Sunday, January 18, 2009

முனியப்பனின் யானைக் கனவுகள்

கனவுகளும், பலன்களும்

இது எந்த அளவுக்கு உண்மை ?

முனியப்பனுக்கும், யானைக்கும் எந்த பிறவில, என்ன தொடர்போ தெரியலை. முனியப்பன் கனவுல யானை வரும். பொதுவா அதிகாலை கனவு தான். சின்னப் பிள்ளைல இருந்தே முனியப்பன் கனவுல யானை வரும். அப்பல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. இப்ப ஒரு 15 வருஷமாத்தான் அந்த யானைக் கனவுகளை அலசிப் பாக்குறார் முனியப்பன்.

யானை கனவுல வரும், லேசான கனவா என்ன ? யானை முனியப்பனை ஓட ஓட வெரட்டும். சமயத்துல, பயத்துல முனியப்பன் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சு கூட ஒக்காந்திருவார். அப்ப ஹார்ட் படக்படக்னு துடிக்கும். படக் படக் நிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு பயங்கரமா கனவு இருக்கும்.

சமயத்துல ஒத்த யானை வெரட்டும். சில சமயம் ஒரு யானைக் கூட்டமே முனியப்பனைக் கனவுல வெரட்டும். கனவுல யானை துரத்த, முனியப்பன் ஓட, சும்மா செம thrillஆ இருக்கும். Hollywood படமே எடுக்கலாம். செம chase.

இப்படித்தான் 1995 கடைசில, கனவுல, யானை & யானைக் கூட்டம் முனியப்பனை துரத்துச்சு. ஒரு மூணு மாசம் அப்பப்ப துரத்தும். தினசரி கெடையாது. 1996 பிப்ரவரி வரைக்கும். 1996 பிப்ரவரி 16ந் தேதி முனியப்பனோட ரோல்மாடல், அவுக அப்பா K.வேலுச்சாமி B.A., B.L. தமிழக அரசு நீதித்துறை நீதிபதி (ஓய்வு) மரணத்தைத் தழுவுறார்.

அப்புறம் கனவுல யானையக் காணோம். மறுபடியும் 1999ல யானை கனவுல வருது, ஒரு மூணு மாசம் அப்பப்ப gap விட்டு.1999 ஏப்ரல் 14ந் தேதி முனியப்பனோட பெரியப்பா போய்ச் சேந்துர்றார். அப்பத்தான் முனியப்பன் யானைக் கனவை அலசி, ஆராய்ஞ்சு பாக்குறார். "யானை கனவுல வந்தா, நம்ம வீட்டு ஆளு ஒண்ணு அவுட்ரா."

அப்புறம் யானைக் கனவக் காணோம். 2002 ல மறுபடியும் யானைக் கனவு. இந்த தடவை யானை என்ன செய்யுது ? முனியப்பன் வீட்டுக்குள்ள வந்து ஹால்ல ஒக்காந்துக்குது. முனியப்பனுக்கு ஒரே நடுக்கம். என்ன ஆகுமோன்னு பயம். பயந்தது மாதிரியே மே 11ந் தேதி அவரோட அன்புத்தம்பி மூர்த்தி இறந்துர்றார்.

மறுபடி 2005ல யானைக் கூட்டம் முனியப்பனைக் கனவுல துரத்துது. முனியப்பன் என்ன செய்வார் ? அவரும் ஓடுறார். 2003 மார்ச்ல முனியப்பனோட சித்தப்பா அவுட்.

07.01.09 மதியம் மறுபடியும் முனியப்பன் கனவுல யானை. ஒரு யானை முனியப்பன் வீட்டு முன்னால வந்து நின்னுக்கிட்டு "நீ வீட்டை விட்டு வெளிய வா பாப்பம்"னு முனியப்பனுக்கு சவால் விட்டுக்கிட்டிருக்கு. என்ன ஆகப் போகுதோன்னு முனியப்பனுக்குக் கவலை. இந்தத் தடவை பகல் கனவு. பகல் கனவு பலிக்காதும்பாங்களே, அப்படின்னும் ஒரு யோசனை, முனியப்பன் மனசுக்குள்ள ஓடுது. இருந்தாலும் கனவுல யானை, அதான் பயம். நெனச்ச மாதிரியே 09.01.09ந்தேதி முனியப்பன் அப்பாவோட தங்கச்சி அவுட். இந்தத் தடவை ரொம்ப speed. கனவு வந்த ரெண்டு நாள்ல result.

கனவுல யானை வெரட்டுனா முனியப்பனோட தந்தை வழி உறவுல ஒரு இறப்பு நிச்சயம். இது அனுபவப்பூர்வமான உண்மை.

14 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

//07.07.09 மதியம் மறுபடியும் முனியப்பன் கனவுல யானை. //

07.01.09 என்று நினைக்கிறேன்!

இது உண்மையா சார் ?

Muniappan Pakkangal said...

You are correct sridhar Kannan,it was a mistake in posting by the person uploading.Thank u,it is 07.01.09.

ஹேமா said...

ஐயோ....திரும்பவும் யானையா! வேணாம் முனியப்பன்.பயமாத்தான் இருக்கு நீங்க சொல்றதைப் பார்த்தா.ஆனாலும் நம்பணுமா அதை.இதனாலதான் இறப்புக்களா?இத்தை விஞ்ஞான அறிவுள்ள நீங்களுமா!விட்டுத்தள்ளுங்க.
யானைன்னா பிள்ளையார்தானே!கனவெல்லாம் பொய்.

முனியப்பன் உங்ககிட்ட ரொம்பநாளா இரண்டு விஷயம் சொல்லனும்ன்னு.1) உங்க பதிவுகளை ஏன் தமிழ்மணம்,தமிழிஸ் ல இணைக்காம இருக்கீங்க.பலபேர் பிரயோசனப்படுத்திக்குவாங்களே!

2)ஏன் உங்க பின்னூட்டங்களைத் தமிழில் தரமாட்டேங்கிறீங்க!தமிழ்ல பதில் தாங்க பார்ப்போம்.ஒருவேளை அதிக வேலைக்களைப்போ!

benza said...

Sigmund Freud அவர்களது Meaning of Dreams படித்தேன் அதில் யானை சம்பந்த கனவுகள்
காணவில்லை. >>> உங்களது கனவுகள் ஒவ்வொரு மரணத்தின் அறிகுறியாக இருப்பதால் இறந்தோருடன் உங்களது உறவுகள் எத்தகையது என அலசிநீர்களா???

மேலும் தொடர ஆவல்.

Dikshith said...

neenga anubava reethiyagha Yaanai kanavu chase maranam endru varisaipaduthi irukkinga aana ennoda opinian ennamo idhu oru BAD COINCIDENCE madhiri thaan thonudhu edhukkum VINAYAGA PERUMANAI vazhipadungal ellam nanmaikke.

Muniappan Pakkangal said...

Really i am having it Hema.In this scientific world it is hard to believe,but it happens to me.I don'know the explanation for it.I have my blog in tamilish & my article Akshaya trustm Ramayyavum has got 9 popular votes & has been moved to the homepage in tamilish.I am new to computer.i am using the system which i got for my sister's son. i am fully engaged in my profession & with my sister's 2 sons aged & & 4.So i have little time to post my replies in tamil which i don't know to type. I write my articles in tamil which is posted by my younger generation friends Rajneesh & Senthil.

Muniappan Pakkangal said...

thank you Benzaloy Sir,i have written in the post as these dreams are related to my father's side relatives.

Muniappan Pakkangal said...

It is not a bad coincidence Dikshith.As i am chased by elephants,i don't go to Pillayyar.

ஹேமா said...

முனியப்பன்,எனக்கு சரியா சுகமில்லை.இங்கு குளிர் கூடுதலான காரணமோ என்னவோ தெரியவில்லை.அதற்கேற்ற சூழ்நிலையில்தான் உடை,வீடு அமைந்திருக்கிறது.அதையும் தாண்டி காய்ச்சல்,தலவலி,தொண்டைநோ.
எனக்குத் தொண்டை நோ தாங்கமுடியவில்லை3-4 நாட்களாக.எச்சில் விழுங்கக்கூட முடியவில்லை.என்ன சாதாரண வைத்தியம் செய்யலாம்?உப்புக் கரைசலை வாயில் வைத்திருக்கச் சொன்னார்கள்.

இன்னுமொரு வைத்திய உதவியும் உங்களிடம் பின்பு கேட்கிறேன்.

benza said...

நல்லெண்ணை தொண்டையில் தடவுவார்கள்

Muniappan Pakkangal said...

Thank u Hema for asking for an advice.Take hot water for drinking,you can also do salt water goggling,it is better to take medicine after consulting a Doctor over there,as i don't know whether medicines can be purchased without a doctor's prescription there.

Muniappan Pakkangal said...

thank u Benzaloy Sir for ur advice.

வினோத் கெளதம் said...

என்ன சார் திகில் கிளபுறிங்க..

Muniappan Pakkangal said...

It happens Vinoth gowtham.See how i'll feel at the time dream,really fearful.