Monday, January 26, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)

என்ன பித்தளயக் குடுக்கறீங்க ..... ?

நம்ம முனியப்பனோட பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார். வெளிஉலகம் அதிகம் பார்த்திராதவர். பெயர் சண்முக வள்ளி. வள்ளி ஜோக்ஸ்ன்னு சொல்லி ஒரு புக் போடலாம். அந்தளவுக்கு திடீர் ஜோக்ஸ். முனியப்பன் கிளினிக்ல டெட்பாடிக்குப் பல்ஸ் பார்த்தாரே அவரே தான். நோயாளிகளை ஒழுங்கா பாத்திருவார். அதுல correct.

முனியப்பன் cell phoneஅ சார்ஜ் போட வயரை சொருகிருவார் வள்ளி, ஆனா switchஅ ஆன் பண்ண மாட்டார். இந்த மாதிரி எதாவது செஞ்சி சிரிக்க வச்சிருவார்.

இப்ப, அவர் வீட்டுக்காரருக்கு ஒரு பேங்க் செக் குடுக்குறாங்க. அவர் அதை மாத்த நேரமில்லாம என்ன செய்றாரு; நம்ம வள்ளிக்கிட்ட குடுத்து "பேங்க்ல போய் செக்கக் குடுத்து ரூவா வா புள்ள"ன்னு சொல்லிர்றார். வள்ளிக்கு பேங்க் நடைமுறைலாம் தெரியாது. வள்ளி நேரா கிளம்பி பேங்க்ல போய் செக்கக் குடுக்குறாங்க. அந்த பேங்க் காலைல 8 மணியிலிருந்து சாயங்காலம் 8 மணி வரை உள்ள பேங்க். வள்ளி அங்க போன டைம், மாலை 4.30 மணிக்கு. செக்ல வள்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு பித்தளை token குடுக்கிறாங்க.

வள்ளிக்கு அதிர்ச்சியாயிருது. என்னடா நம்ம செக்கக் குடுத்தோம், இந்த ஆளு ரூவா குடுக்காம என்னத்தயோ குடுக்குறாரு. ஒடனே செக்க பேங்க்ல யார்கிட்ட குடுத்தாரோ அவர்கிட்ட நேராவே கேட்டுர்றாரு. "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க?". பேங்க் ஊழியர் அசந்துர்றார். "திருப்பி ஒரு தடவை சொல்லுங்க"ன்னு வள்ளியக் கேக்குறார். வள்ளி டென்ஷன்ல இருக்காங்கள்ல, மறுபடியும் ஒருதட்வை அதே மாதிரி "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க"ன்றார். வள்ளிக்கு 'Voice Box' லவுட் ஸ்பீக்கர் மாதிரி. அவுங்க சொல்றது பேங்க்ல வேல பாக்குற எல்லாத்துக்கும் கேக்குது. பேங்க்ல கூட்டம் வேற இல்லையா, பேங்க்ல உள்ள எல்லாரும் அவங்களை மறந்து சிரிச்சுர்றாங்க.

"பேங்க்ல குடுத்தது token, அது உள்ள நம்பர் படி கூப்பிடுவாங்க. அப்ப cash counterல ரூவா தருவாங்க"ன்னு வள்ளிக்குச் சொல்லிக் குடுக்குறாங்க. அதுபடி வள்ளி ரூவாய வாங்கிட்டு வர்றாங்க.

சில சமயம் எதிர்பாக்காத நேரம் ஜோக் வெடிக்கும். வள்ளி ஒரு ஜோக் வெடி, திடீர்னு சுத்தி இருக்கவங்களைச் சிரிக்க வச்சிருவாங்க. அடுத்தவங்களச் சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய வரம்.

11 comments:

Dikshith said...

Enakkum vallia paththi romba nallave theriyum.Edhayum olivumaraivillama pesum. paavam. Evala vechi oru ASATHAPOVADHU YAARU comedy show ve edukkalam. Siriththu vaazha vendum pirar sirikka vazhdhidathe enbadhu naam ellorukkume theriyum. Aana indha ponnu pirarai sirikka vechu vazhgiral. Interesting character.

Muniappan Pakkangal said...

Valli is special for jokes in unexpected manner dikshith.Ur observation abt her is correct.

benzaloy said...

[[[ சில சமயம் எதிர்பாக்காத நேரம் ஜோக் வெடிக்கும். வள்ளி ஒரு ஜோக் வெடி, திடீர்னு சுத்தி இருக்கவங்களைச் சிரிக்க வச்சிருவாங்க. அடுத்தவங்களச் சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய வரம்.]]]

வள்ளிட செயல் மத்தவங்களை சிரிக்க வைக்குது

சிரிகிறவங்க சகலரும் தன்னை தான் பார்த்து சிரிக்றாங்க என்பது வல்லிக்கு புரியுதா சார் ?

எனகென்னவோ வல்லில பாவமாக இருக்குது

அவுங்க மனம் என்ன மாதிரி பாடு படும் சார் ?

ஹேமா said...

அன்பு முனியப்பன் அவர்களுக்கு,நான் ஓரளவு சுகம்.இன்று எழும்பியிருக்கிறேன்.3-4 நாட்களாகச் சாப்பாடு இல்லை.அதனால் இன்னும் முடியாமலே இருக்கு.தொண்டை நோ கொஞ்சம் குறைஞ்சிருக்கு.குரல் இன்னும் சரியாக இல்லை.உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.இந்த வருடம் இங்கு அதிகம் கூடிய குளிர்(Snow).அதனால்தான் இப்படி!இன்னும் 2-3 நாளில் சரியாயிடும்.
வந்திடுவேன் பின்னூட்டம் போட.இந்த ஓய்வு நேரத்தில் உங்கள் அத்தனை பதிவுகளும் படித்தேன்.பிடிச்சிருக்கு எல்லாமே!

ஹேமா said...

Ben,உங்களுக்கும் மிக்க நன்றி.நல்லெண்ணெயும் பூசினேன்.இன்னும் இஞ்சி,தேன்,Mint என்று எல்லாம் நடக்குது இங்கே.

பென்,உங்கள் தளத்திற்கு என் பின்னூட்டம் ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.காரணம் தெரியவில்லை.

ஹேமா said...

முனியப்பன்,வள்ளியை நான் மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கோ.அவவைப் போல எல்லோருமே உலகத்தில் இருந்துவிட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்.

Muniappan Pakkangal said...

Thank u Hema,glad u are alright.Expecting ur comment.

Muniappan Pakkangal said...

I will convey ur regards to valli Hema.the personal life of Valli is pathetic.but she manages with her confidence & smile.

Muniappan Pakkangal said...

Thank u Benzaloy Sir,Valli is an unexposed girl to so many things.She doesn't hide what she thinks.she understands her mistakes & corrects.She also laughs at what she has done.in simple words she is a Vehuli.

Anonymous said...

like you one more doctor has opened a blog

vetpractice.blogspot.com

read and benefit

Anonymous said...

another doctor? link
http://www.payanangal.in/