25 வருடங்களுக்கு முன் ...
இருகரம் கோர்த்து அலைந்தோம்
இடைவெளி இல்லாத
இனிய கல்லூரி பயணம்
குறும்புகள் சிரிப்பலைகள்
குதூகலமான நாட்கள்
சேட்டைகளுக்கும் குறைவில்லை
சேட்டை செய்யும் வாலிப வயது
முடிந்தது பிணைப்பு
இடியால் அல்ல
நீ ஒரு பக்கம்
நான் ஒரு பக்கம்
வாழ்க்கை அலையில்
வாழப் புறப்பட்டோ ம் தனித்தனியாக
வருடங்கள் ஓடின
இருவருக்கும் தொடர்பில்லாமல்
நீ எங்கே
இருக்கும் இடம் கூட
இருவருக்கும் தெரியாது
உலகம் உருண்டையானது என்பது
உள்ளன்புள்ளவர்கள் மீண்டும் சந்திக்க
உன் குரல் அலைபேசியில் திடீரென
இன்பமாக இருந்தது அந்த நாள்
25 வருடம் சென்றாலும்
இருவருக்கும் இன்பமான பொழுது
மருத்துவம் படிக்க உன் மகனை
மதுரைக்கு கொண்டு வந்தாய்
சந்தித்தோம் பல காலம் கழித்து
சந்திப்பில் கல்லூரி நாட்கள் நினைவுகள்
உணவருந்தி உரையாடும் பொழுது
உனக்குள்ள வியாதிகளைப் பட்டியலிட்டாய்
BP, சுகர் அத்துடன்
AORTIC ANEUERYSM அதுவும்
AORTIC ARCH அருகில்
அறுவை சிகிச்சையும் ஆபத்தானது
ஓடும் வரை ஓடட்டும் என
ஓடிக் கொண்டிருந்தாய்
மூன்று மாதங்கள் தான் உன்னை
மீண்டும் பார்த்து, அதற்குள்
முடிவு உன்னை முத்தமிட்டு விட்டது.
AORTIC ANEURYSM வெடித்து
அற்புதமான உன் உயிரைப் பறித்து விட்டது.
அன்பு நண்பா அபு முகம்மது
ஆற்ற வொண்ணா சோகம்
உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல
உன் நண்பர்கள் எங்களுக்கும் தான்
மாப்ளை உன்னை ...
மறக்க முடியுமா மாப்ளை
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நிஜமாய் ஒரு நியாயமான கேள்வி...
பிரபாகர்.
Nandri Prabakar,we met after a gap of 25 years only to miss him permanently.He was such close.
NEENGAL INDHA NABARAI NEDUNAALAIKUP PIREGU SANDHIKKAMAL IRUNDHAAL INDHA ALAVU BAADHIPPU IRUNDHIRUKKADHU. AVARAI PAARTHU PARASPARAM KARUTHUKKAL PARIMAARIKOLLUMBODHU AVAR IRANDHU PONADHU KODUMAI, DHURADIRSHTAM, AANAL KAALAN AVANADHU KADAMAIYAI SEIDHUVITTAN.
பிரிவு எப்பொழுதும் தாங்க முடியாதது..
Exactly Dikshith.We were close in our student days,after that i did'nt know anything abt his whereabouts.All of a sudden he emerged and also passed of suddenly.
Exactly Vinoth Gowtham and that too someone close.
ரொம்பக்கஷ்டமா இருக்கு டாக்டர் உங்க நண்பரோட இழப்பு என்னையும் பாதிச்சுடுச்சு
Nandri Thenammai,it was a heart felt thing to lose a close frnd.
ஓ....மனசுக்குப் பாரமாயிருக்கு டாக்டர்.நட்பின் ஆழத்தை நிறைவாய்ச் சொல்லியிருக்கீங்க.
Itz friendship Hema,we met after a longtime and his sudden demise is unbearable.Our classmates are planning for the future study of his boy doing 1 st year medicine.
முனியப்பன் ஸார் இழப்பிலிருந்து மீண்டு வாருங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Nandri Thenammai,thank you for ur New Year wishes,wishing you the same.My friends posting my articles are busy with their MBA exam,and my next post will be after 7 th Jan.In btwn,if they find time they will post my another article for Manarkeni 2009.
BUTIFULL POEM.
Post a Comment