Friday, February 6, 2009

கேட்பாரில்லையா ............... ?

குருதி வெறி பிடித்த பிசாசுகளிடம்
இறுதி நாட்களில் பல உயிர்கள்
தமிழினத்தை அழிக்க

தான்தோன்றித் தனமான தாக்குதல்
இருக்கும் ஒரு மருத்துவசாலை - மீதும்
இடைவிடாத குண்டு வீச்சு

தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறென்ன அவர்களிடம்
இன வெறி பிடித்த
இலங்கை அரசைக் கேட்பது யார் ?

தீர்மானங்கள் போட்டால் அது
தீர்வாகுமா ஈழத் தமிழனுக்கு
கடை அடைத்தால்
கஷ்டங்கள் போய் விடுமா ?

மேடையில் முழங்கினால் ஈழத் தமிழன்
மேல்உலகம் செல்வது நின்று விடுமா ?

தொப்புள் கொடி உறவுகள் அரசியலாக்காமல்
தோணி ஏறி துயர்துடைக்க வரலாமே
வீடியோ பாருங்கள் ஈழத் தமிழனின்
விதவிதமான அவலங்கள், அழிவுகள், காரியங்கள்

உலகமே உறங்குது
உலக போலீஸ் அமெரிக்காவும் தான்
ஒபாமா சின்னப் பிள்ளையா
ஒன்றும் தெரியாமல் இருப்பதற்கு

ஐக்கிய நாடுகள் சபை எதற்கு
அநியாயங்களைக் கேட்பதற் கில்லையா ?
கடவுளுக்கும் கண்ணில்லை யென்றால்
காது கேட்கவில்லை யென்றால் ஈழத் தமிழன்
கண்களில் பெருகும் கண்ணீர்
காலத்தை வெல்லும்

8 comments:

Swamy Kitcha said...

romba kashtam sir. ippadi kolraangalae...idharku eppodhu vidivu varum enru theriya villai..innoru genocide namm kann munnadi nadakudhu...hitler thirumbha pirandhu vandhaarpol bayangara nigazchigal. indha avalangalum kodumaigalum theerndhae theera vaendum. kadavul enbadhu onru irukkumaanal, ippadi latcha latchamai kadavulai senradayum avalangal nirka vaendum.

ennudaya kanneer anjali.
kitcha

Muniappan Pakkangal said...

Nandri Kitcha,no one will be able to bear this sort of brutalism against innocents & this should be stopped.

butterfly Surya said...

நமது சூழலைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் எப்போதும் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சிறு அசைவையும் / நகர்வையும் அவர்கள் ஒருபோதும் செய்யத் துணிவதில்லை.

நாம்தான் மிகையிலும், கவர்ச்சியிலும் நம்மை தொலைத்து இறுதியில் சகலத்தையும் தொலைக்கிறோம்.நாம் எப்போதும் ஏமாளியாகத்தான் இருக்கிறோம்.

மேடைப்பேச்சுகளில், அடுக்குமொழி வாய்ஜாலங்களில், எண்ணற்ற வாக்குறுதிகளில், மெய்மறக்கிறோம்.

நகரும் கால இடைவெளியில் மொத்தத்தையும் மறக்கிறோம். நாசமாய் போகும் இந்த கலாச்சாரம் தேவையா..??

பிணந்தின்னியாய் மனிதர்களின் கூடாரமா.??


வேதனையிலும் மிக்கொடிய வேதனை இது..


குழந்தைகளையும் கொல்லும் அந்த கொடியவர்களை என்ன செய்வது. இத்தனை பேரையும் கொன்று அவர்கள் கடைசியாய் பெறப்போவது ஆறடி நிலமே....

அதற்கா இத்தனை கொடுமை..

Muniappan Pakkangal said...

You are right vannaththupoochchiar,politicians are for their own welfare,something is needed immediately for this killing which has to be stopped.

ஹேமா said...

நன்றி முனியப்பன்.எங்களோடு சேர்ந்து கலங்குகிறீர்கள்.அரசியலில் இருப்பவர்களுக்கு ஆயிரத்தியெட்டு வேலைகள்.இதில் எங்கே ஈழத்தமிழனை நினைக்க!ஐ.நா வுக்கும் எத்தனையோ தடவைகள் நடந்துவிட்டோம்.இன்னும் நடப்போம்.சென்ற 4ம் திகதி கூட...கடவுள்.....!

Muniappan Pakkangal said...

I hope & pray EEZHA Tamilan to bounce back from this oppression Hema.

Dikshith said...

Ulagaththil endha oru unjustified actions kum Orumiththa Urimaikural koduththalthaan adharku oru mutrupulli vaikamudiyum. Indha appavi makkal kollappadumbodhu kooda NAAM ONDRU SERDHU KURAL KODUKAALAINA VERA EDHUKKU KURAL KODUPPOM YOSIYUMGA. This shows that we r not united on PUBLIC issues.

Muniappan Pakkangal said...

nandri Dikshith,it is a genocide that has to be stopped.See the plight of the poor Eezha thamizhan in the videos in you tube,it is really horrible.