கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் பற்றிய வார்த்தை இல்ல இது. கிராமப்புற, அடித்தட்டு மக்கள்கிட்ட முனியப்பன் கேட்ட வார்த்தை இது.
முனியப்பன் படிப்பு, உலக நிகழ்ச்சிகள் தவிர நடைமுறை வாழ்க்கைப் பழக்கத்துல இல்லாதவர். மொதல்ல இந்த வார்த்தையக் கேட்ட முனியப்பனுக்குப் புரியலை. அந்த வார்த்தையச் சொன்ன நோயாளிகிட்ட "குடும்பத்துல இருக்கது, இருந்தா" அப்படிங்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டார்.
அந்த வார்த்தையின் அர்த்தம், கணவன் - மனைவிக்கிடையே உள்ள உடலுறவு. எவ்வளவு நாகரீகமா சொல்றாங்க பாருங்க. கிராமத்துப் பெண்கள் சிலரும் "குடும்பத்துல இருக்க" பிரச்னைகளுக்காக முனியப்பனிடம் ஆலோசனைக்கு வந்திருக்காங்க.
கிராம மக்கள், அடித்தட்டு மக்கள்கிட்ட நாம தெரிஞ்சிக்கிட வேண்டியது நெறைய இருக்கு. அவங்க நடைமுறை வாழ்க்கைய வாழறவங்க. அவங்க வாழ்க்கை ஏற்றமோ, எறக்கமோ ஓடிருது. நாமதான் கணக்குப் போட்டு, கற்பனைல உலாவி, வாழ்க்கைய தொலைச்சிர்றோம்.
Friday, March 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நானும் இதே மாதிரி வார்த்தை இப்ப தான் சார் கேள்வி படுறேன்.
Nandri Vinoth Gowtham. It is a common word used at Madurai,and i've heard this word from women also.
முனியப்பன்,வார்த்தைகள் மட்டும் அல்ல.கிராமத்தில்தான் வாழ்க்கையே நாகரீகமாகவும் அழகாகவும் இருக்கு.இப்போதும் கூட.
எனக்கும் இந்த வார்த்தைகள் புதுசாவும்,அசிங்கம் இல்லாமலும் இருக்கு.
You've told exactly Hema,it is for the decency of the word, i posted this article. I'll repost one of my previous article Vazhakkozhintha pazhakkangal soon which also is of village nature.
"வழக்கொழிந்த பழக்கங்கள்" பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.
Now itself it is in my blog in older post Hema.
Migapperiya indiavai suzhnthu kondiruppathu niraiya grmangal thaane . Adhilirukkira vaarthaigalai neengal highlight pannathukku nandri . Idhu maathiri niraiya irukku .
Nandri Dikshith,you'll know the heart of village is different from that of ours only when u r close with them.You've correctly told that India innum kiraamathil thaan vaazhnthu kondu irrukkirathu.
நகரத்திலேயே பழக்கப்பட்ட என் போன்றோருக்கு எல்லாமே புதுசாதான் இருக்கு..
அருமை.
Nandri Vannaththupoochiar,so many things are even now in villages,which merit mention.
VERY INTRESTING KNOW PEOPLES CODE WORDS
Itz in practice now also Vellai.
Post a Comment