Wednesday, March 18, 2009

டேய் .... மரத்தை வெட்டாதடா

முனியப்பன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அதுனால தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர். வீட்டைச் சுத்தி, இருக்க எடத்துல பலவகைச் செடிகளை வளத்துக்கிட்டிருக்கார்.

மதுரை வெயில், சும்மா சொல்லக்கூடாது, அத அனுபவிக்கக் கொடுத்து வைக்கணும். வெயிலோட கடுமை தாக்காம இருக்க முக்கியமான செடிகளை எடத்த மாத்தி வச்சிக்கிட்டே இருப்பார் முனியப்பன். வீட்டுக்குப் பின்னால மாதுளை மரம். அதுக்கடில பூந்தொட்டிய வைக்கலாம்னா ரெண்டு கெள தடுக்குது.

என்ன செய்ய? வேற வழியில்லை. அருவாள வச்சு ரெண்டு கெளயவும் வெட்டுனார். திடீர்னு பின்னால இருந்து ஒரு சத்தம் 'டேய், மரத்த வெட்டாதடா'. திரும்பிப் பாத்தா 7 வயசு அமர், முனியப்பன் தங்கை மகன்.

ஏம்ப்பான்னு அமர்கிட்ட கேட்டார் முனியப்பன். அதுக்கு அமர், "மரத்தை வெட்டிட்டா ஆக்ஸிஜன் எப்படி கிடைக்கும் ?, எப்படி மூச்சு விடுவ?"ன்னான்.

இளம் தளிரின் மனதில் இயற்கையின் தாக்கத்தைப் பாருங்கள். இவ்வளவு அருமையான கருத்து உள்ள பையனை முனியப்பன் ஒடனே கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார். நல்ல எண்ணங்களைப் பாராட்டுவதற்கு லேட் பண்ணக் கூடாது.

மரங்கள் நாம் வாழ பிராணவாயு கொடுப்பவை என்று பள்ளியில் அமருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்குத் தான் பாராட்டு.

9 comments:

வினோத் கெளதம் said...

நல்ல விஷயங்கள் யாரு சொன்னாலும் கேட்டுக்க வேண்டியது தான் சார்.

ஹேமா said...

உண்மையில் அமரின் ஆசிரியருக்குத்தான் பாராட்டுக்கள்.

அதை உரிய இடத்தில் பயன்படுத்தத் தெரிஞ்சிருக்கே அந்தச் சின்னக்குட்டிக்கு !

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham & Hema.Nature has to be preserved and the teachers educate abt it.The students who get this in mind will bring back the environment.

butterfly Surya said...

அந்த குட்டிக்கு உள்ள அறிவு சென்னைக்கு இல்லையே..??

அண்மையில் சென்னையில் திறக்கப்பட்ட ஒரு பாலத்தின் View சரியாயில்லை என்று 30 வருட பல மரங்களை ஒரே நாளில் வெட்டி தீர்த்தார்கள்.

அந்த சாலை வழி செல்லும் போகும் போதெல்லாம் யாரோ அழுவது போல நினைக்க தோன்றுகிறது..

Muniappan Pakkangal said...

Nandri Butterfly,felling of trees for road expansion is unavoidable,but to compensate it they should plant trees nearby.We are losing our trees bcz of selfish people.Something should b done for the green cover.

butterfly Surya said...

Dear Dr. Congrats. This post listed at www.vikatan.com.


http://youthful.vikatan.com/youth/bcorner.asp

Cheers..


Surya

Dikshith said...

pirkaalathil intha kutty amar oru migapperiya samuga ennangal padaitha amaraga vazhthukkal ........

Muniappan Pakkangal said...

Nandri Surya for ur info,itz a great pleasure to get my post listed in youthvikatan.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith for ur wishes.