Sunday, January 18, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் சிவனாண்டி

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
சிவனாண்டியும் நாட்டுக்கோழி முட்டையும்

சிவனாண்டினா ... உடனே சின்னப்பையன்னு நெனச்சுராதீங்க. இவர் 80 வயசு பெருசு. மதுரைல பைபாஸ் ரோட்ல ஒரு எடத்துக்கு காவல்காரரா ரொம்ப வருஷமா இருக்கார். இந்த வயசுலேயும் தானே பொங்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை

அவரோடது. அடுத்தவங்க செய்ற சின்ன சின்ன உதவிகள்ல அவர் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. சிவனாண்டி ஒடம்புக்கு சுகமில்லைன்னா நேரா கெளம்பி முனியப்பன் கிட்ட வந்துருவார். முனியப்பன் அவருக்கு வைத்தியம் பாத்து அவர் பீஸ் குடுத்தா வாங்கிக்குவார். பீஸ் குடுக்கலைன்னாலும் விட்ருவார். சிவனாண்டி பீஸ் குடுத்தாலும் 10 ரூபா தான் குடுப்பார். இப்ப கொஞ்ச நாளா அந்த 10 ரூபாவும் குடுக்கிறது இல்லை. இப்ப ஒருநாள் சிவனாண்டி ட்ரீட்மென்ட்டுக்கு வந்தார்.

வைத்தியம் பாத்து முடிச்சிட்டு கெளம்பும் போது நேரா முனியப்பன்கிட்ட வந்தார் சட்டைப் பைக்குள்ள கைய விட்டார். ஒரு Carry bag; அதை எடுத்தார். அந்த Carry bagல நாலு முட்டை, "நாட்டுக்கோழி முட்டை சின்ன வெங்காயம் சேத்து, ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க"ன்னார். முனியப்பன் ஒரு நொடி அசந்துட்டார். நம்ம மேல பெருசு இவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு.

இப்ப முனியப்பன் வீட்ல நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட்; சிவனாண்டி வந்துட்டார்னா. கிராமத்து மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி.

8 comments:

ஹேமா said...

வாழ்வில் சில நன்றியுள்ள விஷயங்களை மறக்கமுடிவதில்லை.
உங்கள் சிவனாண்டியும் நாட்டுக்கோழி முட்டையும்போல!

benza said...

எதிர் வாதம் >>> எறிசிடாதிங்க >>> சிவனாண்டி பத்து ரூபா கொடுத்தார் >>> பின்னர் அதுவும் இல்லை >>> பணம் அவரிடம் இல்லை >>> பல தடவை வெத்து கையுடன் வந்தவர் இப்போது முட்டை கையுடன் வருகின்றார் >>> அப்போ பணம் தரும்போது அவரது அன்பை காணமுடியவில்லை >>> அதே கை முட்டை தரும்போது நாம்
அன்பை கற்பனையிலேயே காண்கின்றோம் >>> ஆமா, இதில என்னத்த நீங்களும் ஹேமா வும் காணாததை கண்டுகிட்டிங்க ?

Dikshith said...

neenga sonna madhiriye anbai velippaduthugiadhukku niraya vazhigal undu adhil ondrai thaan sivanandi seidhirukkirar. oru sila samayathile 10 rooba koode illama vandha sivanandi ungalukku kodukka edhachum kondu poganumnu nenachu muttaya kondu vandhaaru paarunga anga thaan avar ezhayaaghi irundhalum anbai velippaduthugirar. niraya panam ullavan idhai manadhalavil kooda ninaikka maattan enbadhu oorarindha unnmai.

Muniappan Pakkangal said...

Nandri Hema.Village people show their affection so that it is unforgettable.Sivanandi is one such person loaded with affection.

Muniappan Pakkangal said...

Nandri Benzaloy for ur ethirvaatham.As you are pointing out,fees is not the matter here.what Sivanandi is getting by way of treatment, is more which cannot be paid by him.He is one among those patients who is on free treatment list.See his affection,he wants to do something for the Doctor who is not forcing him for fees. You can easily compare him with Kuselan who goes to see Krishnan with Aval.Your doubts cleared now Sir.

Muniappan Pakkangal said...

Thank u Dikshith.People with money & without money,surely there is a difference as you have commented.

butterfly Surya said...

Village people show in a great way.

Osho says "Love is nothing but un
conditional".

உங்கள் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக அவருக்காக ஒரு பதிவிட்டதின் மூலம் We understood Love is unconditional.

Nice.

Muniappan Pakkangal said...

Thank u Vannaththu poochchiar,as u have correctly put it up- love is unconditional.