Thursday, March 31, 2011

நம்மாளல முடியாதுப்பா - அஷூ

அஷூ, அமருக்கு மார்ச் 21ந் தேதி முழுப் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டுட்டாங்க. கிட்டத்தட்ட 80 நாள் லீவு, அந்த 80 நாள்ல அவங்களுக்கு பிரயோஜனமா ஏதாவது செய்யனும்ல. முனியப்பன் ஐடியா பண்ணார். அமருக்கு டென்னிஸ், அஷிவுக்கு அதலெடிக்ஸ்னு. அமர் கொஞ்சம் ஃபேவரான ஆள், டென்னிஸ்ன ஒடனே ஒத்துக்கிட்டார். பாப்ளி பிரதர்ஸ் கடையில போய் டென்னிஸ் ராக்கெட், பால் வாங்கியாச்சு.

நைட் வீட்டு காம்பவுண்ட் சுவர்ல அடிச்சு அமர் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டார். அஷூவும், முனியப்பனும் ­ட்டில்.

முறைப்படி ஆட பழக்கணும்ல, கோச் வச்சு பழகுறது தான் நல்லாயிருக்கும். அஷூ, அமர அவுக அப்பா கூட ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்துக்கு முனியப்பன் அனுப்பி வச்சார். அவங்க போனப்ப டென்னிஸ் கோச் இல்லாததால நேரா யூனியன் கிளப்ல போய் அங்க டென்னிஸ் ஆட சேந்துட்டார். கோச் லட்சுமணன்.

நம்ம அஷி ரேஸ்கோர்ஸ்ல ஓடுறதுக்காக போனார்ல. அங்க இருந்த கோச் ஓடுறதுக்கு காலைல 5.30 டூ 6.30 வரச் சொல்லிருக்கார். முனியப்பன் நைட் கிளினிக் முடிச்சு வீட்டுக்கு வந்த ஒடனே அஷூ கறாரா சொன்னார். "காலைல 5.30க்கு வரச் சொல்றாங்கப்பா. 5.30க்
கு அங்க போகணும்னா 5 மணிக்கு எந்திரிக்கணும். என்னால 7 மணிக்குத் தான் எந்திரிக்க முடியும்". " நம்மாளால முடியாதுப்பா ". அஷூவுக்கே உரிய நச்.

Tuesday, March 15, 2011

1 கோடியே 26 வட்சம். BPO

1 கோடியே 26 வட்சம். BPO

முனியப்பனின் நோயாளிகளில் ஒருவர் S. இந்தியாவிலேயே ஆள் பலம் அதிகமான மத்திய அரசு வேலைல S இருக்கார். அவருக்கு காலேஜ் படிக்கிற 2 பொண்ணுக, லேட்டா பொறந்த பய 1st படிக்கிறான். அப்ப தற்செயலா Clinic வெளிய காய்கறி வாங்கப் போன எடத்துல முனியப்பன் கிட்ட S சொன்னார். "BPO ஆரம்பிச்சிருக்கேன்" னு.

முனியப்பன் கேட்டார் "ஒங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையே. எப்படி ரன் பண்றீங்க?" S. மச்சினன் இருக்கான், அவனும் நானும் பாத்துக்கறோம்.

முனியப்பன் "எத்தனை பேர் வேல பாக்குறாங்க"
S, "100 பேர் வேல பாக்குறாங்க". முனியப்பன் " எப்படி சம்பளம் போடுறீங்க". S. "Income வருது".

முனியப்பனுக்கு ஒரே ஆச்சர்யம் மாசம் 25 ஆயிரம் சம்பளம் வாங்குற ஒருத்தர், தனியா பெரிய அளவுல மாசம் 4 லட்ச ரூவா சம்பளம் கொடுக்ற அளவுக்கு வந்திருக்காரேன்னு. S ன் மனைவி Ladies Tailor. தனியா டெய்லரிங் கடை வச்சு அதுல 5 பேர் வேல பாக்குறாங்க.
டெய்லரிங் 12 வருஷமா ஓடுது. சிறுகச் சிறுக ரூபாய் சேத்து S தொழில் ஆரம்பிச்சுருக்கார்ன்னு ஒரு தோற்றம் முனியப்பனுக்கு.

அப்புறம் உலகம் பூரா பொருளாதார வீழ்ச்சி வருது. அப்ப ஒரு நாள் காய்கறி கடைல Sஜ மீட் பண்ண முனியப்பன் கேட்டார், "ஒங்களுக்கு எதும் பாதிப்பு இருக்கா ?" S. "அதெல்லாம் ஒண்ணுமில்ல".

ரொம்ப நாள் கழிச்சு S முனியப்பன் Clinic வர்றார். லீவு வேனும். அவர் வேல பாக்குற மத்திய அரசு துறை மருத்துவமனைல Sick பண்ணியிருக்கார், 1 மாசம். அதுக்கப்புறம் 8 மாச லீவு வேணும்னார். முனியப்பன் "ரொம்ப நான் ஒங்கள பாக்கலியே" S. "மிசஸ் Uterus ஆப்பரேஷன் சென்னைல பண்ணோம். அதுலருந்து சென்னைல தான் எல்லாரும் இருக்கோம்னார். S வேல பாக்குற துறை விடுமுறை. மெடிக்கல் சர்ட்டிபிகேட்ட்டுக்கு தனியா form வேனும். அத வாங்கிகிட்டு நாளைக்கு வாங்க. போட்டுத்தாரேன்னு முனியப்பன் சொன்னார். சரின்னு S கெளம்பிட்டார்.

S கெளம்பிப் போன 40 நிமிஷம் கழிச்சு ஒருத்தர் வந்தார். "Intelligence wing" ல இருந்து வாரேன். S வந்தாரா" ன்னு கேட்கவும் முனியப்பன் "ஆமா, என்ன விஷயம்" னு கேட்டார். Intelligence "S ஆபிஸ்ல பணத்தை எடுத்துட்¡ர்". முனியப்மபன் "எவ்வளவு பணம்" Intelligence " 1 கோடியே 26 லட்சம்" தொகைய கேட்ட ஒடனே முனியப்பனுக்கு ஆச்சர்யம் இவ்வளவு பெரிய அமெளண்டா ? முனியப்பன் திருப்பி ஒரு தடவை Amount எவ்வளவு கேட்டார், S அவ்வளவு பெரிய தொகைய சுட்டார்ன்னு நம்ப முடியல.

Intelligence வரிசையா சொன்னார். " S ன் மனைவி 2010 February ல வெளிநாட்டுக்கு Escape" S ரூபாய விட்டது BPOல தான். S December 2009ல காணாம போனவர். 16.09.2010 ல மதுரைக்கு வந்து Autoல சுத்திக்கிட்டிருக்கார். S வந்த தகவல் கெடைச்சு S அ பாலோ பண்ணிக்கிட்டிருக்கோம்னார் Intelligence. S இருந்த வீடை பத்தி முனியப்பன்கிட்ட தகவல் வாங்கிக்கிட்ட Intelligence அடுத்த நாள் காலைல S வந்தா அவர் வந்த தகவல் S கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாள் Sம் வரல. Intelligence ம் வரல. S escape ஆயிருக்கானும்.இல்ல கோழிய அமுக்குற மாதிரி S அ Intelligence அமுக்கியிருக்கனும்.

மனிதனுடைய அழிவுக்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூணூல எதாவது ஒண்ணுதான். நல்லா இருந்த S திடீர்னு இப்படி தவறான பாதைல எப்படி போனார்னு தெரியல.

Wednesday, March 9, 2011

வாக்கிங் காபி

முனியப்பன் மதுரைல பைபாஸ் ரோட்ல குடியிருக்கவர். அந்தக் காலத்துல மதுரைக்கு பைபாஸ் ரோடா போட்டது இப்ப கிட்டத்தட்ட ஹார்ட் ஆஃப் த சிட்டி மாதிரி ஆயிருச்சு. மக்கள் தொகை, வாகனங்களோட எண்ணிக்கை பெருகி ஃபுல்லா டிராஃபிக் தான்.

பைபாஸ் ரோட்ல காலைல வாக்கிங் போற ஆளுகள்ல நம்ம முனியப்பனும் ஒருவர். அப்பா நீதிபதி கு.வேலுசாமி கிட்ட இருந்து பழகுனது தான் வாக்கிங். முனியப்பன் பக்கங்கள்ல பழைய பதிவில சோடியம் வேப்பர் லேம்ப் வெளிச்சத்துல வாக்கிங் போறதப் பத்தி முனியப்பன் ஒரு கவிதையாவே போட்டிருக்கார். முனியப்பனோட வாக்கிங் நேரம் காலை 5.30 டூ 6.00

காலைல வாக்கிங் போறப்ப எதுத்தாப்புல வர்ற ஆளு தயாளன். ஒரு சிரிப்பு அவ்வளவு தான். இப்ப கொஞ்ச நாளா தயாளனக் காணோம். இன்னிக்கு ட்ரீட்மெண்டுக்கு வந்தப்ப கேட்டா தயாளனும் வாக்கிங் போய்க்கிட்டு தான் இருக்கார். அப்ப டைமிங் பத்தி விசாரிச்சா 5.50 டூ 6.10.

பைபாஸ் ரோடு EMAR ஹோட்டல்ல காபி சாப்பிடறதா சொன்னார். முனியப்பன் அந்த ஹோட்டலைக் கடக்கும் போது மணி சரியா 5.55. அதான் தயாளனைப் பார்க்க முடியலை.

அப்ப தயாளன் EMAR ஹோட்டல் காபிய பத்தி சொன்னார். காலைல 5.30ல இருந்து 7.30 வரைக்கும் வாக்கிங் போறவங்க காபி சாப்பிட அங்க வர்றாங்க. அந்த நேரத்துல அங்க காபி சாப்பிடறவங்க எல்லாருக்கும் காபி 6 ரூபா தான். காபி பேரே வாக்கிங் காபி. காலைல 7.30க்கு அப்புறம் அதே காபி அதே அளவு 10 ரூபா.வாக்கிங் போறவங்கள உற்சாகப்படுத்தற இந்த வாக்கிங் காபி குடுக்கற EMAR ஹோட்டலைப் பாராட்டலாம். லாபம் கம்மியாயிருக்கும். இருந்தாலும் இது நச்.