போது இவர் தீப்பளித்த வழக்குதான் பிரபலமான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு.

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கூடுதல் தளங்களை கட்டியதாக பிளசன்ட் ஸ்டே ஓட்டல் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது விதிமுறைகளை மீறி கட்டிய தளங்களை இடிக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதி நீதியரசர் ஸ்ரீனிவாஸன்.

தீர்ப்பில் கூடுதல் தளம் கட்ட அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த ஓட்டல் வழக்கின் தீர்ப்பின் எதிரொலிதான் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம். ஆளும்கட்சியாளர்களின் அராஜகத்துக்கு பலியான 3 விவசாய கல்லூரி மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள்.

அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட மன்னனும் கெடுக்கக் கூடியவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெட்டுப்போவான் நியாயமான மேற்கொள். அதுவும் செல்வி ஜெயலலிதாவின் குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லை என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார் நீதியரசர் ஸ்ரீனிவாசன்.

முதலமைச்சர் பதவியில் இருப்பவரை விமர்சிப்பது மிகப் பெரிய விஷயம். அதுவும் அவர் செய்த தவறுக்கு தலைமைப் பதிவியில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது நீதிபதியின் சிறப்பை காண்பிக்கிறது.

Sunday, August 17, 2008

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்த அரசு போக்குவரத்து இப்ப ஐசியூக்கு போற ஸ்டேஜ்ல இருக்கு.

பல்வேறு தனியார் பஸ் கம்பெனிகளை இணைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமாக சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகம், இன்று தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தேசிய அளவில் பல பரிசுகளை அள்ளிக் குவித்தன தமிழக போக்குவரத்து கார்ப்பரேஷன்கள். பிஆர்சி, கேடிசி, பல்லவன் கழகங்கள் இசைக்குழு வைத்திருந்தன. இசைக்குழுக்கென தனி பஸ். மற்ற இசைக்குழுக்களை விட கார்ப்பரேசன் இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்த நாடப்பட்டன. இன்று இசைக்குழுக்களே இல்லை.

தமிழகம் முழுக்க 160 கிளைகளுக்கு குறையாமல் இருக்கும் TNSTC-யில் ஒரு கிளைக்கு குறைந்தது 10 பஸ்கள் ஸ்பேர் பார்ட்ஸ் இல்லாமல் ஓடாமல் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 1600 பஸ்கள் ஓடாததினால் அரசுக்கு இழப்பு எவ்வளவு?

1998க்கப்புறம் கிளைகளில் டெக்னிக்கல் ஸ்டாப் (TM) எனப்படும் பஸ் மெயின்டனன்ஸ் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வில்லை.
முனியப்பன் நண்பர் டாக்டர் X இடம் ஒரு TNSTC யின் ஓட்டுநர் லீவ் சர்டிபிகேட்டுக்காக வந்தார். பொய் லீவு இல்லை. உண்மையான லீவு. காரணம் பணியில் ஸ்டீயரிங் வீல் ஒடிக்கும் போது ரிடர்ன் ஆகி அவர் கையில் வேகமாக அடிக்க BOTH BONE FRACTURE FORE ARM, இது வண்டிகளின் சிறப்பான பராமரிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

புறநகர் ஓட்டுநர்கள், பணி நேரம் குறைந்தது 14 மணிநேரம், 20 மணி நேரம் பஸ் ஓட்ட பணிக்கப்படும் வழித்தடங்களும் உள்ளன. எவ்வளவு சிரமம் பாருங்க. தொடர்ச்சியா ஒரு ஓட்டுநர் தனி ஆளா, 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் பஸ் ஓட்டுறது, அந்த ஓட்டுநருக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும்? Crude Oil உலக சந்தையில் 1 பேரல் 40 டாலருக்கு விற்கப்பட்ட போது நிர்ணயம் பண்ணப்பட்ட பயணக்கட்டணம் தான், இன்று Crude Oil 1 பேரல் 140 டாலர் விற்கும் போதும் அதே கட்டணம் தான். பஸ் பயணக் கட்டணத்தை கூட்டனும்ல, நீங்க சொல்றது புரியுது.

பஸ் கட்டணத்தைக் கூட்டினா, தேர்தல்ல ஓட்டு விழுகாது, ஆட்சிக்கு வரமுடியாதுல்ல. இது அரசியல். பஸ் கட்டணத்தைப் பல மடங்கு கூட்ட வேணாம். ஒரு 5 பர்செண்ட், 100 ரூபாய்னா 105 ரூபாய். இப்படி கூட்டினா அது அரசு பேருந்துகளை நம்பி இருக்கும் ஏழை, எளியோரை நிச்சயம் பாதிக்காது. இலவச பஸ் பாஸ் எல்லாம் ரத்து செய்ய வேணாம். ஏன்னா அந்த திட்டங்களால பயனடைபவர்கள் மிக அதிகம்.

பஸ் கட்டணத்தை யாரையும் பாதிக்காத அளவுக்கு மிகச்சிறிதளவு உயர்த்தினால், தற்போது தமிழகம் முழுதும் ஓடாமல் நிற்கும் 1000க்கும் அதிகமான பேருந்துகள் ஓடும், பராமரிக்கப்படும், பொதுமக்கள் பயனடைவார்கள். TNSTCயும் லாபத்தில் இயங்கும், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும், தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும்.

குற்றாலம் மூணார் டிப்ஸ்

குற்றாலம் போறவுக குற்றாலத்தோட குளியல் முடிஞ்சுச்சுன்னு நெனக்காதீக. குற்றாலத்திலிருந்து செங்கோட்டை போய் கேரளாவுக்குள்ள போங்க. ஆரியங்காவு அய்யப்பன கும்பிட்டு, கொஞ்சம் தள்ளி போனா லெப்ட்ல பாலருவின்னு போட்ருப்பாங்க. கேரள வனத்துறை கட்டுப்பாட்டுல உள்ள இடம். காலை 7.30 லிருந்து சாயங்காலம் 5 மணி வரை உள்ள அனுமதிப்பாங்க.

அதுக்கப்புறம் தென்மலை. அங்க போட்டிங் போகலாம். 1 மணி நேரம் போட்டிங் கூப்பிட்டு போவாங்க. கேரளா அரசு தென்மலையை ஒரு சுற்றுலாத்தலமா டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கு.


மூணாறு போறவுக இத மட்டும் கேட்டுக்குங்க. மூணார்ல இருந்து ஊருக்கு திரும்புறீகள்ல, அப்ப சாயங்காலம் 4 மணிக்கு கிளம்புங்க. மலைல இருந்து இறங்க, உடுமலைப்பேட்டை பாதை இருக்கு. அந்தப்பாதைல வந்தா மறையூர்னு ஒரு ஊர் வரும். அங்க இருந்து 6 மணிக்கு கௌம்புனா, 15 கிலோமீட்டர் தூரத்துக்கு வனத்துறையின் காடு. காட்டு மிருகங்கள் உலாவுற நேரம். மான்கள் கூட்டம் கூட்டமா திரியும். யானைக்கூட்டம் பாக்க கண்டிப்பா சான்ஸ் இருக்கு. நீங்க மச்சக்காரங்கன்னு வச்சுக்கங்க, யானையை நீங்க போற ரோட்லயே நேருக்கு நேரா சந்திக்கலாம்.

குற்றாலம்

சிவபெருமான் பார்வதி திருமணம் திருக்கயிலாய மலையில் நடைபெற்ற போது அக்கல்யாணத்தை காணவந்த கூட்டத்தால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்ய அனுப்பப்பட்ட குறுமுனி அகத்தியர் வந்தமர்ந்த இடம் தான் பொதிகை மலையான குற்றாலம்.

குற்றாலக் குறவஞ்சி படிக்கலைன்னாலும் எல்லோரும் கேள்வியாவது பட்டிருப்பீங்க.

குற்றாலத்திலே குளிக்கிற அனுபவம் ஒரு தனி சுகம். அதுலயும் அருவில குளிக்கும் போது எருமைமாடு மாதிரி ஆடாம அசையாம ஒரே இடத்துல நின்னுகிட்டே மேலே இருந்து விழுகிற தண்ணில நிக்கிற சுகமே அலாதியானது. குற்றாலத்துல குளிக்கப்போனா, டக்குனு குளிச்சுப்புட்டு வெளியே வராம, நல்லா நின்னு குளிங். வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்.

மெயின் அருவில கம்பிய பிடிச்சுக்கிட்டு, மேல இருந்து விழுற தண்ணில தடதடன்னு முதுகில அடி வாங்குற சுகம், ஐந்தருவில இடுக்குக்கு போய் குளிச்சுட்டு வர்ற த்ரில், பழைய குற்றாலத்துல நிதானமான குளியல், புலியருவில தொட்டிக்குள்ள நிக்கிற சுகம், இதெல்லாம் அனுபவிக்க குடுத்து வைக்கனும்.

அருவிக்கப்புறம் குற்றாலம் மக்கள். குற்றாலத்துல தெரிஞ்ச ஆள் இருந்து நீங்க தங்குற விடுதில, போன் பண்ணி கேட்டா, எப்ப வந்தா நல்லாருக்கும், அருவிகளில் தண்ணீர் விழும் நிலவரம், ரொம்ப டீடெய்லா சொல்வாங்க.

குற்றால அருவியை விட சுகம், அந்தப்பகுதி மக்களோட மனம். வழி மாறிப்போய் , யாரையாவது வழி கேட்டா வழி கரெக்டா சொல்வாங்க. அதை கேக்குற, பாக்குற, இன்னொரு ஆளும் "அண்ணாச்சி நீங்க வந்திட்டீக"ன்னு சொல்லி கரெக்டான வழி சொல்லுவாக.

அருவில குளிக்கும் போது எண்ணெய் தேச்சு ஊறவச்சு கொஞ்ச நேரம் கழிச்சு குளிங்க. புத்துணர்ச்சி தெரியும். ஆயில் மசாஜ்ல, எண்ணெய் தேச்சுவிட்டு உங்களை படுக்கப்போட்டு, உட்கார வைச்சு ஒரு உலுக்கு உலுக்கி எடுப்பான் பாருங்க, அது சுகம்.

குற்றாலம்னா குரங்குகள் இல்லாமலா? குரங்குகளுக்கு ஏதாவது குடுத்திட்டு வாங்க. குற்றாலத்துல ஜாதிக்காய் ஊறுகாய் தனிசுவை. அதை மாதிரி பன்னீர் கொய்யா, ரம்டான், மங்குஸ்கான் பழங்கள் அவ்வளவு இளசா இருக்கும். பதநீர் அவ்வளவு டேஸ்ட்டானது.

வீட்ல செடி வளக்குறவங்களுக்கு செடி வாங்க குற்றாலத்துல நிறைய நர்சரி இருக்கு. முக்கியமானது மெயின் அருவில இருந்து ஐந்தருவிக்கு போற வழில இருக்ற அட்சயா ஹோட்டல் பின்னாடி இருக்க போத்தி நர்சரி. அங்க வாங்கற செடிகள்ல வெரைட்டி இருக்கும். விலையும் ரொம்ப சீப். காக்ஸ்டல்ல பல ரகம், போன்சாய் மரக்கன்றுகள், என்ன செடி வேணும்னாலும் கிடைக்கும்.

பார்டர் புரோட்டாக் கடை, கேரளா பார்டர்னு நெனக்காதீங்க. செங்கோட்டைல, பிரானூர் பார்டர்னு ஒரு இடம் இருக்கு, அங்க இருக்க ரஹ்மத் புரோட்டாக்கடை ரொம்ப பிரபலம்.

குற்றாலம் வருஷத்துக்கு ஒரு தடவை போய்ட்டு வர வேண்டிய இடம்.

சினிமா விநியோகஸ்தர்கள் பைனான்சியர்கள்

இப்பவும் சினிமா பைனான்சியர்கள் இருக்காங்க. ஆனா மிக குறைந்த அளவுலதான். கைல காசே இல்லாம பைனான்சியர்கிட்ட கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள்ள லாபமும் பாத்துக்கிட்டு வந்தாங்க ஒரு காலத்துல.

இப்ப பல்வேறு காரணங்களால படத்த குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிக்க முடியறதில்லை. மொதல்ல படத்தை அடமானம் எழுதி வாங்கிட்டு பணம் குடுத்த பைனான்சியர் இப்ப படம் எடுக்கிறவங்க கிட்ட ஏதாவது சொத்து இருந்தாஅத எழுதி வாங்கிட்டு பணம் குடுக்கிறாங்க.

இப்ப சூழ்நிலை. கைல முழுசா காச வச்சிருந்தா தான் படம் எடுக்க முடியும். படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணவும் முடியும். அதேபோல பட விநியோகஸ்தகர்கள். அவங்களும் நெறயப்பேர் படம் விநியோகிக்கிறதை நிப்பாட்டிட்டு அவங்க தொழில பாத்துகிட்டு இருக்காங்க.

ஒரு காலத்துல திரைப்படங்கள் ஓடி, படத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர் எல்லோருக்கும் லாபத்தை சம்பாதிச்சு கொடுத்தாச்சு.

எவ்வளவு நாளைக்கு படத்தை வாங்கி விநியோகம் பண்ணி நஷ்டப்பட முடியும்? விநியோகம் பண்றவங்க ரொம்ப கம்மி.

இப்பல்லாம் அதிக படங்கள் நேரடி ரிலீஸ் தான். தயாரிப்பாளரே நேரடியா திரையரங்குகளில் ரிலீஸ் பண்றாங்க.

Sunday, August 3, 2008

பாட்டும் காமெடியும்

திரைப்படப் பாடல்கள் மக்களை Complete ஆக Relax பண்ணுது. அத யாரும் மறுக்க முடியாது. அந்த காலத்து எம்.ஜி.ஆர்., சிவாஜி டூயட் பாடல்கள். M.S. விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் வந்த பாடல்கள் . ஜானகி, சுசீலா, P.B. சீனிவாஸ், TMS பாடல்கள் இன்னைக்கும் தாலாட்டக் கூடியவை.

அடுத்து வந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள், அடுத்து A.R. ரகுமானின் இசை, அதுக்கடுத்து ஹாரிஸ் ஜெயராஜ், இப்ப யுவன் சங்கர் ராஜா. சங்கர் - கணேஷ், T. ராஜேந்தர், S.A. ராஜ்குமார் இவர்களின் இசையும் மனதை மயக்கின.

கண்ணதாசன் பாடல் வரிகளுக்குப் பின்னர் வைரமுத்துவின் வைர வரிகள், T. ராஜேந்தரின் வரிகள், பா.விஜய், முத்துக்குமார், இன்னைக்கு பாட்டெழுத நெறய பேர் இருக்காங்க.

வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும். வாழ்க்கைல சிரிக்கிறதுக்கு இன்னைக்கு இருக்க வாய்ப்புகள் ரொம்ப கம்மி. படங்கள்ல வர்ற காமெடி மக்களை சிரிக்க வைக்குது.

நல்ல கதையும், நல்ல காமெடியும், நல்ல இசையும் கலந்தா நிச்சயமா அது மிகப்பெரிய ஹிட். இது சரித்திரம். காமெடி படத்தோட வெற்றி ஒன்றி வரும்போது படத்தைப் பெரிய level-ல கொண்டு போகுது.

அந்த காலத்துல N.S. கிருஷ்ணன், அப்புறம் சந்திரபாபு, அதுக்கப்புறம் T.S.பாலையா, T.R. ராமச்சந்திரன், உசிலை மணி. நாகேஷ் காலத்துல காமெடி டிராக் படத்துக்கு அவசியமாயிருச்சு. குமரிமுத்து, என்னத்த கண்னையா, கல்லாபெட்டி சிங்காரம், லூஸ் மோகன், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், MRR வாசு இவங்களும் சிரிக்க வைச்சாங்க. காமெடில நாகேஷ்க்கு அப்புறம் கொடிகட்டிப் பறந்ததது கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் தான். அதுக்கப்புறம் விவேக், வைகைப் புயல் வடிவேல், வடிவேல் காமெடி தான் கவுண்டமணி-செந்திலுக்கு அப்புறம் டாப்.

கதாநாயகனே நகைச்சுவைல கலக்குனது ரஜினி மட்டும் தான். கமலஹாசனும் கல்யாணராமன், தெனாலி படங்கள்ல தூள் கிளப்பியிருப்பார்.

கரகாட்டக்காரன் படத்தோட மிகப்பெரிய வெற்றில காமெடியோட பங்கு அதிகம். அன்பே வாவின் வெற்றியிலும் நகைச்சுவையோட பங்கு கணிசமானது.

சந்திரமுகி படத்தோட வெற்றிய வரிசைப்படுத்தினா 1) ரஜினி 2) வடிவேல் காமெடி 3) ஜோதிகா. சந்திரமுகிக்கு அப்புறம் வந்த சிவாஜி பெரிய ஹிட் ஆகல. அதனால இப்ப ரஜினியோட குசேலன்ல வடிவேல் இருக்கார்.

ஆக பாடல்கள், நகைச்சுவை, மக்களை ரிலாக்ஸ் பண்ணுது. இது மறுக்க முடியாத உண்மை.

நகைச்சுவை நடிகைகள்ல நடிகர்கள் ஜொலிச்ச அளவுக்கு யாரும் பெரிய அளவுல வரலை.

மதுரம், மாதவி, சச்சு, ஆச்சி மனோராமா, கோவை சரளா இப்படி ரொம்ப சுருக்கமானவங்க தான். கோவை சரளாவுக்கப்புறம் காமெடி நடிகைகளே புதுசா வரலை.


முக்கியமானவங்க ஆச்சி மனோரமா. ஆயிரம் படங்களைத் தாண்டி அவங்க நகைச்சுவைல கொடிகட்டிப் பறந்த அளவுக்கு, குணச்சித்திர கேரக்டர்கள்லயும் வாழ்ந்து காட்டியிருக்காங்க.

வீட்ல Home theatre, VCD, Carல ஆடியோ, இரண்டு காதுலயும் வயர மாட்டிக்கிட்டு வாக்கிங் போகும்போது, சைக்கிள்ல போகும்போது, டூவீலர்ல போகும்போது, பாட்டு கேட்டுக்கிட்டு போறவங்க எண்ணிக்கை அதிகம். மக்கள் இசையை விரும்புறாங்க இது மிகப்பெரிய உண்மை.

காலர் டியூன், ஹலோ டியூன்னுன்னு செல்போன்ல பாருங்க, நீங்க ஒங்க மனசுக்குப் பிடிச்ச பாட்டை வச்சுக்கலாம். சினிமா பாட்டு மட்டுமல்ல, பக்திப்பாட்டும் தான். இசைமயம் நாடெங்கும்.

இயக்குநர் ஜீவரத்னம்

இவர் இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டர்.ஆஸ்கார் விருதுகள், தேசிய, மாநில விருதுகள் பெறுவதற்குத் தகுதியானவர். அதற்கான நேரத்துக்காக காத்திருக்கார். அப்படியெல்லாம் கிடையாது. இவர் இதுவரைக்கும் எத்தனை படம் குடுத்திருக்கிறார்ன்னுல்லாம் detail கிடையாது. 'மேகம்' னு ஒரு படத்தை டைரக்ட் பண்றார். அவர் வண்ணத்திரைனு ஒரு தமிழ் சினிமா வாரஇதழ் 17.07.2008-ல ஒரு பேட்டி குடுத்திருக்கார்.

அவர் சொல்லியிருக்கார். "எல்லா மதத்தினரும் கையெடுத்துக் கும்பிடும் கடவுள் மருத்துவர். அப்படிப்பட்ட மருத்துவர் நோயாளிகளின் நோயைக் குணப்படுத்தாமல், அவர்களின் மனதை ரணப்படுத்துவது நியாயமா? அப்பாவிகளைப் பற்றி நான் எடுத்திருக்கும் காட்சிகளால் நிறைய எதிர்பார்ப்புகள் வரும், தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவற்றை நியாயப்படுத்துவதற்காக தயாராக இருக்கிறேன். நிச்சயம் இந்தப்படத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜீவரத்னம்.

என்ன மாற்றம் உண்டாகும்னு நெனக்கிறார். எல்லா நோயாளிகளும் டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்குறத விட்டுட்டு ஜீவரத்னத்துக்கிட்ட treatmentக்குப் போகப்போறாங்க, பாவம் டாக்டர்கள்லாம் ஈ ஓட்ட போறாங்க இப்படி ஒரு காட்சி அவர் மனசுல ஓடுதுன்னு நெனக்கிறேன்.

உலகத்துல புனிதமான தொழில் 1st ஆசிரியர் தொழில். 2nd டாக்டர் தான். அதுக்கப்புறம் தான் மத்த தொழில்லாம்.


School-ல பிளஸ்டூ முடிச்சு ரிசல்ட் வந்தவுடனே ஸ்டேட் டாப் Rankers குடுக்கிற பேட்டிய படிங்க ஜீவரத்னம். "நான் என்ஜீனியர் ஆகப்போறேன். நான் டாக்டருக்குப் படிச்சு மக்களுக்கு சேவை செய்யப்போறேன்." அப்டீன்னு தான் மாணவர்களோட பேட்டி இருக்குமே தவிர "நான் சினிமாக்காரன் ஆகப்போறேன்னு" சொல்றானா ஜீவரத்னம்.

இப்ப Train-ஐ எடுத்துக்கங்க. ரிசர்வ் பண்ற பாரத்தில If you are a Doctor Please mention அப்படின்னு போட்டிருக்கும். நீ சினிமாக்காரனா அப்படிங்கற வார்த்தைய Reservation பாரத்தில பாத்திருக்கீங்களா ஜீவரத்னம்.

Internation Airport-ல டாக்டர்னா தனி மரியாதை உண்டு. சினிமாக்காரனுக்கு கிடையாது. பிரகாச நடிகர் ஒரு தடவை Airportல அவஸ்தைப் பட்டிருக்கார்.

Medico legal கேஸ்ல டாக்டருடைய கருத்து தான் முக்கியமானதுன்னு சுப்ரீம் கோர்ட்லயே சொல்லியிருக்காங்க. சினிமாக்காரன் கருத்து சுப்ரீம் கோர்ட்ல எடுப்பாங்களா ஜீவரத்னம் ?.

Court-ல சாட்சி சொல்லப்போற டாக்டர், Court hall-ல வக்கீல்கள் போலீஸ் அதிகாரிகளோட உட்காருவாங்க. சினிமாக்காரன் சாட்சி சொல்லப்போனா அந்த மாதிரி உட்கார முடியாது ஜீவரத்னம்.

சினிமாக் காரங்களப் பத்தி எழுதுனா நாஸ்தியாயிரும் ஜீவரத்னம்.

"நான் சினிமாவுக்கு வந்ததே மது, மாது ஈஸியா கெடைக்கும்கிறதுக்கு தான்" இது டைரக்டர் லிங்குசாமி கொடுத்த பேட்டி.

வாளமீனு வயிற்றை Caravan-க்குள் தடவிய தயாரிப்பாளர்னு ஒரு News.

நடிகைங்கிறதே உலகத்தில முதல்ல தோன்றின தொழில செய்வதுக்கான visiting card தான். நட்பு நடிகை, கண்ணழகி நடிகைய பத்தி செய்திவராத நாள் இருக்கா?

அந்த நடிகை அந்த ஆஸ்பத்திரில போய் வயித்தைக் கழுவிட்டு வந்தார். இது சாதாரணமான News. கலைச்சேவைன்னு வெளிநாட்டில போய் என்ன செய்றீங்க ? எல்லாருக்கும் தெரியும்.

30 வருஷத்துக்கு முன்னால தவறான உறவுகளைப் பத்தி படமெடுத்தார் ஒரு பிரபல இயக்குநர். அந்த படத்தப் பாத்து கெட்டவங்க எத்தனை பேர் ?. நூறாவது நாள்னு ஒரு படம். அதைப்பாத்து தான் கொலை செஞ்சேன். இது ஒரு கொலையாளியின் வாக்கு மூலம்.

சமுதாயத்தை சீரழிக்கிறதுல முதல் இடம் சினிமாவுக்குத் தான் மிஸ்டர் ஜீவரத்னம்.

படம்கிறது ஒரு பொழுதுபோக்கு. திரைப்படத்துறையில இருக்கவங்க வானத்துல இருக்கவங்க இல்ல. நீங்களும் சராசரி மனிதன் தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைகைப்புயல் வடிவேலு இவங்களை விட தனிநபர் வருமானம் ஈட்டக்கூடிய டாக்டர்கள் நெறய இருக்காங்க. உங்க சுயநலத்துக்காக, உங்கள் வருமானத்துக்காக, புனிதமான தொழில தவறா சித்தரிக்காதீங்க.

ஒங்க படம் வந்தபிறகு டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்காம யாராவது இருக்கப் போறாங்களா? பிரதமர் மன்மோகன் சிங் cataract ஆபரேட் பண்ணது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பண்ணது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்தது, தமிழகத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் எல்லாரும் மருத்துவம் பாக்குறது டாக்டர்கள் கிட்ட தான். சினிமாக்காரன் கிட்ட இல்ல.

சினிமாக்காரன் Hitch கூத்தாடி. அத மறக்காதீங்க Mr.ஜீவரத்னம். மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லுங்க. ஒங்க சுயலாபத்துக்காக சமுதாயத்தைச் சீரழிக்காதீங்க.

ஆசிரியரும், டாக்டரும் தான் உலக மக்களோட வாழ்க்கைக்கு அஸ்திவாரம். சினிமாக்காரன் இல்ல.

சினிமா தயாரிப்பாளர்கள்

இப்படி ஒரு இனம் இருக்கறத பத்தி இன்னைக்கு இருக்கற நடிகர், நடிகர், நடிகைகள் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. இயக்குநருக்குள்ள மரியாதை தயாரிப்பாளருக்கு நிச்சயமா கிடையாது.

எம்.ஜ.ஆர், சிவாஜி மற்றும் அந்த காலத்து நடிகர்கள், தயாரிப்பாளருக்கு எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லுவாங்க. இப்ப அந்த மரியாதை கொடுக்கற நடிகர்கள் ஒரு சிலர் தான்.

சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய இருந்திச்சி. பழங்கால நிறுவனங்கள்ல இன்னைக்கு AVM, சத்யஜோதி பிலிம்ஸ், கலைப்புலி தாணுன்னு இருக்காங்க. AVMல வருஷத்துக்கு ஒரு படம் 3 அல்லது 4 படம் பண்ணுவாங்க, சத்யஜோதில வருஷத்துக்கு ஒரு படம் கண்டிப்பா பண்ணுவாங்க, கலைப்புலி தாணுவும் அடுத்தடுத்து படம் பண்ணுவார். இன்னைக்கு பாருங்க AVMல 3 இல்ல 4 வருஷத்துக்கு ஒரு படம் பண்றாங்க. அதே மாதிரி தான் சத்யஜோதியும், தாணுவும்.

இன்னைக்கு இருக்க படைப்பாளிகளை நம்பி கஷ்டப்பட அவங்க விரும்பலை. Companyயோட அடையாளத்துக்காகத்தான் இவ்வளவு இடைவெளி விட்டு படம் பண்றாங்க.

நடுவுல பெரிய அளவுல நெறய படம் பண்ணிய நிறைய தயாரிப்பாளர்கள் fieldட விட்டே ஒதுங்கிட்டாங்க.

K.T.குஞ்சுமோன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், திருடா திருடி கிருஷ்ணகாந்த், கஜினி சேலம் சந்திரசேகர், டைரக்டர் V.சேகர் இப்படி நெறய பேர் இருக்காங்க.

பழய திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் பண்ண தயங்குறாங்க. ஏன்னா, கதை கிடையாது, வெட்டி செலவு நெறய, குறிப்பிட்ட காலத்துல படத்தை முடிக்கிறது கிடையாது.

இப்போ சினிமா பண்ண வர்றாங்கன்னா, அதில சினிமாவ பத்தி அனுபவம் இல்லாதவங்கதான் கிட்டத்தட்ட முழுசும். தயாரிப்பாளர் புது டைரக்டர் ஒருத்தர்கிட்ட மாட்டுவான். ஒண்ணும் இல்லாத கதைய ஆஹா ஓஹோன்னு சொல்லி படமெடுக்க வச்சிருவார். தயாரிப்பாளரை சகல விதத்திலயும் கவனிச்சிருவாங்க. தயாரிப்பாளரும் மெய்மறந்து போய் காசை மட்டும் அள்ள\ளிக் கொட்டிக்கிட்டேயிருப்பார். மொதல்ல 1 கோடில முடிச்சிரலாம்பாங்க. அப்புறம் அந்தா இந்தான்னு 2, 3 கோடில கொண்டு வந்து விட்ருவாங்க. இதுல உண்மைல படத்துக்கு ஆன செலவு பாதிதான் இருக்கும். மீதிய ஒரு கூட்டமே பங்கு போட்டுருவாங்க.

படம் முடிஞ்சவுடனே பிஸினஸ் ஆகாது. சொந்தமா ரிலீஸ் பண்ணுவாங்க. பெட்டி 2 நாள்ல திரும்பி வந்துரும். இதான் அதிகமாக நடக்குது.

படம் தயாரிக்கிற ஆசைல இன்னொரு குரூப் 50 லட்சத்தை மட்டும் வச்சு ஆரம்பிச்சு, கடன் வாங்கி படம் எடுக்க, படம் Slowவா வளரும். கடைசில ஒன்னும் செய்ய முடியாம படம் டிராப் ஆயிரும்.

சினிமா தயாரிக்க வர்றவங்க சினிமாவ பத்தி நல்லா தெரிஞ்சி, கதை அறிவோட, வெட்டி செலவுக்கு வாய்ப்பு கொடுக்காம வந்தா நல்லா இருக்கும்.

சூப்பர்குட் பிலிம்ஸ் சவுத்ரி வரிசையா படம் பண்ணிக்கிட்டிருந்தார். அவரும் தயாரிப்பைக் குறைச்சுட்டார். சூர்யா மூவிஸ் A.M.ரத்னம் வரிசையா படம் பண்ணிக்கிட்டிருந்தார். அவரும் பீமாவுக்கு அப்புறம் சத்தமில்லாம இருக்கார். AASCAR ரவிச்சந்திரன் தான் இப்போதைக்கு தொடர்ச்சியா பண்ணிக்கிட்டிருக்கார்.

SAIMIRA இப்பதான் தயாரிப்புல எறங்குறாங்க. இன்னும் 2 வருஷம் கழிச்சுதான் அதைப்பத்தி சொல்ல முடியும்.

கதை இலாகா

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம் கதை, திரைக்கதை.

அந்தக் காலத்துல (Once upon a time) கதை இலாகான்னு டைட்டில் கார்டு போடுவாங்க. படத்துக்கான கதைய உருவாக்ககுறதுன்னு ஒரு Team இருந்துச்சு. கதை இலாகா தனியா இருக்கும். வசனகர்த்தா ஒருத்தர் இருப்பார். டைரக்டர் தனியா இருப்பார். படமும் நல்லா இருக்கும்.

அடுத்த காலகட்டம் கதாசிரியர் தனி. வசனம் தனி. டைரக்டர் தனி. கதாசிரியர் கிட்ட இருந்து கதைய வாங்கி ஒரு டைரக்டர் கிட்ட குடுத்து படம் பண்ணுவாங்க. அந்த periodலயும் படங்கள் நல்லா இருந்துச்சு.

அடுத்த கால கட்டத்துல தான், படங்களோட கதையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிச்சுது. கதை, திரைக்கத, டைரக்ஷன்னு எல்லாத்தையும் ஒரே ஆளு பாக்க ஆரம்பிச்சாங்க அப்படி ஜெயிச்சவங்க ரொம்ப கம்மி.

குறிப்பிட்ட நடிகருக்காக கதை பண்றாங்க. கதைல hero, தயாரிப்பாளர் தலையீடு இப்படி கதைய ஒக்கிடற வேலை நடக்குது. இப்ப கதைங்கிறதே இல்லாம போக ஆரம்பிச்சிருச்சி.

இப்ப வந்து நல்லா ஓடிக்கிட்டிருக்க சுப்ரமணியபுரம் டைரக்டர் ஒரு பேட்டில சொல்லியிருக்கார். எல்லா கதையும் எடுத்து முடிச்சாச்சு, கதைல கொஞ்சம் வித்தியாசம் தான் காமிக்க முடியும். இன்றைய படைப்பாளிகளின் கதை அறிவு, சிந்திக்கிற திறமை அவ்வளவு தான். அதனால் தான் படங்களோட தோல்வி.

சினிமாக்காறன்ட்ட technology இருக்கு. கதை இல்ல. கதை சொல்ல ஆள் இல்லாமலா இருக்காங்க? கதை கேட்கிறவனும் கதை அறிவு இல்லாம இருக்கான். படத்தோட தயாரிப்பாளரும் கதை அறிவு இல்லாம இருக்கான்.

இந்த டைரக்டர், இந்த Hero, இந்த Heroine அப்படின்னா கல்லா கட்டிரலாம்னு தான் படம் தயாரிக்க எறங்குறாங்களே ஒழிய, கதைய கண்டுக்கறதேயில்லை.

சினிமாக்காரனுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல கதய சினிமாவுல இல்லாதவங்கிட்ட தேடுங்க. கதை எழுதறதுக்கு சினிமா அனுபவம் தேவையில்லை.

நல்ல கதைகள் வரும் காலத்தில் தமிழ் சினிமா தலை நிமிரும்.

கதைக்கான concept நெறய இருக்கு, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல்.

சினிமா தவிர வேற வேலை இல்லையா ?

சினிமா தவிர வேற வேலை இல்லையா ?

அப்படி நெனக்காதே செல்லம். சினிமா மிகப்பெரிய மீடியம? நல்லதோ, கெட்டதோ சீக்கிரம் மக்களாண்டை பூயிரும்பா. சினிமா நூஸ் இல்லாமா பேப்பர் போடச்சொல்லு. ஒரு பத்திரிகையும் விக்காதுப்பா, தமிழனோட பிளட்ல அது மிக்ஸ் ஆயிருச்சுமே. அத எவனாலயும் மாத்த முடியாதுமா.

படத்த தியேட்டர்ல பாக்கலனாலும் Net-ல் திருட்டு VCD-ல படத்த பாத்ததுர்றானுவ. தமிழ்ப்பட Audio கேட்காம இருக்க முடியுமா?. நம்ம தலைவன் படம் ஜெயிச்சுதுன்னு வச்சுக்க, அப்பால நம்ம Heartல சந்தோஷம் பொங்கும் பாத்தியா, அதான்மா தமிழனோட அடிமனசு.

அப்புறம் சினிமாவா பத்தி ஏன் நெகட்டிவா எழுதுறன்னு கேட்குறியா, நெகடிவ்வ சுட்டி காண்பிக்கிறது கரீக்ட் பண்றதுக்குமா .


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி

உலகத்தை தமிழ் சினிமாவ காட்டி மயக்கனும் தலீவா, அதான் இந்த தொடரோட aimமா.

The standard of the Tamil cinema should raise above all the language films.

முனியப்பன் சினிமாவ பத்தி எழுதறத முடிச்சுட்டு வேற topic போயிருவான்.

தமிழ் சினிமாவப் பத்தி மட்டும் எழுதற writers பெருந்துளசி பழனிவேல், சுரா, ஜெ.பிஸ்மின்னு இருக்காங்க. முனியப்பன் போற போக்குல சினிமாவ touch பண்ணிட்டு போறவன். முனியப்பன் நெறய topic எழுதுவான். முதல் topic தான் தமிழ் சினிமா.

Sunday, July 20, 2008

சினிமா விளம்பரங்கள்


எந்த ஒரு பொருளுக்கும் Marketing தேவை.

சினிமா வியாபாரிகளைக் கேக்கவே வேணாம். Advertising-ல தூள் கிளப்புறாங்க. படம் பூஜை போடுறதுக்கு விளம்பரம், Shooting போறப்ப விளம்பரம், படப்பிடிப்பில் அப்படின்னு விளம்பரம், விரைவில் இசை வெளியீடுன்னு விளம்பரம், இதெல்லாம் சரித்தான். Marketing Strategy.

இந்த விளம்பரங்கள் படத்தப் பத்தின எதிர்பார்ப்ப கூட்டுதுன்னு நெனக்கிறாங்க. அந்த விளம்பரத்திலேயே படத்த பத்தி சினிமா பாக்குற மக்கள் தெரிஞ்சுக்கறாங்க. இந்தப் படத்த பார்க்கலாம், இதப் பார்க்கக் கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணிக்றாங்க.

இதுக்கிடைல படம் தயாரிப்புல இருக்கும்போதே படத்தோட டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர்னு பத்திரிகைல பேட்டியப் பாத்தீங்கனா சூப்பரா இருக்கும். "இந்தப்படம் Direct பண்றது, இப்படி ஒரு தயாரிப்பாளர் கெடச்சது என்னோட அதிர்ஷ்டம்" இது டைரக்டர். 'எனக்கு மொதல் படமா இருந்தாலும், எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து என்னை Shape பண்ணி பெரிய லெவலுக்கு கொண்டு போறதுக்கு உழைச்ச டைரக்டர மறக்கமாட்டேன்'. இது Hero. Heroine பொதுவா வெளிமாநிலமாத்தான் இருக்கும். Heroine பேட்டி "நான் என்னோட தாய்மொழில 3 படம் பண்ணியிருக்கேன். டைரக்டர் கதை சொன்னப்பவே ரொம்ப பிடிச்சுப்போச்சு" அப்படிம்பாங்க இந்த பேட்டிகள் அறிமுக நடிகர், நடிகை, புது டைரக்டர், புது தயாரிப்பாளர் படத்துக்கு.

பெரிய நடிகர், டைரக்டர் Production Companyனா பேட்டிய பாருங்க. நடிகர் "இப்படி ஒரு கதைக்காக wait பண்ணிட்டிருந்தேன். என் Film Career ல இது ஒரு டர்னிங் பாய்ண்ட்". நடிகை பொதுவா ஒரு முன்னணி நடிகையாதான் இருப்பாங்க. "கிளாமர் ரோல் மட்டும்னு நினைக்காதீங்க. என் கேரக்டர்ல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. படத்தோட அவுட்லைன் மட்டும் கேட்காதீங்க." இப்ப டைரக்டர் "இந்த ஹீரோவுக்காக இந்தக் கதையை ரெடி பண்ணி 7 வருஷம் காத்துக்கிட்டிருந்தேன். அவரும் பிஸி, நானும் பிஸி. ரெண்டுபேரும் சேர்ந்து இந்தப்படத்த பண்ண ஆரம்பிக்கிறதுக்கு இவ்வளவு நாள் ஆயிருச்சு. அவருக்கு அவ்வளவு பியூட்டிபுல் கதை. இந்தப்படம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்". தயாரிப்பு நிறுவனமும் பெரிய நிறுவனமாகத்தான் இருக்கும். "நடிகர், டைரக்டர், கதை முடிவான உடனே Shooting ஆரம்பிச்சிட்டோம். படம் நல்லா வரணும்கிறதுக்காக நல்லா செலவு பண்ணியிருக்கோம். படம் பிரமாதமா வந்திருக்கு. உலகம் பூரா ஒரே டயத்துல ரிலீஸ் பண்றோம். 1000 பிரிண்ட் போடறோம்."

படம் பூஜையிலிருந்து படம் திரைக்கு வர்றவர பேட்டிகள். இதுக்கு இடைல பெரிய நடிகர் படம்னா படத்தோட கதை இதுதான்னு சொல்லி பத்திரிகைல கற்பனை வெளியீடுகள் வேற.

படம் தியேட்டருக்கு வந்த பிறகு பாருங்க, விளம்பரத்த, அதிலேயே படம் புட்டுக்கிச்சுன்னு சொல்லிரலாம்.

1) மக்கள் வெள்ளம் அலைமோதும்
2) ஹாலிவுட் படங்களை மிஞ்சிய வசூல்
3) சூப்பர் டூப்பர் ஹிட்டு
4) முந்திய சாதனைகளை முறியடித்தது
5) தாய்க்குலங்கள் கூட்டம் அலைமோதும் (பொம்பளை ஆளுக இப்ப படம் பாக்க வர்றதே ரொம்ப கம்மி)
6) குடும்ப உறவுகளை மையப்படுத்தி அழகாக கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்
7) நடிகரின் விசுவரூப வெற்றி
8) முதலிடம் கொடுத்த டிவிக்கு நன்றி
9) இது மாதிரி கதை வந்ததேயில்லை - நன்றி ஒரு வாரப்பத்திரிகை

Saturday, July 19, 2008

சினிமா டிக்கட்

முனியப்பன் பக்கங்கள் (5)

சினிமா டிக்கெட் எப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும்.

1990 வரைக்கும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புன்னு பிரிச்சு ஒவ்வொரு Class-க்கும் தனித்தனி ரேட் வச்சிருப்பாங்க. Ticket Counter ல ஒரு rate எழுதி வச்சிருப்பானுக. Counterல அந்த rateக்கு தான் ticket

படம் House Full ஆன ஒடனே Black Marketல தியேட்டருக்கு வெளியே ticket விக்கிறதுக்குன்னே ஒரு group இருந்துச்சு. இடம் கிடைக்காதவங்க கள்ள மார்க்கெட் டிக்கெட்ட வாங்கிட்டு படம்பாக்க போவாங்க. 1990ல டிக்கெட் விலயை கூட்டனும்னு அரசாங்கத்துக்கு கோரிக்கை வச்சாங்க. தியேட்டரில் படம் பாக்க கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி கொடுத்துச்சு. Counter-ல எழுதியிருக்க ரேட்டுக்கே டிக்கெட்ட குடும்பாங்க. படம் house Full ஆனா black ல டிக்கட்ட வாங்கி பாப்பாங்க. இது 2001 வரைக்கும் தொடர்ந்துச்சு. Black-ல ticket விக்கறவனை Police பிடிச்சுட்டு போகும்

2001ல புதிய தமிழக அரசு அழைத்தவுடனே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்லாம் போய் அரசாங்கத்து கிட்ட போய் முறையிட்டாங்க. எங்க தொழில் ரொம்ப நசிஞ்சி போச்சு. அதனால திரைப்படம் வெளியிட்ட மொத ரெண்டு வாரத்துக்கு தியேட்டர்ல டிக்கட் கட்டணம் இல்லாம நாங்களே ஒரு நுழைவு கட்டணத்தை நிர்ணயிச்சு வாங்கிக்கிறோம்னாங்க. தமிழக அரசும் கட்டணத்தை கூட்டி மொத ரெண்டு வாரம் மட்டும் கூடுதலா வசூல் பண்ணிக்கலாம்னு உத்தரவு போட்டுச்சு.

Black Market யே காணோம் ஒழிஞ்சு போச்சு. தியேட்டர் கவுண்டர்லயே பகல் கொள்ளை, ராத்திரிக் கொள்ளை, கூட்டுக் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டானுவ. Black Market காரன விட சம்பாதிக்க ஆரம்பிச்சானுக. கொள்ளையடிக்கிறதுக்கு ஒரு limitடே இல்லை.

உச்ச நட்சத்திரம் படம்னா 400 ரூபா வரைக்கும் விக்கிறானுக. தியேட்டர் கவுண்டர்லயே ticket சீட்டுல நுழைவு coupon மட்டும் தான் எழுதியிருக்கானுக. ஆனா அதுல டிக்கட் இவ்வளவுன்னு ரேட் கிடையாது. படம் ரிலீஸ் டயத்துல 100 ரூபாய்க்கு குறைச்சு டிக்கெட்டே குடுக்கிறதில்ல. கூட்டம் குறைஞ்ச பிறகும் டிக்கெட் கவுன்ட்டர்ல என்ன ரேட் எழுதியிருக்கோ அதை விட double ரேட்தான் வாங்குறாங்க. இத படத்தை தியேட்டரை விட்டு தூக்குற வரைக்கும் செய்றாங்க. இத அரசாங்கமும் வேடிக்கை பாக்குது.

உச்ச நட்சத்திரத்தின் கடைசியா வந்தா சத்ரபதி படத்தோடOpening Show Ticket தலைநகர்ல ரூ1500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு)

இப்படி இருக்கும் போது எப்படிய்யா படம் பாக்க தியேட்டருக்கு போவானுக ....?

திரைப்படங்களின் வாழ்நாள்

முனியப்பன் பக்கங்கள் (4)

ஒரு காலத்துல திரைக்கு வந்த அத்தனை படமும் குறைஞ்சது 25நாள் ஓடும். நல்ல படம்னா, 100 நாள் 175 நாள். அது MGR, சிவாஜி காலம். எல்லா ஊர்லயும் ஓடி முடிக்க 3 வருஷம் ஆகும். ரஜினி, கமல் ஆரம்ப காலங்கள்ல அப்ப கூட இதே நிலை இருந்துச்சு சினிமா தான் மக்களுக்கு ஒரே பொழுது போக்கு.

அப்புறம் படிப்படியா திரைப்படங்கள் தியேட்டரை விட்டு சீக்கிரமே வெளியேற ஆரம்பிச்சது. நல்ல படங்கள் மட்டும் 50நாள் 100நாள் 175நாள் ஓட ஆரம்பிச்சது TV-ல, DD-ல திரைப்பட நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. வெள்ளிக்கிழமை ராத்திரி ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் திரைப்படம். மக்கள் இந்த ரெண்டு நேரமும் தெருவுல கூட நடமாடமாட்டாங்க.

அடுத்த காலகட்டம் 2நாள் 3நாள் ஓடக் கூடிய படங்கள்லாம் வர ஆரம்பிச்சது. பெரிய நடிகர்களின் படங்களும் 100 நாளை தாண்ட முடியாம போயிருச்சு. வெள்ளி விழா படங்களோட எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சது. அப்ப தனியார் சேனல்கள் நிறைய ஆரம்பிச்சாங்க. முக்கியமான நிகழ்ச்சியா எல்லா சேனல்லயும் திரைப்படங்கள், பாட்டுகள், கிளிப்பிங்ஸ் இடம் பெற ஆரம்பிச்சது. தியேட்டர்ல கூட்டம் குறைய ஆரம்பிச்ச உடனே, திரையுலகினர் எல்லாம் சேந்து TV மேல பழிய போட்டாங்க. எங்க வாழ்க்கையை TV கெடுத்துருச்சு அப்படின்னு பேச ஆரம்பிச்சாங்க.

TV-ல சினிமாவ காட்டுனதால தியேட்டர்ல கூட்டம் குறையல. உண்மை என்னன்னா இந்த கால கட்டத்துல மக்கள் சினிமா பாக்குறத குறைக்க ஆரம்பிச்சாங்க. ஏன்னா ஒட்டு மொத்தமா தமிழ்நாட்ல உள்ள பிள்ளைக எல்லாம் Engineering, Medical, MBA, MCA -னு படிக்கிறதுல வாழ்க்கைல முன்னேற ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாங்க Transport வசதிகள் வேன் டாக்ஸி அதிகமாச்சு. ஜனங்கள்லாம் கோவில், குளம், பிக்னிக்னு டூர் அடிக்க ஆரம்பிச்சாங்க. சினிமாவ மக்கள் மறக்க ஆரம்பிச்சு தமிழ்நாட்ல பாருங்க எல்லா ஜனமும் சம்பாதிக்க பொழைக்க ஆரம்பிச்சாங்க. டீக்கடை பெஞ்சுல ஒக்காந்திருக்கது வெட்டியா திரியறது எல்லாம் ரொம்பக் கொறைஞ்சிடுச்சி. எல்லாரும் வேலைபாக்க பொழைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது சினிமாக்காரனுக்கு புரியல TV-வந்து அவனுக வாழ்க்கையவே சீரழிச்சுட்டதா நெனக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்த காலகட்டம் பெரிய நடிகர்களோட படங்களே 20நாளைக்கு அப்புறம் காத்து வாங்க ஆரம்பிச்சிருச்சி ஒரு காட்சிக்கு 150பேர் வந்தாலே மிகப்பெரிய விஷயம். காட்சிய பாக்க ஆளில்லாம 4பேர் 5பேர் வந்தா எப்படி show காட்டுவான்? தியேட்டர்ல show வையே cancel பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 100 படம் வந்தா 10 படத்துக்கு போட்ட காசு திரும்பி வந்தாலே பெரிய விஷயமாயிருச்சு

மக்கள் ரொம்ப வெவரமாயிட்டாங்க. சினிமா ரசிகன், சினிமா பாக்கறவங்கன்னு ரெண்டு பிரிவா ஆயிருச்சு. சினிமா ரசிகன் அவனோட நடிகன் நடிச்ச படத்தை மட்டும் கண்டிப்பா பாத்துருவான். மத்த படத்த பாக்குறது ரெண்டாம்பட்சம். சினிமா பாக்குறவங்க குரூப் இருக்கு பாத்தியளா ரொம்ப ரொம்ப வெவரமானவுக. படம் தயாரிப்புல இருக்கும் போதே இந்தப்படத்தை பாக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணிருதாக

அப்ப அதிர்ச்சி வைத்தியம் சினிமாக்காரனுக்குத் தானவே வேணும். கண்டபடி படம் எடுக்கறத நிப்பாட்டி ஒழுங்கா படம் எடுத்தா படம் பாக்க வருவானுவ

மூணு வருடம் வாழ்நாளா இருந்த திரைப்படத்தோட இன்றைய வாழ்நாள் 100 நாட்களுக்குள் முடிந்துவிடுகிறது.

Friday, July 18, 2008

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் தமிழ்நாடு அரசு சார்பா நடந்த AIDS AWARENESS நிகழச்சிக்காக மதுரைல நடந்த ஒரு மீட்டிங்ல சிறப்பரையாற்றினார் கூட்டத்துல மதுரை மாவட்டத்துல உள்ள 80 பள்ளிகளின் ஆசிரியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். முனியப்பன் பேசி முடிச்சதும் ஒரு ஆசிரியை கேட்டார் ஒரு அதிரடிக் கேள்வி, தமிழர் பண்பாடு தொன்மையானது, ஒருவனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம் உள்ளது. அப்புறம் தமிழ்நாடு ஏன் இந்தியாவுல AIDS அதிகமா உள்ள மாநிலமா இருக்குன்னு கேட்டாங்க, முனியப்பன் பதில் சொன்னார் பாருங்க, மேடம் நீங்க நெனக்கிற கலாச்சாரம் ரொம்ப கம்மியான ஆளுங்ககிட்டதான் இருக்கு தகாத உறவுகள் அதிகமாக இருக்கதாலதான் அதிகமா இருக்குன்னார்.

இந்த ஒழுக்கக்குறைவு எப்படி வருதுன்னு பாருங்க TV சினிமால வர்ற சம்பவங்கள் நிச்சயமா மக்களோட மனச பாதிக்குது.

ARINDHAM CHAUDRY பத்தி கேளுங்க ஒரு பயலுக்கும் தெரியாது (ஒரு சிலரைத் தவிர) ஒரு சினிமா Star பத்தி கேளுங்க. அந்த Star பத்தி Detail ஆ சொல்லுவாங்க அப்படி இருக்கும்போது நடிகர்களின் தனிப்பட்ட வாழக்கையும் சினிமா ரசிகனுக்கு தெரியுது.

1) பழைய காலத்து சாம்பார் காதல் மன்னன் (3 பேரை திருமணம் செய்தவர்)

2)சட்டைய மாத்துற மாதிரி கணவர்களை மாற்றிய லட்சுமிகரமான நடிகை அவருக்குத் தப்பாமல் பிறந்த ஐஸ்வரிய நடிகை.

3) கற்பு நடிகையை ரகசிய தாலி கட்டி கைவிட்ட திலக நடிகர், உடனே சுந்தர இயக்குநரை கைபிடித்த கற்பு நடிகை.

4) முதலில் ஒரு நடிகர் இயக்குநரை திருமணம் பண்ணி அவரை விட்டுவிட்டு, ஒரு வெளிநாட்டுக்காரரை கைபிடித்து ஒரு குழந்தை பெற்று, அவரையும் விரட்டிவிட்டு ஒருகட்டுமஸ்தான Body guard நடிகருடன் வாழ்க்கை நடத்தி வரும் நடிகை.

5) கட்டுமஸ்து நடிகர் மட்டும் லேசானவரா ஒரு பெண்ணை காதல் மணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற, பின் ஒளி நடிகையின் அக்காவுக்காக படமெடுத்து அந்த நடிகையால் குடும்பத்தை சட்ட பூர்வமாக பிரிந்து அந்த நடிகையையும் கைவிட்டு இப்பொழுது வாழ்கையில் ரயில் பயணத்தில் இருக்கிறார்.

சினிமா ரசிகன் மட்டுமல்ல, உலகத் தமிழன் அனைவரும் பார்க்கும் திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சூழலில் ஒரு மனிதன் தவறுவதற்கு அக்கம்பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சினிமா, சினிமா நட்சத்திரங்களின் பங்கும் அடங்கும்.

லேட்டஸ்ட் சினிமா கிசுகிசு உதட்டோ டு உதடு கவ்வி லவ்விய நயன நடிகையும் விரல் வித்தை நடிகரும் பிரிந்து மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கின்றனர். இது மீடியாக்களால் பரபரப்பாக Flash செய்யப்படுகிறது.

முனியப்பன் பக்கங்கள்(2)

முனியப்பன் பக்கங்கள்(2)

நம்ம சினிமா ஆளுங்கள பாருங்க, remake-ல இறங்கிட்டாங்க, படமே remake. பழயபடத்த remake பண்றது, தெலுங்கு படத்த remake பண்றது, பழய பாட்ட remake பண்றது, அப்ப originality என்னாச்சு? அதான் பு ரியலன்னு இல்ல, அவங்க கற்பனை வத்திருச்சா, யோசிக்கிற திறமை இல்லையா?

நம்மாளுகளுக்கு ஒரு கதையோட அவுட்லைன மட்டும் சொல்லுவோம். இது நிசமா நடந்த உண்மைச் சம்பவம்

A 27 year Old woman was run over and killed by a train and her 30 year old lover injured as they stood kissing on a rail track in the Siberian city of Novosibirsk

இத படமாக்குற காதாசிரியர் டைரக்டரோட பேட்டி 'இதுவரைக்கும் யாரும் சொல்லாத உண்மைச் சம்பவத்தை படமாக்கணும்னு அதுக்கான கதைக் கருவை யோசிச்சிகிட்டிருப்பதான் இந்த சம்பவம் பத்தின news என் கண்லபட்ருச்சு. இத படிச்ச ஒடனே என்னால என் கண்ணுல கண்ணீர் வர்றத நிப்பாட்ட முடியல, எவ்வளவு வேதனை இருந்தா ரயில்வே டிராக்ல முத்தத்தை பரிமாறிக்கிட்டு ரெயில்ல அடிபட்டு வாழ்க்கைய முடிச்சிருக்கும் அந்தப்பொண்ணு.

இந்த outline ஐ வச்சி யோசிக்க ஆரம்பிச்சேன், காட்சிகள் தண்ணால வந்து விழுந்துகிட்டே இருக்கு ரெண்டே நாள்ல கதை, திரைக்கதை வசனத்தை எழுதிட்டேன். லைலா-மஜ்னு ரோமியோ-ஜீலியட், அம்பிகாபதி-அமராவதி வரிசைல நம்ப வீரமணி-வேலம்மா சரித்திரம்ங்க.'

இப்படி போகுது அவரோட பேட்டி, நீங்க கொஞ்சம் யோசிச்சு இந்த outlineஅ இப்ப இருக்க நம்மாளுக எப்படி சினிமாவுல கொண்டு வருவாங்கன்னு சொல்லுங்க......

முனியப்பன் பக்கங்கள்

முனியப்பன் பக்கங்கள்(1)

எல்லாருக்கும் வணக்கமுங்கோ. இதுப் பொய்ப்பேருன்னு சின்னப் பிள்ளைக்கும் தெரியுமுங்கோ. என் நண்பர் பேரை (எனக்கு 10 வயசு மூத்தவருங்க) இந்த தொடருக்காக எனக்கு நானே வச்சுக்கிட்டேங்க.

இந்தப் பக்கம் இருக்கறதே எனக்கு இப்பதானுங்க தெரியும், அதான் இவ்வளவு லேட்டு, இந்தப் பக்கத்துல என்ன எழுதலாம்னு யோசிச்சுப் பார்த்தேன், தமிழனைப் பத்திதான் எழுதனும்னு முடிவு பண்ணினேங்கோ.

தமிழனுக்கு என்ன தெரியும், வீரம், காதல், கிரிக்கெட், சினிமா இது நாலு தானுங்க எல்லா பயலுக்கும் தெரியும். விவசாயம், படிப்பு, தொழில பத்தி எழுதலன்னு நினைக்காதீங்க. அதெல்லாம் சம்பாத்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்பட்டதுங்க.

தமிழனோட அடிமனசில ஆழமா பதிஞ்சு இருக்க நாலுதான் காதல், வீரம், கிரிக்கெட்டு, சினிமா. இதில எல்லாத்தையும் ஒதுக்கிட்டு சினிமாவைப் பத்தி மட்டும் எழுதப்போறேனுங்க.