Thursday, April 2, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (கு.வேலுசாமி B.A., B.L).

கு.வேலுசாமி B.A., B.L.

இவர் நீதிமான். தமிழக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இறைவனை சேர்ந்துவிட்டார் கடமை உணர்வுள்ளவர். நீதித்துறையால் முறையான பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டவர்.

இவர் பதவி ஆரம்பம் திருவண்ணாமலையில. அப்போது பாரதப் பிரதமர் நேரு தமிழகம் வந்த போது அவருக்கு திமுகவினாரால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர் ப.உ.சண்முகம் உள்ளிட்ட திமுகவினர். தமிழகம் முழுவதும் சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்ன பிறகு நாமும் தீர்ப்பு சொல்வோம் என்று மற்ற நீதிபதிகள் காத்திருக்க அதிரடியாக கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் மு. வேலுசாமி. இதைப் பாராட்டி தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் ஹோம் லேண்ட் பத்திரிகையில் எழுதியுள்ளார் என்றால், அன்றைய சுழ்நிலை-1957ல் எப்படி இருந்திருக்கும் பாருங்கள்.

பரமக்குடில வேலுசாமி B.A., B.L. நீதிபதியா பணிபுரிந்தார். அவர் டென்னிஸ் விளையாடுவார். அப்ப நீதிமன்றத்துக்கு பக்கத்திலேயே டென்னிஸ் மைதானம். அவருடைய விளையாட்டுத் தோழர் உலக நாயகனின் வக்கீல் சகோதரர் ரெண்டு பேரும் சாயங்காலம் ஒண்ணா வெளயைடுவாங்க. காலைல வக்கிலுக்கு எதிரான தீர்ப்பு வழக்குல இருக்கலாம். மறுபடியும் சாயங்காலம் ரெண்டு பேரும் ஒண்ணா டென்னிஸ் விளையாடுவாங்க தொழில் வேறு நட்பு வேறு கு .வேலுசாமி எங்க இருக்கார் பாருங்க கொள்கைல.

நெல்லைல கு. வேலுசாமி B.A., B.L., பணில இருக்கப்ப நீதிமன்ற பணியாளர்கள் தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செஞ்சாங்க. கோர்ட் சாவிய மொத நாளே கோர்ட் MC நம்ம நீதிபதிகிட்ட கொடுத்துடுறார். வேலை நிறுத்தம் அன்னைக்கு நீதிபதி வேலுசாமி நீதிமன்றக் கதவைத் தானே திறந்து அன்னைக்கு கோர்ட்ட நடத்துறார். One Man Showவா கோர்டட் பூட்டி சாவிய வீட்டுக்கு கொண்டு வந்துர்றார்.

நீதிபதி கு. வேலுசாமி B.A., B.L. நேர்மையானவர். மேலதிகாரிகள் inspection (ஆய்வு)க்காக அவர் நீதிமன்றத்துக்கு வரும் போது அவங்க பின்னாடி சுத்தமாட்டார். வேலுசாமி அப்பயும் court நடத்திகிட்டு இருப்பார். வந்த உயர்நீதிபதிகள் அவங்களா எல்லா ரிக்கார்டையும் செக் பண்ணிட்டு வேலுசாமி கிட்ட வந்து எல்லாம் நல்லா இருக்கு சார்னு சொல்லிட்டு போவாங்க. அவங்களுக்கு டீ காபி டிபன் எதும் வாங்கி கொடுக்க மாட்டார். அவ்வளவு நேர்மை. அதனால பயமின்மை.

சரி கு. வேலுசாமி B.A., B.L. யார்னு கேக்கறீங்களா நம்ம முனியப்பன் தோப்பனார் தான்.

12 comments:

vinoth gowtham said...

சார்
உங்க அப்பா இதை படித்து இருந்தார் என்றால் ரொம்ப சந்தோஷபட்டு இருப்பார்.

Its Gr8 to hear about him.

vinoth gowtham said...

check my blog

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham,he is a simple man of principles.I've visited ur blog b4 coming 2 my one.

ஆ.ஞானசேகரன் said...

//சரி கு. வேலுசாமி B.A., B.L. யார்னு கேக்கறீங்களா நம்ம முனியப்பன் தோப்பனார் தான்//

நல்ல நீதிபதியின் மகனாக பிறந்து... வாழ்த்துகள் நண்பரே

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,itz God's gift.

Dikshith said...

Andha kaalathle arignar anna adikkadi sollum KADAMAI GANNIYAM KATTUPPAADU enbadhu enakku gnabagam varudhu. Madiyile ganam irundhaathaane vazhiyile bayam. Indha maadhiri Needhibathiya neenga ippodhaya vaazhvil sandhippadhu kadinam.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,it was a pleasure to live with him.

வண்ணத்துபூச்சியார் said...

அந்த மாதிரி மனிதர்களை இன்று தேட வேண்டியதுதான்.

எத்தனை சுவையான சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில்..

அனைத்தும் அருமை.

நிறைய எழுதுங்கள்.

நன்றி.

ஹேமா said...

நல்ல ஒரு தாத்தாவுக்கு,நல்ல ஒரு அப்பாவுக்கு ஒரு மகன் முனியப்பன்.உங்கள் மகனைப் பற்றியும் சொல்லுங்களேன்.உங்கள் பெயர் சொல்லி அவரும் இப்படி எழுதவேணும்.

Muniappan Pakkangal said...

Nandri Vannaththu poochchiar,my father is the base for my life & what all i do is bcz of him.

Muniappan Pakkangal said...

Nandri Hema,i'll post an article on my son.

vellaisamy said...

VERY GLAD TO KNOW YOUR FATHERS HONEST.