Thursday, August 26, 2010

எனக்கு என்ன Benefit?

முனியப்பனின் மிகவும் close ஆன நண்பர் "A".

"A" க்கு திருமணம் ஆனதிலிருந்தே அவர் மனைவியிடம் ஒத்துப் போகவில்லை. அப்படியிருக்கும் இல்வாழ்க்கையால் Aன் மனைவி தாய்மைப் போறு அடைந்தார். அவர் மனைவி நிறை மாதமாக இருக்கும் பொழுது Aன் மனைவி சொந்தங்கள் வீட்டிற்கு வந்து Aஐ தாக்கி A ன் மனைவியுடன் சென்று விட்டனர்.

A விட்டது சனியன் என்று சந்தோஷமாயிட்டார். 15 நாள் கழித்து Aக்கு ஒரு டெலிகிராம். பையன் பொறந்திருக்கான்னு. ஊருக்கு போன Aன் மனைவி தான் எங்க இருக்கேன்னு எந்த தகவலும் குடுக்கல. மொட்டையா ஒரு தந்தி. A எப்படி போவார்? ஆனாலும் மகன் பொறந்த சந்தோஷத்தை அக்கம் பக்கத்தில உள்ளவங்களுக்கு சந்தோஷமா சாக்லேட் குடுத்து அசத்திட்டார். 3 வருஷம் A க்கும் அவர் மனைவிக்கும் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லாம ஓடிருச்சு.தேவை இல்லாத வேலையை செய்ற முனியப்பளை மாதிரி நட்பு வட்டம் Aஐ அவர் மனைவியோட சேர்த்து வைக்கம் முயற்சில எறங்குறாங். No use.3 வருஷம் கழிச்சி பையன பாக்க A கெளம்பி போனார். போன எடத்துல ஒருத்தன் 'இங்க யாராவது வந்தீங்க கொலை விழுகும்' அப்படிங்கவும் A வம்ப வளக்காம வந்துட்டார். முனியப்பன் Aன் மனைவி தொலைபேசி நம்பர வாங்கி Aகிட்ட குடுத்து அவங்க ரெண்டு பேரயும் பேச விட்டார்.
பேசினாங்க. போன்லயும் சண்டை.அந்தம்மா சரிக்க வரல. மகன் குரல, 3 வயசு பையன் குரல, போன்ல கேட்டு சந்தோஷப்பட்டுக்குவார் A. அந்த போன் சந்தோஷத்துக்கும் வேட்டு வச்சுட்டாங்க. Aன் மனைவி அந்த எடத்த விட்டு பையனோட கெளம்பி போய்ட்டாங்க. போனவங்க போனவங்கதான் . எங்க இருக்காங்கன்னு ஒரு தகவலும் இல்லை.
Aன் அப்பாவும் அம்மாவும் மனசு ரொம்ப ஒடைஞ்சுட்டாங்க என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்னு புலம்பிகிட்டிருந்த A யின் அப்பா, புலம்பிகிட்டே போய்ச் சேந்துர்றார்.
Aன் அம்மா நல்லா விசாரிக்காம கல்யாணத்தை பண்ணி வச்சிட்டேனே ன்னு புலம்பிட்டிருந்தாங்க.

A மறுபடி கல்யாணம் பண்ணாம தானுண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கார். இப்படியே 10 வருஷம் ஓடுது. Aன் மனைவி, A கூட வாழவும் வரல, பிள்ளையவும் Aகிட்ட காமிக்கல. அந்தம்மாவும் மறு கல்யாணம் பண்ணலை. ரெண்டு பேரும் கோர்ட்டு கேசுன்னு அலையல.
முனியப்பன் மருத்துவரில்லையா அவர்கிட்ட வந்ந ஒரு நோயாளி Aன் மனைவி இருக்கும்
எடத்தையும் போன் நம்பரையும் குடுக்கிறார். அந்த நோயாளி Aன் மனைவியோட சொந்தக்காரர். முனியப்பன் Aயின் மனைவியுடன் பேசிப்பாக்குறார். அந்தம்மா பிடி கொடுக்கல, Aகிட்ட போன் நம்பர முனியப்பன் குடுக்கிறார். Aக்கு மறுபடி ஒரு சந்தோஷம். போன் பண்றார்.பையன் லைன்ல வந்தா பேசுவார். வேற யாராவது போனை எடுத்தா, அவங்களே வச்சிருவாங்க. அப்புறம் அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. Lane line cut.

அப்புறம் ஒரு 10 வருஷம் ஓடிருது. நோயாளி சொந்தக்காரர் முனியப்பன்கிட்ட Aயின் பையன்
Engineering படிக்கிறத சொல்வார். 1st Year final year ஆகி பிள்ளையாண்டான் Campus interview ல select ஆயிர்றான்.நோயாளி சொந்தக்காரர் Aன் மனைவியிடம் முனியப்பன் தொடர்பு எண்ணைக் குடுக்கிறார். Aன் மனைவி முனியப்பனிடம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு A கூட Aயின் பையன் பேசுவான் அப்படிங்கிறாங்க.20 வருஷத்துக்கு மேல ஓடிருச்சு. பையன் பேசப் போறான். அப்படின்ன A மனசுல ஒரு சந்தோஷம். கரெக்டா ஒரு வருஷம் கழிச்சி Aன் மனைவி முனியப்பன்கிட்ட பேசி ஒரு நம்பர் குடுத்து 'இது பையன் நம்பர், அவரை பேசச் சொல்லுங்கன்னு சொன்ன உடனே, முனியப்பன் Aகிட்ட அந்த நம்பரை
குடுத்துர்றார்'

A மகன்கிட்ட பேசப் போறோம்னு சந்தோஷத்துல நம்பரை தட்டுறா¡. பையன் எடுக்கிறான். "22 வருஷமா நானா மேனேஜ் பண்ணியிருக்கேன், ஒங்க கூட பேசினா எனக்கு என்ன Benefit?". Aக்கு சாட்டையால் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு. முனியப்பன்கிட்ட வந்து அழுதார். ஆறுதல் சொல்லி 1 வாரத்துக்கு தூக்க மாத்திரையும் குடுத்து அனுப்பி விட்டார் முனியப்பன்.
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்காங்க. அதுல ஒருத்தர்தான் இந்த A. அவர் மனைவி, கணவனை தெருவில விட்டுட்டு, பிள்ளையவும் தகப்பனை பாக்காம வளத்து, இப்படி ஒரு கேள்வி கேக்குற மாதிரி வளத்துருக்காங்க. Aயின் மனைவிய மனநோயாளிங்கிறதா?, திமிர் பிடிச்சவங்கிறதா?. கல் நெஞ்சம்கிறதா?

A நடை சோர்ந்து போய் விரக்தியாய் இருக்கார். ஆனாலும் இன்னும் அவர் பையன் அவர்கிட்ட வருவான்னு நம்பிக்கையை மட்டும் இழக்காம நாட்களை நகட்டிகிட்டு இருக்கார்.
காலம் Aக்கு ஒரு நல்ல தகவல் சொல்லட்டும்.

12 comments:

vellaisamy said...

A SORIE IS VERY PATHATICK

Muniappan Pakkangal said...

Really pathetic Vellai to see A waiting for his son to come.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஈகோ என்கிற விஷம் ஒரு குடும்பத்தில் என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுகிறது?

ஆ.ஞானசேகரன் said...

//காலம் Aக்கு ஒரு நல்ல தகவல் சொல்லட்டும். //

உண்மைதான் டாக்டர் இப்படியும் சிலர் இருக்கதான் செய்கின்றார்கள்... அது ஏன்? என்றுதான் எனக்கு புரியாத புதிர்.... எல்லாம் வளர்ப்பு முறைதான் என்று நினைக்கின்றேன்

Dikshith said...

Arumaiyaana nenjaththai thotta unarvu indha pagirvil irukku. Vaazhththukkal. Ella manidhargalum purindhu kolla vendiyadhu ennavendraal VAAZHKKAI ENBADHE VITTUKUDUTHU POVADHUDHAN. Idhaithan oru pazhamozhiyil solluvaargal. VITTUK KODUPPAVARGAL KETTUP POVADHILLAI> KETTUP POGIRAVARGAL VITTUK KODUPPADHILLAI endru.

Muniappan Pakkangal said...

Itz not ego Aranyanivas,itz mismatch & misunderstanding.

Muniappan Pakkangal said...

You are absolutely correct Gnanaseharan.In many families itz happening like this nowadays.

Muniappan Pakkangal said...

You are correct Dikshith,Give & take policy is not there now.

மோகன்ஜி said...

இன்று தான் இந்த பதிவைக் கண்ணுற்றேன். சோகமான நிகழ்வு. இது
போன்ற பல உறவுகள் நம்மிடையே இருப்பதும் காலத்தின் கோலமே.. கொஞ்ச நாளாயிற்றே நீங்கள் பதிவேற்றி.. சந்திப்போம்

வீணாபோனவன் said...

ஏதோ வசூல் ராஜா MBBS பார்த்த மாதிரி இருக்கு... இதுல "A" யாரு?, "B" யாரு? "C" யாரு. அட "D" வேற காணோ...

-வீணாபோனவன்

Muniappan Pakkangal said...

Ha ha Veenaponavan.

Muniappan Pakkangal said...

Nandri Mohanji,the family set up is disintegrating in many places due toi Ego-like this.