Wednesday, December 17, 2008

அப்பா உன் நினைவலைகள்

தந்தையிடம் வளர்ந்த
தனயன் முனியப்பன்
தவழ ஆரம்பித்தவுடன்
தந்தையிடம் சேர்ந்தவன்

மழலைகள் வளர்வதைக் கண்டு
மகிழ்ச்சி அடைந்தவன் நீ
காய்ச்சல் முனியப்பனுக்கு
கைகோர்த்து பக்கத்தில் படுப்பாய் நீ
பறந்து விடும் காய்ச்சல்
மறுபடி வராது

வெள்ளம் சூலப்புரம் ஓடையில் மகனை
தோளில் தூக்கி வெள்ளத்தைக் கடந்தவன் நீ

இரு தோள்களில்
இரு மகன்களையும் தொங்க விட்டு
சுற்றி விளையாடிய
சூப்பர் தந்தை நீ

காலாண்டு அரையாண்டு விடுமுறைக்கு
கல்லுப்பட்டி போடி மதுரை
முழுப்பரீட்சை லீவுக்கு
மூணார் camp ஒரு மாதம்
அனுப்பி வைத்தவன் நீ விடுமுறையை
அனுபவித்தவர்கள் நாங்கள்

அச் அம்மா தும்முவார்கள்
அச் அப்பா தும்மியவன் முனியப்பன்

செல்ல வேண்டும் சுற்றுலா
சென்று வா
மருத்துவம் படிக்கணும்
மறுக்காத தந்தை நீ

உன்னிடம் பிடித்தது
உணர்வுடன் நீ கொடுத்த சுதந்திரம்
எதில் குறை வைத்தாய்
உன்னைக் குறை சொல்ல

பிள்ளை வளர்க்க
பிறருக்கு ஒரு ரோல் மாடல் நீ .................

4 comments:

ஹேமா said...

முனியப்பன்,அருமை.நீங்க அப்பாபிள்ளைபோல.எல்லாரும் அம்மாவைத்தான் புகழ்ந்து கதைப்பார்கள்.கவிதை எழுதுவார்கள்.
அப்பா எவ்வளவுதான் கஸ்டப்பட்டாலும் அப்பாவை நினைவுக்குள் நிறுத்துபவர்கள் குறைவு.வாழ்த்துக்கள்.உங்கள் அப்பாவுக்கு என் அன்பு வணக்கங்கள்.

Dikshith said...

kadamai ganniyam kattupaaadu plus sudantharama ungala valarthadhu thaan unga appavode special. Ivaru achchu appa ille HUTCH APPA.

Muniappan Pakkangal said...

Nandri Hema,I am a father s boy,i am proud to say it.If you find time pl visit my previous post abt him K.Velusamy BABL,a Judicial officer.

Muniappan Pakkangal said...

Thank u Dikshith,it is the freedom that my father gave me,shaped my life.