Friday, July 8, 2011

OAP உம்மா

OAP ங்கறது Old age pension. தமிழக அரசால் ஆதரவற்ற முதியோர்களுக்கு, விவசாயக் கூலிகளுக்கு, விதவைப் பெண்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, வயது 50ஐக் கடந்தும் மணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை. சுருக்கமா OAP. மாசா மாசம் ஒரு தொகை வந்துரும்.

மொதல்ல மாசம் 150 ரூபா, அப்புறம் 200 ரூபா , அதுக்கப்புறம் 250 ரூபா, பிறகு 400 ரூபா, அடுத்து 500 ரூபா, இப்ப மாசா மாசம் 1000 ரூபா.

இந்த திட்டத்துக்கு மனு போட்டு VAO, RI, தாசில்தார் கையெழுத்து வாங்கி கலெக்டர் ஆபிஸ்ல கொடுத்தா தகுதியானவங்களுக்கு சாங்சன் ஆயிரும்.

இந்த ஓஏபில வயதுச் சான்றிதழ் டாக்டர்கிட்ட வாங்கணும். முனியப்பனும் வயதுச் சான்றிதழ் போட்டுக் குடுத்துருவார். 1989ல இருந்து OAPக்கு வயதுச் சான்றிதழ் கொடுக்கும் முனியப்பன் அதுக்கு காசு வாங்குறது இல்லை...ஃப்ரீ ... எல்லாருக்கும்.

இந்த 22 வரு­த்துல ஒருத்தர் ஒரு கேக் வாங்கி கொடுத்திருக்கார். ஒருத்தர் ரெண்டு பச்சை வாழைப்பழம் கொடுத்திருக்கார். ஒரு கிழவி 10 ரூபாய கையில திணிச்சிட்டு போயிருக்கு.

ஒத்தக்கடை மார்க்கெட் ஏரியால இருந்து ஒரு கிழவி வரும். "அப்பே, நீ கையெழுத்து போட்டு எல்லாருக்கும் ரூபா வருதுப்பே"ன்னு முனியப்பன் மொகத்தோட அது மொகத்த வச்சு கொஞ்சி ஒரு முத்தம் - உம்மா கொடுத்துட்டுப் போயிரும்.

OAP நல்ல விசயம் ... அதுல வயதுச் சான்றிதழுக்குக் காசு வாங்காம கையெழுத்து போடுறது, ஒரு சேவை - சர்வீஸ். முனியப்பனுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு.