Friday, September 23, 2011

பால் பாய்

முனியப்பனோட அப்பா கே.வேலுசாமி பிஏ பிஎல்... சென்னை லா காலேஜில படிக்கிறப்ப டென்னிஸ் வெளையாண்டு பழகி 25 வரு­ம் தொடர்ச்சியா டென்னிஸ் வெளையாண்டவர். முனியப்பன் சின்னப்பையனா இருக்கும் போது அவுக அப்பாவுக்கு பந்து பொறுக்கி போட்டிருக்கார். அவுக அப்பா 40 வரு­த்துக்கு முன்னால வெளையாண்ட டென்னிஸ் ராக்கெட் முனியப்பன்கிட்ட இப்பவும் இருக்கு.

அமர் 10 வயசுக்கு பக்கத்துல வந்த ஒடனே, அவருக்கு ஒரு ஜூனியர் ராக்கெட் வாங்கிக் குடுத்து வீட்டு காம்பவுண்ட் சுவத்துல வால் பிராக்டீஸ் செய்யவைத்தார்.

அமருக்கு டென்னிஸ் கேம் பிடிச்சுப் போச்சு. ஒடனே அமர மதுரை யூனியன் கிளப்ல டென்னிஸ் கோச்சிங்குக்கு சேத்து விட்டார் முனியப்பன். அமர் எப்படி வெளையாடுறார்னு செக் பண்ண பத்து நாளைக்கு ஒரு தடவ முனியப்பனும் போயிருவார். ஏப்ரல், மே, ஜூன் காலைல கோச்சிங்.

ஜூலைல சாயங்கால டைம்ல மாத்திட்டாங்க. இதுல மேல ஊருக்குப் போயிட்டார் அமர். காலைல வெளையாண்டாத்தான் நல்லா இருக்கும். அப்புவோட எட்வர்டு ஹால்ல அமர் காலைல கோச்சிங் போக ஆரம்பிச்சார். ரெண்டு நாள் அப்பு, 4 நாள் யூனியன் கிளப். 3 மாசம் வெளையாண்டவுடனே அமர் மேட்ச் வெளையாடணும்னுட்டார்.

அப்ப சென்னைல ஜோலா அகாடமி டோர்னமெண்ட் வந்துச்சு. பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவுல மூணு ரவுண்ட்ல ஜெயிச்சிட்டார். 4 வது ரவுண்ட தாண்ட முடியலை. அந்த டோர்னமெண்ட்ல வின்னர் நம்ம வைகோ பேரன். இப்ப வெளையாடுற வெளையாட்ட அப்ப காமிச்சிருந்தா வைகோ பேரன் கூட அமர் மோதியிருப்பார்.

அப்புறம் மதுரை மாவட்ட அணித் தேர்வுக்கு போய்ட்டார். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெளையாடினார். வெளையாண்டவன் பூராம் 13,14 வயசு, நம்மாளு 10 வயசு.

அடுத்து மண்டல அளவிலான போட்டி. மொத ரவுண்ட்ல எஸ்பிஓஏ ஸ்கூல் பையன் 13 வயசு. அமர் அவனை ஜெயிச்சிட்டார். அடுத்த ரவுண்ட் டிவிஎஸ் ஸ்கூல் பையன், 14 வயசு.

4-3 பாய்ண்ட் இருந்தப்ப பெஸ்ட் ஆஃப் 7ன்னு மேட்ச்ச முடிச்சிட்டாங்க. அமருக்கு ரொம்ப வருத்தம். இன்னும் ஒனக்கு வயசு இருக்குப்பான்னு எல்லாரும் தேத்துனாங்க.

இப்ப வாரம் 6 நாள் அமர் டென்னிஸ் வெளையாடுறார். அதுல 3 நாள் அவர் கூட முனியப்பனும் போயிருவார். அமரும் அப்புவும் வெளையாடும் போது பால் சப்ளை பண்ற பால் பாய் வேலை நம்ம முனியப்பனுக்கு.

நம்ம அஷூ, இப்ப ரெண்டு வாரமா அமர் அண்ணன் கூட டென்னிஸ் கோர்ட்டுக்கு வர்றார். ஒரு நாள் எட்வர்டு ஹால், ஒருநாள் ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியம், ரெண்டுலயும் நம்ம பால் பாய் அஷூ குட்டி. முனியப்பனும், அஷூவும் பந்து பொறுக்கி பால் சப்ளை பண்ண அமர் டென்னிஸ் ஆடுறார்.

எட்வர்டு ஹால்ல ஆடுறப்ப அஷூவும் டென்னிஸ் வால் பிராக்டீஸ் பண்றார்.

அமருக்கு பிடிச்ச டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மற்றும் அமர் ஒரு டார்கெட் வச்சு டென்னிஸ் ஆடுறார், அஷூ .... பார்ப்போம்.

Saturday, August 27, 2011

வெளிய போய் நில்லு - அஷூ

நேத்து திடீர்னு அஷூ வாத்தியார் அவதாரம் எடுத்துட்டார். ஸ்டூடண்ட்ஸ் .... வழக்கம் போல அமர் அண்ணனும் முனியப்பனும் தான்.

அமர் அவர் வாங்குன ராமாயணம் புத்தகத்த எடுத்துக்கிட்டு அஷி சாரோட கிளாஸ்க்கு வந்துட்டார்.

அமர்கிட்ட ராமாயணப் புத்தகம் இருக்கிறதப் பாத்த முனியப்பன், ஆர்வக் கோளாறுல அமரை கேள்வியால துளைச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டார். ராமரோட அப்பா பேர் என்ன ? சீதையோட அப்பா பேர் என்ன ? வாலி, சுக்ரீவன் யாரு, இப்படி பல கேள்விகள்.

அமரும் ராமர், மாயமான், வில்லை வளைச்சார் இப்படி புத்தகத்தப் பாத்துப் பாத்து சொல்லிக்கிட்டு வந்தார்.

அஷூ எப்பவும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றவர். அண்ணன் பதில் சொல்ல திணறுவதைப் பாத்துக்கிட்டு எப்படி சும்மா இருப்பார் ? ... பொங்கி எழுந்துட்டார்.

அஷூ சார் முனியப்பனைப் பாத்து, என்ன கிளாஸ் நடத்தவிடாம பேசிக்கிட்டு இருக்க. வெளிய போய் நில்லுன்னு அதட்டி ஒரு ஆர்டர் போட்டார்.

அஷூ சார் ஆர்டர் போட்ட பிறகு அமர் அண்ணனை எப்படி கேள்வி கேட்க முடியும் .... ?

Wednesday, July 27, 2011

பதநீ, நொங்கு ...... வன்னியம்பட்டி

வீட்ல பூனை குட்டி போட்ருச்சு, பூனைக்குட்டி பாத்தாச்சு. கோழி வாங்கி, அடை வச்சு கோழிக்குஞ்சு பாத்தாச்சு நம்ம அமரோட அண்ணன் மார்­ஷல் (கன்னி வேட்டை நாய்). அவர் வாரிச பாக்க வேணாமா?

முனியப்பன், அமர், அஷூ மூணு பேரும் மார்ஷ­லுக்கு ஜோடியா ஒரு ராஜபாளையம் நாய்க்குட்டிய வாங்க ராஜபாளையம் போனாங்க. ராஜபாளையத்துல ஒரு Dog Breeder கிட்ட போன் பண்ணி நல்ல ஃபீமேல் குட்டியா செலக்ட் பண்ணிட்டுத் தான் போனாங்க.

போற வழில ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் இடையில ரோட்டோரமா, ஒரு எடத்துல இளநீர் வித்துக்கிட்டிருந்தாங்க. திரும்ப வர்றப்ப அங்க இளநீர் குடிக்கணும்னு முனியப்பன் முடிவு பண்ணிட்டார். ராஜபாளையம் போனாங்க, நாய்க்குட்டிய வாங்கிட்டு ஒடனே மதுரைக்கு ரிட்டர்ன்.

இளநீர் கடைல காரை நிப்பாட்டியாச்சு. அமர் இளநீர் வாங்க போய்ட்டார். கடையில மூணு பாத்திரம் வச்சிருந்தாங்க. முனியப்பன் காபி இருக்கான்னு கடைக்காரர்ட்ட கேட்டார். கடைக்காரர் சிரிச்சிட்டார். என்னன்னு பாத்தா ... அந்தக் கடையில இந்தப் பக்கம் நொங்கு. பாத்திரத்துல பதநீ. பதநீல நொங்க போட்டு கொடுக்கறாங்க.

நொங்கு .... சூப்பர் டேஸ்ட். ரொம்ப இள நொங்கு, பச்ச நொங்கு எப்படி இருக்கும் ? ..... ரொம்ப நைஸ். அந்த இடம் வன்னியம்பட்டி. ஒரு டம்ளர் அஞ்சு ரூபா தான்.

பதநீல நொங்கு கலந்து கொடுக்கறது குறிப்பிட்ட காலத்துல மட்டுந்தான். அது தை மாசத்துல இருந்து ஆடி வரைக்கும் தான்.

வித்தியாசமான அனுபவங்கள்.... இந்த மாதிரி எப்பவாவது கிடைக்கும். அது ஒரு தனி அனுபவம்.

Friday, July 8, 2011

OAP உம்மா

OAP ங்கறது Old age pension. தமிழக அரசால் ஆதரவற்ற முதியோர்களுக்கு, விவசாயக் கூலிகளுக்கு, விதவைப் பெண்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, வயது 50ஐக் கடந்தும் மணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை. சுருக்கமா OAP. மாசா மாசம் ஒரு தொகை வந்துரும்.

மொதல்ல மாசம் 150 ரூபா, அப்புறம் 200 ரூபா , அதுக்கப்புறம் 250 ரூபா, பிறகு 400 ரூபா, அடுத்து 500 ரூபா, இப்ப மாசா மாசம் 1000 ரூபா.

இந்த திட்டத்துக்கு மனு போட்டு VAO, RI, தாசில்தார் கையெழுத்து வாங்கி கலெக்டர் ஆபிஸ்ல கொடுத்தா தகுதியானவங்களுக்கு சாங்சன் ஆயிரும்.

இந்த ஓஏபில வயதுச் சான்றிதழ் டாக்டர்கிட்ட வாங்கணும். முனியப்பனும் வயதுச் சான்றிதழ் போட்டுக் குடுத்துருவார். 1989ல இருந்து OAPக்கு வயதுச் சான்றிதழ் கொடுக்கும் முனியப்பன் அதுக்கு காசு வாங்குறது இல்லை...ஃப்ரீ ... எல்லாருக்கும்.

இந்த 22 வரு­த்துல ஒருத்தர் ஒரு கேக் வாங்கி கொடுத்திருக்கார். ஒருத்தர் ரெண்டு பச்சை வாழைப்பழம் கொடுத்திருக்கார். ஒரு கிழவி 10 ரூபாய கையில திணிச்சிட்டு போயிருக்கு.

ஒத்தக்கடை மார்க்கெட் ஏரியால இருந்து ஒரு கிழவி வரும். "அப்பே, நீ கையெழுத்து போட்டு எல்லாருக்கும் ரூபா வருதுப்பே"ன்னு முனியப்பன் மொகத்தோட அது மொகத்த வச்சு கொஞ்சி ஒரு முத்தம் - உம்மா கொடுத்துட்டுப் போயிரும்.

OAP நல்ல விசயம் ... அதுல வயதுச் சான்றிதழுக்குக் காசு வாங்காம கையெழுத்து போடுறது, ஒரு சேவை - சர்வீஸ். முனியப்பனுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு.

Friday, May 20, 2011

அபிஷேக் அஷ்மிதா 100%

விஏஓ ஜீவகனும், அவங்க மனைவி விஜியும் முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றாங்க .... அவங்க பிள்ளைக அபிஷேக் 7 அஷ்மிதா ரெண்டு பிள்ளைகளுமே என்ன சுகமில்லன்னாலும் ஊசிய போட்டு, மாத்திரை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போற ஆளுக. ஒருநாள் கூட ஸ்கூல் கட் பண்ண மாட்டாங்க.

எல்கேஜில இருந்து +2 வரைக்கும் ஸ்கூல்ல லீவ் எடுக்காம படிச்ச அபிஷேக் இப்ப தேனி மருத்துவ கல்லூரில மெடிக்கல் ஸ்டூடண்ட். 7 வது படிக்கிற அவன் தங்கச்சி அஷ்மிதா இதுவரைக்கும் ஸ்கூல் கட் பண்ணதில்லை.

அபிஷேக், அஷ்மிதா ரெண்டு பேருமே வருஷா வரு­ம் எஸ்பிஓஏ ஸ்கூல் Annual Day ஃபங்க்­ன்ல 100% அட்டெண்டன்சுக்காக பரிசு வாங்கறவங்க. 100% அட்டெண்டன்சுக்காக ஒரு வரு­ம் கூட தவறாம பரிசு வாங்குனது அபிஷேக், அஷ்மிதா தான்.

பிள்ளைகளோட ஆர்வமும், பெற்றோருடைய வழிகாட்டுதலும் தான் இந்த மிகப்பெரிய சாதனைக்கு அடித்தளம்.

Tuesday, April 26, 2011

டபுள் பெடல்

ஒரே சைக்கிள், ரெண்டு ஹேண்டில் பார், ரெண்டு பெடல், ரெண்டு பேர் ஓட்டணும் இந்த சைக்கிள் ரைட் ரொம்ப ஜாலியான ஒண்ணு.

முனியப்பனும் அமரும் டபுள் பெடல் சைக்கிள்ல கொடக்கானலுக்கு முனியப்பனும் அமரும் டபுள் பெடல் சைக்கிள்ல கொடைக்கானல்ல 18.04.2011 அன்னைக்கி போனாங்க. முனியப்பன் முன்னால சீட், அமர் பின்னால சீட், ரெண்டு பேரும் பெடல் பண்ணிக்கிட்டு கிளம்பிட்டாங்க. அமர் .. இள ரத்தம் ஸ்பீடா பெடலைப் போட்டார். முனியப்பனும் அவர் பங்குக்கு தொங்க தொங்கன்ணு பெடல் போட்டார்.

கொடைக்கானல் ஏரிய சுத்தி சைக்கிள்ல ரவுண்ட். ரெண்டு பேரும் பெடல் போட்டுக்கிட்டே இருக்காங்க, புறப்பட்ட இடம் வரக்காணோம். இருட்ட வேற ஆரம்பிச்சிருச்சு; அமர், முனியப்பன் ரெண்டு பேருக்கும் சந்தேகம்.... கரெக்டான பாதையில தான் போய்க்கிட்டு இருக்கோமான்னு.... ஏரியச் சுத்தி தான் போய்க்கிட்டு இருக்காங்க, ஆனாலும் புறப்பட்ட இடம் வரலை. சரி போவோம்ணு ரெண்டு பேரும் போனாங்க. Boat Houseம் சிறுவர் பூங்காவும் வந்துச்சு.... அதுக்கப்பறம் தான் "அப்பாடா... நாம தொலஞ்சு போகலன்னு நம்பிக்கை வந்துச்சு."

இப்ப நல்லா இருட்டிருச்சு. இன்னும் புறப்பட்ட இடத்துக்குப் போய்ச் சேரலை. துப்பாக்கிய வச்சு பலூன் சுடுற கடை வழில வந்துச்சு. அமர் பலூன் சுட கௌம்பிட்டார். அப்புறம் அவிச்ச கடலைப் பருப்பு, ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கிட்டே போனாங்க. ரொம்ப இருட்டிருச்சு .... ரோட்ல வேற யாரும் இல்லை, சோடியம் வேப்பர் வெளிச்சம் தான், நம்பிக்கையா டபுள் பெடல் போட்டு ஓட்டுனாங்க... எதுத்தாப்புல ஒரு குட்டி சைக்கிள் வருது. நம்ம ஆள் மாதிரி தெரியுதேன்னு பாத்தா .... நம்ம அஷூக்குட்டி.

ரொம்ப நேரமா அண்ணன் அமரையும், மாமாவையும் காணாமேன்னு அவர் அப்பாவ துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு அவர் ஒரு சைக்கிள்ல வந்துட்டார்.

முனியப்பனும், அமரும் ஏரியச் சுத்துனாங்கள்ல .... கொஞ்சம் தரம் தானாம் அது - 6 கி.மீ.. அவ்வளவு தூரம் டபுள் பெடல் போட்டு இருட்டுல போனது, அஷூவ பாத்ததும் அந்த சிரமம் போயிருச்சு.

Monday, April 11, 2011

டயக்னாஸ்டிக் கூத்து

வியாதியக் கண்டுபிடிக்கும் டயக்னாசிஸ் முக்கியமானது. ஒரு பேஷ­ண்டோட ட்ரீட்மெண்ட்டே அத வச்சுத் தான். ஒரு டாக்டர் டயாக்னசிஸ்ல கோட்டை விட்டா பேஷ­ண்ட் பாடு திண்டாட்டம் தான். அது சரியா அமைஞ்சுட்டா தனிக் கலை, சரியா இல்லைன்னா தனிக் கதை. இப்போ ஒரு ஜோக்கான டயாக்னசிஸ் கதை.

முனியப்பன் கிட்ட நம்ம தங்கவேல் வயித்த வலிக்குதுன்னு ஊசி போட வர்றார். முனியப்பன் பாத்துட்டு அல்சர் அப்படின்னு முடிவு பண்ணி ஊசி போட்டு மாத்திரை குடுக்கறார். ஊசியப் போட்ட உடனே நம்ம தங்கவேலு வாந்தி எடுத்துர்றார்.... அதுவும் ரத்த வாந்தி. உடனே நம்ம முனியப்பன் பக்கத்துல ஒரு குடல் அறுவை சிகிச்சை நிபுணர் கிட்ட ரெஃபர் பண்றார். ரத்த வாந்தின்னா... ரைல்ஸ் ட்யூப் போடணும். வாய் வழியா ஏதும் குடுக்கக் கூடாது. டிரிப்ஸ் போடணும்.

அந்த டாக்டர் குடலுக்குன்னு (Gastro Enterology) புராஜக்ட் பண்ணி ஆஸ்பத்திரி நடத்துறார். மதுரை பெரிய ஆஸ்பத்திரிலயும் அறுவை சிகிச்சை நிபுணரா இருக்கார். அந்த ஆஸ்பத்திரியல இருந்து முனியப்பனுக்கு போன். உங்க பே­ண்ட்டுக்கு சிக்மாய்டு வால்வஸ் (Sigmoid Volvus). GH அனுப்பிட்டோம். சிக்மாய்டு வால்வஸ்னா வயிறு வீங்கும், மோஷ­ன் போகாது.

நம்ம தங்கவேலு சிக்ஸ்பேக் ஆளு, மோ­ஷன் தொந்தரவும் இல்ல, முனியப்பனுக்கு ஒரே குழப்பம்.

அடுத்த நாள் காலைல நம்ம தங்கவேலு முனியப்பன் கிட்ட நல்லா தெம்பா வந்து நிக்கிறார். நீங்க குடுத்த மாத்திரை, போட்ட ஊசியிலேயே சரியாப் போச்சு அப்படிங்கறார்.

தங்கவேலுவுக்கு அல்சர் தான். அவங்க டயாக்னசிஸ் பண்ண மாதிரி சிக்மாய்டு வால்வஸ் இல்ல.

அப்ப என்ன நடந்துச்சுங்கிறீங்களா ?

நம்ம குடல் டாக்டர், தங்கவேலுக்கிட்ட குடல் அடைச்சுக்கிச்சு. ஆபரே­ன் பண்ண ஒன்றரை லட்ச ரூபான்ணு ரேட் பேசியிருக்காரு. போன பே­ண்ட ரைல்ஸ் டியூப் போட்டு, டிரிப்ஸ் போடாம கூத்து பண்ணியிருக்காங்க. இந்த டாக்டர் ஜியஹச்ல வேற இருக்கார்.

ஆனா தங்கவேலு பாருங்க சூப்பரா இருக்கார்.

இப்ப வர்ற சில டாக்டர்களோட டயாக்னஸ்டிக் பவர் எப்படி இருக்கு பாருங்க. இவங்கள என்ன செய்றது. நம்மளே சுவத்துல முட்டிக்கிட வேண்டியது தான்.

Thursday, March 31, 2011

நம்மாளல முடியாதுப்பா - அஷூ

அஷூ, அமருக்கு மார்ச் 21ந் தேதி முழுப் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டுட்டாங்க. கிட்டத்தட்ட 80 நாள் லீவு, அந்த 80 நாள்ல அவங்களுக்கு பிரயோஜனமா ஏதாவது செய்யனும்ல. முனியப்பன் ஐடியா பண்ணார். அமருக்கு டென்னிஸ், அஷிவுக்கு அதலெடிக்ஸ்னு. அமர் கொஞ்சம் ஃபேவரான ஆள், டென்னிஸ்ன ஒடனே ஒத்துக்கிட்டார். பாப்ளி பிரதர்ஸ் கடையில போய் டென்னிஸ் ராக்கெட், பால் வாங்கியாச்சு.

நைட் வீட்டு காம்பவுண்ட் சுவர்ல அடிச்சு அமர் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டார். அஷூவும், முனியப்பனும் ­ட்டில்.

முறைப்படி ஆட பழக்கணும்ல, கோச் வச்சு பழகுறது தான் நல்லாயிருக்கும். அஷூ, அமர அவுக அப்பா கூட ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்துக்கு முனியப்பன் அனுப்பி வச்சார். அவங்க போனப்ப டென்னிஸ் கோச் இல்லாததால நேரா யூனியன் கிளப்ல போய் அங்க டென்னிஸ் ஆட சேந்துட்டார். கோச் லட்சுமணன்.

நம்ம அஷி ரேஸ்கோர்ஸ்ல ஓடுறதுக்காக போனார்ல. அங்க இருந்த கோச் ஓடுறதுக்கு காலைல 5.30 டூ 6.30 வரச் சொல்லிருக்கார். முனியப்பன் நைட் கிளினிக் முடிச்சு வீட்டுக்கு வந்த ஒடனே அஷூ கறாரா சொன்னார். "காலைல 5.30க்கு வரச் சொல்றாங்கப்பா. 5.30க்
கு அங்க போகணும்னா 5 மணிக்கு எந்திரிக்கணும். என்னால 7 மணிக்குத் தான் எந்திரிக்க முடியும்". " நம்மாளால முடியாதுப்பா ". அஷூவுக்கே உரிய நச்.

Tuesday, March 15, 2011

1 கோடியே 26 வட்சம். BPO

1 கோடியே 26 வட்சம். BPO

முனியப்பனின் நோயாளிகளில் ஒருவர் S. இந்தியாவிலேயே ஆள் பலம் அதிகமான மத்திய அரசு வேலைல S இருக்கார். அவருக்கு காலேஜ் படிக்கிற 2 பொண்ணுக, லேட்டா பொறந்த பய 1st படிக்கிறான். அப்ப தற்செயலா Clinic வெளிய காய்கறி வாங்கப் போன எடத்துல முனியப்பன் கிட்ட S சொன்னார். "BPO ஆரம்பிச்சிருக்கேன்" னு.

முனியப்பன் கேட்டார் "ஒங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையே. எப்படி ரன் பண்றீங்க?" S. மச்சினன் இருக்கான், அவனும் நானும் பாத்துக்கறோம்.

முனியப்பன் "எத்தனை பேர் வேல பாக்குறாங்க"
S, "100 பேர் வேல பாக்குறாங்க". முனியப்பன் " எப்படி சம்பளம் போடுறீங்க". S. "Income வருது".

முனியப்பனுக்கு ஒரே ஆச்சர்யம் மாசம் 25 ஆயிரம் சம்பளம் வாங்குற ஒருத்தர், தனியா பெரிய அளவுல மாசம் 4 லட்ச ரூவா சம்பளம் கொடுக்ற அளவுக்கு வந்திருக்காரேன்னு. S ன் மனைவி Ladies Tailor. தனியா டெய்லரிங் கடை வச்சு அதுல 5 பேர் வேல பாக்குறாங்க.
டெய்லரிங் 12 வருஷமா ஓடுது. சிறுகச் சிறுக ரூபாய் சேத்து S தொழில் ஆரம்பிச்சுருக்கார்ன்னு ஒரு தோற்றம் முனியப்பனுக்கு.

அப்புறம் உலகம் பூரா பொருளாதார வீழ்ச்சி வருது. அப்ப ஒரு நாள் காய்கறி கடைல Sஜ மீட் பண்ண முனியப்பன் கேட்டார், "ஒங்களுக்கு எதும் பாதிப்பு இருக்கா ?" S. "அதெல்லாம் ஒண்ணுமில்ல".

ரொம்ப நாள் கழிச்சு S முனியப்பன் Clinic வர்றார். லீவு வேனும். அவர் வேல பாக்குற மத்திய அரசு துறை மருத்துவமனைல Sick பண்ணியிருக்கார், 1 மாசம். அதுக்கப்புறம் 8 மாச லீவு வேணும்னார். முனியப்பன் "ரொம்ப நான் ஒங்கள பாக்கலியே" S. "மிசஸ் Uterus ஆப்பரேஷன் சென்னைல பண்ணோம். அதுலருந்து சென்னைல தான் எல்லாரும் இருக்கோம்னார். S வேல பாக்குற துறை விடுமுறை. மெடிக்கல் சர்ட்டிபிகேட்ட்டுக்கு தனியா form வேனும். அத வாங்கிகிட்டு நாளைக்கு வாங்க. போட்டுத்தாரேன்னு முனியப்பன் சொன்னார். சரின்னு S கெளம்பிட்டார்.

S கெளம்பிப் போன 40 நிமிஷம் கழிச்சு ஒருத்தர் வந்தார். "Intelligence wing" ல இருந்து வாரேன். S வந்தாரா" ன்னு கேட்கவும் முனியப்பன் "ஆமா, என்ன விஷயம்" னு கேட்டார். Intelligence "S ஆபிஸ்ல பணத்தை எடுத்துட்¡ர்". முனியப்மபன் "எவ்வளவு பணம்" Intelligence " 1 கோடியே 26 லட்சம்" தொகைய கேட்ட ஒடனே முனியப்பனுக்கு ஆச்சர்யம் இவ்வளவு பெரிய அமெளண்டா ? முனியப்பன் திருப்பி ஒரு தடவை Amount எவ்வளவு கேட்டார், S அவ்வளவு பெரிய தொகைய சுட்டார்ன்னு நம்ப முடியல.

Intelligence வரிசையா சொன்னார். " S ன் மனைவி 2010 February ல வெளிநாட்டுக்கு Escape" S ரூபாய விட்டது BPOல தான். S December 2009ல காணாம போனவர். 16.09.2010 ல மதுரைக்கு வந்து Autoல சுத்திக்கிட்டிருக்கார். S வந்த தகவல் கெடைச்சு S அ பாலோ பண்ணிக்கிட்டிருக்கோம்னார் Intelligence. S இருந்த வீடை பத்தி முனியப்பன்கிட்ட தகவல் வாங்கிக்கிட்ட Intelligence அடுத்த நாள் காலைல S வந்தா அவர் வந்த தகவல் S கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாள் Sம் வரல. Intelligence ம் வரல. S escape ஆயிருக்கானும்.இல்ல கோழிய அமுக்குற மாதிரி S அ Intelligence அமுக்கியிருக்கனும்.

மனிதனுடைய அழிவுக்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூணூல எதாவது ஒண்ணுதான். நல்லா இருந்த S திடீர்னு இப்படி தவறான பாதைல எப்படி போனார்னு தெரியல.

Wednesday, March 9, 2011

வாக்கிங் காபி

முனியப்பன் மதுரைல பைபாஸ் ரோட்ல குடியிருக்கவர். அந்தக் காலத்துல மதுரைக்கு பைபாஸ் ரோடா போட்டது இப்ப கிட்டத்தட்ட ஹார்ட் ஆஃப் த சிட்டி மாதிரி ஆயிருச்சு. மக்கள் தொகை, வாகனங்களோட எண்ணிக்கை பெருகி ஃபுல்லா டிராஃபிக் தான்.

பைபாஸ் ரோட்ல காலைல வாக்கிங் போற ஆளுகள்ல நம்ம முனியப்பனும் ஒருவர். அப்பா நீதிபதி கு.வேலுசாமி கிட்ட இருந்து பழகுனது தான் வாக்கிங். முனியப்பன் பக்கங்கள்ல பழைய பதிவில சோடியம் வேப்பர் லேம்ப் வெளிச்சத்துல வாக்கிங் போறதப் பத்தி முனியப்பன் ஒரு கவிதையாவே போட்டிருக்கார். முனியப்பனோட வாக்கிங் நேரம் காலை 5.30 டூ 6.00

காலைல வாக்கிங் போறப்ப எதுத்தாப்புல வர்ற ஆளு தயாளன். ஒரு சிரிப்பு அவ்வளவு தான். இப்ப கொஞ்ச நாளா தயாளனக் காணோம். இன்னிக்கு ட்ரீட்மெண்டுக்கு வந்தப்ப கேட்டா தயாளனும் வாக்கிங் போய்க்கிட்டு தான் இருக்கார். அப்ப டைமிங் பத்தி விசாரிச்சா 5.50 டூ 6.10.

பைபாஸ் ரோடு EMAR ஹோட்டல்ல காபி சாப்பிடறதா சொன்னார். முனியப்பன் அந்த ஹோட்டலைக் கடக்கும் போது மணி சரியா 5.55. அதான் தயாளனைப் பார்க்க முடியலை.

அப்ப தயாளன் EMAR ஹோட்டல் காபிய பத்தி சொன்னார். காலைல 5.30ல இருந்து 7.30 வரைக்கும் வாக்கிங் போறவங்க காபி சாப்பிட அங்க வர்றாங்க. அந்த நேரத்துல அங்க காபி சாப்பிடறவங்க எல்லாருக்கும் காபி 6 ரூபா தான். காபி பேரே வாக்கிங் காபி. காலைல 7.30க்கு அப்புறம் அதே காபி அதே அளவு 10 ரூபா.வாக்கிங் போறவங்கள உற்சாகப்படுத்தற இந்த வாக்கிங் காபி குடுக்கற EMAR ஹோட்டலைப் பாராட்டலாம். லாபம் கம்மியாயிருக்கும். இருந்தாலும் இது நச்.

Thursday, January 27, 2011

அரோகரா குமார்

அரோகரா குமார்

முனியப்பன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரில படிச்சதால, House Surgen, Senior House

surgeion ஆ Dr.S.R.கிட்ட இருந்ததால நோயாளிகளோட நோயை எதிர் கொள்றதுல அதிரடி ஆட்டக்காரர்.

எந்த Case ஆ இருந்தாலும் பயப்படாம எடுப்பார். heart attchஆ Cancerஆ, Major operation ஆ, அசராம பார்க்க கூடிய ஆள். இப்ப அமர், அஷ¥வை வளக்க வேண்டியதால 10 வருஷமா தடுப்பாட்டக்காரர் மாதிரி சிக்கல் இல்லாத Case மட்டும் பாக்குறார் நம்ம ஆளு. அமர் இப்ப ஓரளவுக்கு தன்னோட வேலைய தானே பாத்துக்கறார். "அந்த பயம் இருக்கட்டும்" னு முனியப்பனை மிரட்டும் அஷீ செட் ஆக இன்னம் 3 வருஷம் ஆகும். அதுக்கப்புறம் அதிரடியாய் நோயாளிகளை கவனிக்க வேண்டியதுதான். என்ள ஓவரா Build up னு பாக்கறீங்களா.30 கிலோமீட்ர் தள்ளி இருந்தாலும் visit போய் பாக்குற நம்ம முனியப்பன் இப்ப 10 வருஷமா, பக்கத்துல இருந்தாலும் visit போறதில்லை. காரணம் - நேரமின்மை. அப்படியிருந்தும் என்னைக்காவது ஒரு நாள் ரொம்ப தெரிஞ்சவங்களுக்காக visit போக
வேண்டியதிருக்கும் . visit போற time காலைல 7 மணி. இப்பதான் முனியப்பனின் நண்பர் வக்கீல் சேகர் சார், ஒரு visit கூப்பிட்டார் . சேகரோட senior வக்கீல் ரெங்கநாதன். ரெங்கநாதனோட மாமா சீனிவாசன் சுகமில்லாம இருக்கார். முனியப்பன் sunday போய் பாக்குறார். ரொம்ப weakஆ இருக்கார்.சீனிவாசன். வலது இடுப்புல neck of FUMUR பிராக்சர். 2 மாசத்துக்கு முன்னால ஆனது. operate பண்ண முடியாது. சும்மா வூட்ல வச்சு இருந்து பாருங்கன்னு அனுப்பிர்றாங்க. சீனிவாசனுக்கு Diabetes வேற. சும்மா படுததே கெடக்கிறதால முதுகில புண் ஆயிருது. Bed sore. அந்த ஆஸ்பத்திரில இருந்தே சீனிவாசனுக்கு புண்ணூக்கு
மருந்து போட, Diabetesக்கு Insulin போட ஆள் அனுப்புறாங்க. நெஞ்சுல சளி வேற.
முனியப்பன் பாத்துட்டு Bed soreக்கு சளிக்கு, மாத்திரை, மருந்து கொடுத்துட்டு ஆள் ரொம்ப weak ஆ இருக்கார். தேர்றதுக்கு ஒரு மாசம் ஆகும் அப்படின்னு சொலலிர்றார். Bed soreல இருந்து pus culture எடுக்க சொல்லிட்டு வந்துர்றார். wednesday வக்கீல் ரெங்கநாதன் சார், pus culture ரிப்போட்டோட வர்றார். கிருமி CLEBSIELLA கிளப்ஸில்லா. சீக்கிரம் போகாது, ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அத வெரட்டணும். Thursday மதியானம் 12 மணிக்கு வக்கீல் சேகர் மொபைல்ல கூப்பிறார். ரங்கநாதன் சார் மாமா மூச்சு விடக் கஷ்டப்படுறார். போய்
பாருங்க" முனியப்பனும் ஊசி மருந்துகளை எடுத்துட்டு கெளம்பறார் கூட துணைக்கு
குமார். Two வீலர்ல கெளம்புறப்ப, "அரோகரா"ன்னு சொல்லிட்டு குமார் பின்னால
ஏறி ஒக்காறார். முனியப்பன், "ஏய் அரோகரா போட்டுட்ட, அங்க ஆயிறப் போதுடா"
அப்படின்னு சொல்லிகிட்டே ரங்கநாதன் சார் வீட்டுக்கு போயாச்சு. அரோகராதான். Patient
out. சில புது அறிமுகங்கள் இப்படி சோகத்துல ஆரம்பிக்கிறது உண்டு. சில சமயம் சோகத்துலயும் காமெடி கலந்துருது.