Thursday, July 29, 2010

ஒரிஜினல் முனியப்பன்


முனியப்பன்கிற புனை பேர்ல எழுதறது ஒரு கவர்ச்சிக்குத்தான். அப்ப முனியப்பன்!

தென் மாவட்டத்துக்கே உள்ள அடாதுடி நடவடிக்கை, மொரட்டுத்தனம், பேச்சு, மீசை உள்ளவர் ஒரிஜினல்.நம்ம முனியப்பனும் அதே மொரட்டு பகுதிங்கறதால மொரட்டுத்தனத்துல ஊறினவர். ஒரிஜினலும், நம்ம ஆளும் ஒரே பூமிங்கறதால நட்பு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு.

ஒரிஜினல் மதுரைல ஒரு பிரபல மூன்றெழுத்து கம்பெனியோட ரப்பர் பேக்டரில வேலை பாத்ததாலயும் மிகுதியான புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாலயும் சுவாசக் குறைபாடு COPD உள்ளவர். முனியப்பன் சிகரட் குடிக்காதய்யான்னு சொன்னா ஒரிஜினல் கேக்க மாட்டார்.

ஒரிஜினல் அப்பப்ப டூவீலர்லருந்து skid ஆகி கீழ விமுந்து எந்திரிக்கிறவர் . Hero honda பவுச்ல ஒரு துணி ரெடியா இருக்கும்காயத்துக்கு கட்டுப்போடத்தான். ஒரு தடவை திருமங்கலம் போய்ட்டு வர்ற்ப்ப நாய் குறுக்க ஓடுனதுல ஒரிஜினல் கீழ விமுந்து வேற இடத்தல அட்மிட் ஆயிட்டார்.

ஒதட்டுக்கு மேல காயம், மீசைல gap விழுந்துருச்சு. கண்ணாடில பாத்தா பாதி மீசய காணோம். ஒரிஜினல பாக்கப் போன நம்ம முனியப்பன்கிட்ட மீசை இல்லைன்னா தொங்கிருவேன்னு சொல்லி பயமுறுத்திட்டார். முனியப்பன் அவர அந்த ஆஸ்பத்திரிலருந்து கடத்திட்டு தன்னோட எடத்துக்கு கூப்பிட்டு வந்து மீசையை சரிபண்ணி விட்டார். பழயபடி மீசை வந்த ஒடனே கூடக் கொஞ்சம் அட்டாச் ஆயிட்டார் ஒரிஜினல்.

முனியப்பனுக்கு இதயத்துல ஒரு சிக்கல் வந்து அதுக்காக சென்னைல ஒரு opinion வாங்கப் போனார். ஒரிஜினல் முனியப்பனும் கூடவே போனார். ரெண்டு பேரும் சென்னைல ஒரு heart டாக்டர்கிட்ட போனாங்க. மொதல்ல ஒரிஜினல் தன்னோட COPD பிரச்சினைய consult பண்ணார்,
வெளிய போய்ட்டார். நம்ம முனியப்பன் தன்னோட consulting முடிச்சுட்டு வெளிய வந்தார். ஒரிஜினலை காணோம். முனியப்பன் கூட வந்த திருப்பதி, கார் டிரைவர் எல்லாரும் ஒரிஜினலை தேட ஆரம்பிச்சாங்க. Hospitalல எல்லா floor லயும், கீழ பார்க்கிங்லயும் தேடுனாங்க, ஒரிஜினல் சிக்கல. செல் போன்லயும் கெடைக்கல. கடைசில அந்த ஆஸ்பத்திரில ஒரு பெட்ல இருந்து ஒரு கை ஆடுது, என்னன்னு பார்த்தா முனியப்பனை ஒரிஜினல் கைய ஆட்டி கூப்பிடுகிறார். ஒரிஜினலை பெட்ல படுக்கப்போட்டு மூக்கு மேல netilaizer (நெடிலைசர்)அ வச்சு அமுக்கி வச்சதால ஒரிஜினலை கண்டு பிடிக்க முடியலை.

போன எடத்துல பாருங்க , நல்லா போன ஒரிஜினலை படுக்கப் போட்டு தேவையில்லாத வேலைய பாத்துட்டாங்க. அந்த hospital ல நெபுலைசரை பிடுங்கி போட்டுட்டு ஒரிஜினலும் முனியப்பனும் எஸ்கேப் ஆயிட்டங்க.

நம்ம முனியப்பனோட அறிவுரையை கிளீன்ஆ பாலோ பண்ணி சிகரட்ட விட்டுட்டார் ஒரிஜினல் முனியப்பன். இப்ப அவரோட COPD பிரச்சினை நல்லா இருக்கு, நல்லா மூச்சு விடமுடிகிறது அவரால.

தேவையில்லத சிகிச்சைகள் தவறான diognosis நெறய இருக்கு , பின்னால ஒரு பதிவுல வரும்.

13 comments:

ஹேமா said...

ஒரிஜினல் முனியப்பன் !

Muniappan Pakkangal said...

They have not added up Muniappan's photo which i hope'll b added soon.Plz comment again after seeing his photo.He is such an affectionate person with me& so i decided to write in his name.When i opened my building,he sat for a long time to get the first injection from me.

தமிழ் நாடன் said...

நல்லாருக்கு சார் நம்ம ஒரிஜினல் முனியப்ஸ் அறிமுகம்! போட்டோவிலும் நல்ல கம்பீரமா இருக்கார்! முரட்டு பாசக்காரர்!

Muniappan Pakkangal said...

Yes TamilNaadan,itz a pleasure 2 move with him.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லா அறிமுகம்... உங்கள் போட்டோவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சார்... வேலையில் காரணமாக அடிக்கடி உங்கள் பக்கம் வரவில்லை...

Muniappan Pakkangal said...

Thank you Gnanaseharan.

Dikshith said...

Neenga ennadhaan ORIGINAL MUNIAPPAN ai idhil arimugap paduththinaalum enakku MUNIAPPAN na adhu ORIGINAL DUPLICATE ellame NEENGADHAAN sir.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,em mela ivalavu paasamaa.

sweatha said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

தேனம்மை லெக்ஷ்மணன் said...

When i opened my building,he sat for a long time to get the first injection from me.///

ஹாஹாஹா டாக்டர் இவ்வளவு அட்டாச்சுடா. i never expect this..:))

எனக்கு கூட சின்ன வயசில் மன்னர்குடியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற டக்டரைப் பிடிக்கும்.. அவரோட புன்னகையை பாக்கவோ என்னவோ மாசாமாசம் காய்ச்சல் கூட வரும்.. :)))அவரைப் பார்த்தா சரி ஆகிரும்.

Muniappan Pakkangal said...

Nandri Thenammai,i've many attached people like Muniappan.Another post will come abt him.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

உங்களோட பக்கங்கள் சுரீர்ங்குது ஊசி போடறாப்போல...

Muniappan Pakkangal said...

Nandri Aaranyanivas Ramamoorthy.