Sunday, January 18, 2009

இளவயது மரணங்கள்

தாய்தந்தை வளர்த்த பின்
தானே வளர்ந்து
ஒரு வேலை கிடைத்து
ஒரு வழியாக செட்டில் ஆகும் சமயம்

அனைவரும் ஆவலோடு அவன் வளர்ச்சியை
அவனை ஆசையாய் எதிர்பார்க்கும் நேரம்
அவன் மரணம் இளவயதில்
அது அனைவர் உள்ளத்தையும் உருக்குகிறது

உயிரை இழக்கும் அவன்
உயிரை எடுக்கும் காலன் கொடியவன்

முப்பது வயது முருகானந்தம்
மூளையில் புற்று நோய்
அன்பான காதலியையும்
அத்துடன் குடும்பத்தையும்
மரணத்தால் தவிக்க விட்டவன்

இருபத்தேழு வயது முருகேசனுக்கு
இடியோபதிக் திராம்போ சைட்டோ னிக் பர்ப்யூரா
மூளையில் கட்டுப்படுத்த முடியாத இரத்தக் கசிவு
முடிவில் மரணம்

முப்பது வயது மகேந்திரன்
மூளையில் கட்டி
மனைவி மகளை
மரணத்தால் பிரிந்தான்

24 வயது ராஜேஸ்வரியை மரணத்தால்
இரு பிள்ளைகளிடமிருந்து பிரித்த Blood Cancer

மாடியில் இருந்து தவறிவிழுந்து
மரணத்தைத் தழுவிய ராம்குமார் I yr B.com

மேல்நாட்டில் வேலைக்குச் சென்று
மேல்உலகம் சென்ற மோகன் குமார், கார்த்தி, வினோத்

சொல்லிக் கொண்டே போகலாம்
சொல்ல முடியாத இளவயது மரணங்கள்
என்ன பிழை செய்தார்கள் இவர்கள்
எதற்காக இறைவா இளம்வயதில் பறிக்கிறாய் ?

இது போன்ற இளவயது மரணங்களால்
இறைவா உனக்கு என்ன அல்ப சந்தோஷம்

படைப்பவனும் நீ
பாதியில் அழைப்பவனும் நீ
இனி இந்த விளையாட்டு போதும்
இதயங்கள் நொறுங்காமல் குடும்பங்கள் சிதையாமல்
காப்பது உன் வேலை
கலங்க வைக்காதே இனி ........

9 comments:

ஹேமா said...

முனியப்பன் வாழ்வில் எத்தனை மரணங்களைச் சந்திக்கிறீர்கள்.
சகித்தும்கொள்கிறீர்கள்.இளவயது மரணம் என்பது தாங்கமுடியாத ஒன்று.பிறப்பைக் குறிக்கும் உங்களால்கூட இறப்பைக் குறிக்கத் தெரியவில்லையே!

தற்சமயம் என் சிநேகிதி 30 வயதுதான்.திருமணமாகி அழகான அனபான கணவன்,5 வயதும் 1 1/2 வயதுமாய் இரு குழந்தைகள்.இரத்தப் புற்றுநோயால் போராடிக்
கொண்டிருக்கிறாள்.மருத்துவ வசதி நிறைந்த இந்த நாட்டில் கூட அவளைப் பூரண குணமடைய வைக்க முடியாது என்று சொல்லிவிட்டு,
மாதமொருமுறை இரத்தம் மாற்றி எடுத்துக் கொடுத்த்படி உலாவவிட்டி
ருக்கிறார்கள்.அவளின் மனநிலையோ பரிதாபம்.என்னதான் செய்யலாம்.
ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே எம்மிடம்.

benza said...

என்ன முனியப்பன் சாரு, ஒரேயடியாக மரணத்தில் இறங்கிடீங்க ?
மரணம் நிச்சயம் >>> அது இளம் வயதில் சம்பவித்தால் தாளாத துக்கம்தான் >>>
முதிர்ந்த வயதில் சம்பவித்தால் மட்டும் என்ன சந்தோஷமா ? >>> அதுவும்
துக்கம் தானே ? >>> ஆனால் மரணத்தை சந்தோஷமாக ஏற்றுகொளும் சமுதாயமும்
இருக்கிறதே ? >>> அவர்களது மன நிலை எப்படி இருக்கும் ? >>> அதில் இருந்து
ஒரு பாடம் பெற இயலுமா ?

Dikshith said...

ilam vayadhil pala ketta pazhakkangal irundhu adhanal maranam vandha right aana neenga refer panna murugappan oru medical rep thaane enakkum avarai nandraga theriyum nalla ozhukkamana payyan PAAVAM VIDHI IVANGA KUDUMBATHIL VILAYADIDITCHU.

Dikshith said...

sorry sir neenga refer pannina 30 vayadhu muruganandham enakkum theriyum ennoda commentla murugappan nu thappa pottutten

Muniappan Pakkangal said...

Thank u for ur visit Hema,really death in the start of life is not digestable.

Muniappan Pakkangal said...

Thank u Benzaloy sir.We are born to die.Read the post carefully,it means the death of a person whom the family depends on,who is at the start of life,really it is unbearable.

Muniappan Pakkangal said...

thank u Dikshith,without any bad habbits,death in younger age completely spoils the dreams of the family.

வினோத் கெளதம் said...

எத்தனை மரணங்களைச் சந்திக்கிறீர்கள்.
சகித்தும்கொள்கிறீர்கள்.இளவயது மரணம் என்பது தாங்கமுடியாத ஒன்று.

மறக்க முடியாத ஒன்றும் கூட..

Muniappan Pakkangal said...

You are correct Vinoth Gowtham,death at the start of life is unbearable.