Friday, October 17, 2008

ஓட்டுநர், நடத்துநர், பேருந்து

ஓட்டுநர், நடத்துநர், பேருந்து

ஒரு பேருந்து (Bus) ஓடணும்னா அதுக்கு ஒரு ஓட்டுநர் (Driver) பயணிகளுக்கு டிக்கட் போட ஒரு நடத்துநர் (Conducter) தேவை, அப்பத்தான வழித்தடத்தில் (Route) பயணிகள் பஸ் போகும். இது வழக்கமான வியம் தானே, அப்படீங்கறீங்களா, வழக்கமான விஷயம் தான், இதப் படிங்க.

மதுரைல இருந்து ஒரு பஸ் ஒரு ஊருக்கு புறப்பட்டு போகுது, ஓட்டுநரும், நடத்துநரும் உற்சாக பானம் லைட்டா ஏத்தின நெலமைல டிரிப் எடுக்கறாங்க. 20 கிலோ மீட்டர் தாண்டின ஒடனே ஒரு ஊர் வருது. வண்டி நிக்குது. ஊர் வந்தா பஸ்ஸ நிப்பாட்டி ஆளை ஏத்துறது, இறக்குறது தான நடக்கும். இங்கயும் அப்படித்தான். ஆனா பஸ்ல வந்த எல்லாரையும்,மீதி காசை கைல குடுத்து எறக்கிவிட்டுட்டாங்க., ஊருக்குப் போறோம் அப்படின்னு அந்த பஸ்ல வந்த எல்லாருக்கும் எப்படி இருந்திருக்கும் ?.

ஓட்டுநரும், நடத்துநரும், எங்க போவாங்க, நேரா அரசு மதுக்கடைதான், சரக்க கொஞ்சம் ஊத்திகிட்டு இன்னும் கொஞ்சம் கைல எடுத்துகிட்டு பஸ்ல ஏறி எங்க போனாங்க? பஸ் போற பாதையா? அதெப்படி? ஒரு பக்க (oneway) ரோட்ல பஸ்ஸ ஓட்டிட்டு போய், நிப்பாட்டி சரக்கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது இப்படியிருக்க, பஸ் உரிமையாளர் என்ன செஞ்சாங்க?, பஸ் வரவேண்டிய டயத்துக்கு ஊருக்கு வரல, நடுல எங்கயாவது பிரேக்டவுண் ஆயிருக்கான்னு பாக்குறதுக்கு, பஸ்ஸோட வழித்தடத்துல வந்தா பஸ்ஸ காணோம். மதுரைல மேலிடத்துக்கு போன் பண்ணிட்டு, பஸ் எங்கயிருக்கும்னு தேட ஆரம்பிச்சு, கடைசில ஒரு வழியா பஸ்ஸ கண்டு பிடிச்சுட்டாங்க, ஓட்டுநரும் நடத்துநரும் முழிச்சிகிட்டா இருப்பாங்க?, மட்டை (flat). உபயம் அரசு மது. குடி, குடியை மட்டும் கெடுக்கல, பஸ் பயணிகளோட பயணத்தையும் கெடுத்துருச்சு.

2 comments:

தமிழ்நதி said...

ஓட்டுனர் எமனாக வாய்ப்பு இருக்குங்கிறீங்க. நாங்க நாகர்கோயில் போறப்போ ஒரு பேருந்தைப் பார்த்தோம். அதுல 'சிவலோகம்'அப்பிடின்னு எழுதியிருந்துச்சு. அதை வாசிக்க சிரிப்பா இருந்துச்சு. உண்மையா சிவலோகம்னு ஒண்ணு இருந்தா அங்க இவர் கண்டிப்பா கொண்டு போய்ச் சேத்துடுவாரு போல...

Unknown said...

Thank u thamilnathy.The bus drivers do not use alcohol while they are on duty.This post was meant for showing the visitors of my blog,how alcohol has prevented the bus driver& conductor from discharging their duty for which they are paid.Both of them were dismissed from the service.