Saturday, August 14, 2010

ஜீவா - சுடர்

முனியப்பன் படிக்கும் போது +2 கிடையாது. P.U.C தான் டாக்டருக்கு படிக்கனும்கிறதால 10th ,11th அப்புறம் PUCல Science group படிச்சார் முனியப்பன். 3 வருஷமும் Hostel வாழ்க்கை. அப்ப 11th ஸ்கூல்ல, PUC காலேஜ்ல. இந்த வருஷமும் முனியப்பன் கூட படிச்சவர் ராஜசேகர். இப்ப ராஜசேகர் சுரான்னு பேர வச்சுகிட்டு சென்னைல இருக்கார். சுரா ஒரு பத்திரிக்கையாளர் சினிமால PROவா இருக்கார். சுரா எழுத்தாளர் வட்டத்துல இருக்கதால எதையாவது எழுதிகிட்டே இருப்பார்.

திடீர்னு ஒரு நாள் சுரா முனியப்பனை கூப்பிடுறார் cellல. நம்ம கூட படிச்சவரு, ஜீவான்னு
பேரு, பக்கத்துலதான் இருக்கார், நீ பேசுன்னு ஜீவாவ Connect பண்ணிவிடுறார் சுரா. முனியப்பனும், ஜீவாவும் செல் போன்ல பேசுறாங்க .37 வருஷத்துக்கு முன்னால படிச்ச PUC வாழ்க்கை ரெண்டு பேரும் பேசி, நேர்ல சந்திச்சா ஞாபகம் வரும்னு ஒரு முடிவுக்கு வர்றா¡ங்க. ஜீவாவும் ஒரு பத்திரிக்கையாளர். தினமணி தமிழ் நாளிதழ், வார இதழ்ல
அவரோட பங்கு உண்டு. ஜீவா முனியப்பனை நல்லெண்ண தேச்சு Oil bath எடுக்கறத பத்தி பேட்டி எடுக்கணும்கிறார். முனியப்பனும் சரின்னு 3 நாள் time கேட்டார். அந்த 3 நாள்ல முனியப்பன் தன்னோட சொந்த oil bath அனுபவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவரோட கருத்து, சித்த மருத்துவர் BSMS கருத்து, பரம்பரை சித்த வைத்தியர் கருத்து, சிகை அலங்கார நிபுணர் (Hair dresser) மசாஜ் நிபுணர் கருத்து, எல்லாத்தையும் சேகரிச்சு, மேட்டர் ரெடி பண்ணிர்றார். 13-07-10ல ஜீவா முனியப்பனை தினமணிக்காக பேட்டி எடுக்கிறார். 4 நாள் கழிச்சு ஜீவாகிட்டருந்து போன் "மகளுக்கு Hemoglobin % 4gm, Hospitalல admit பண்ணியிருக்கேன்" அப்படின்னு. முனியப்பன் ஜீவாவ மகள நல்ல பாத்துகிட சொல்லிர்றார். இது 17-07-10.

2 நாள் கழிச்சு முனியப்பன் ஜீவாவுக்கு போன் பண்ணி கேட்குறப்ப ஜீவா சொல்றார். ப்ளட்ல urea லெவல் கூடிருச்சு, டயாலிஸிஸ் பண்றாங்கன்னு.Urea லெவல் 300. நார்மல் 50குள்ளதான் இருக்கனும். முனியப்பனுக்கு புரிஞ்சு போச்சு.ஜீவாவோட மகளுக்கு கிட்னி(ARF) பெய்லியர். முனியப்பன் ஜீவாகிட்ட kidneyதான் மாத்தனும்" அப்படின்னு சொல்லிர்றார். ஒரு 4 நாள் ஜீவாவும் பேசல, முனியப்பனும் பேசலை. முனியப்பனுக்கு மனசுக்குள்ள ஒரே கவ¨ல் நண்பனோட 23 வயசு மகளுக்கு இப்படி ஆயிருச்சேன்னு. நண்பனை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு தான் முனியப்பன் 4 நாள் பேசலை.

26ந்தேதி முனியப்பன் ஜீவாவை கூப்படுறார்."மக நேத்து இறந்திருச்சின்னு" ஜீவா சொல்லவும் முனியப்பனுக்கு ஷாக். சுராகிட்ட பேசினப்ப, சுரா சொன்ன விஷயங்கள் ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஜீவாவுக்கு 3 பெண் குழந்தைகள். அதுல மூத்த பெண்ணுதான் இறந்தது.
வயசு 23. படிப்பு M.A,Bed. படிச்சு முடிச்சு வேல கெடைச்சு ஏற்காட்ல
teacher வேல 2 மாசம் பாத்திருக்கு. ஒரு மாச சம்பளம் வாங்கியிருக்கு.

11.07.10ல ஜீவாவும் , அவர் மனைவியும் மகள பாக்க ஏற்காடு போயிருக்கங்க, போட்டோ எல்லாம் மகளோட சேந்து எடுத்திருக்காங்க.11.07.10ல நல்லா
இருந்த பொண்ணு 25.07.10ல No more.

"இறந்த பொண்ண பாத்தேன், சிரிக்சுகிட்டே உயிரோட இருக்க மாதிரி இருந்துச்சு"ன்னு சுரா
சொல்லவும் முனியப்பனுக்கு மனசு கஷ்டமாயிருச்சு. ஜீவாவ நேர்ல பாக்கணும்னு, இன்னம் 2 வேலய சென்னைல சேத்து வச்சுகிட்டு 31-07-10 ல ஜீவா வீட்டுக்கு போறார்
முனியப்பன். வெளிய இரங்கல் போஸ்டர்ல சுடர்னு ஜீவா மக பேர். ஜீவா சொல்ல சொல்ல முனியப்பன் கண்ணு குளமாயிருச்சு. " வாழ வேண்டிய பொண்ணு போயிருச்சு வருத்தப்படாதீங்க. மனச தேத்திக்குங்க" னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியும்?
ஜீவா மகளோட 11-07-10ல எடுத்த போட்டோவ cell phone ல காமிக்கிறார். இன்னம் வேதனையாகுது.

சுடர் - குடும்பச் சுடரா இருக்க வேண்டிய பொண்ணு தெய்வச் சுடராயிட்டா.

10 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கொஞ்சம் படித்ததும்..கண்கள் குளமாயின.படித்து முடித்ததும் மனம் அழுதது? காலன் தான் எவ்வளவு கொடூரமானவன்?

ஹுஸைனம்மா said...

என்ன கொடுமை இது!! நோயின் அறிகுறிகள் எதுவும் முன்னமே தெரியவில்லையா?

Dikshith said...

Idhaithaan vidhi yengirargal. Aanaal naan oththukolla maaten. Vidhiyaiyum madhiyaal mudindhaal vendrirukkalaam. Veetil ullavargalukku velai baluvil jeeva vin healthai patri konjam munna koottiye chekup seidirundhaal oruvelai jeeva vai kaapaatri irukkalaam yendru naan karudhugiren. Any how death at 23 years enbadhu AGAALA maraname. I cannot digest this.

Muniappan Pakkangal said...

Yes AaranyaNivas R.Ramamoorthy,younger age deaths arevery cruel.

Muniappan Pakkangal said...

They were caught unaware Hussainamma,it was an acute [ sudden ] illness where you don't have time.

Muniappan Pakkangal said...

Sudar is the girl who had the acute illness,itz a very rare sickness where you can try tyo save the patient-thats all.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ரொம்பக் கொடுமையா இருக்கு முனியப்பன் சார் .

Muniappan Pakkangal said...

Death at the young age & that too in the start of a career after education is very cruel Thenammai.I had a previous post abt youing age deaths.

vellaisamy said...

VERY PATHETICK TO KNOW JEEV'S DAUGHTER DEATH

Muttuvancheri S.Natarajan said...

இது என்னோட சொந்த அனுபவம் திருச்சியில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவ மனையில் என் அண்ணனை சேர்த்ததும் அவரை இறைவனிடம் சேர்ப்பித்து விட்டார்கள்.பாடியை எடுத்துகிட்டு போய் ஜி.ஹெச். இல் வச்சிடுங்க என்றார் அந்த மருத்துவ மனை டாக்டர்.நானும எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.அங்கே போனதும் போலிஸ்காரர்கள் எனக்குப் பண்ணிய அர்ச்சனையை மறக்கமுடியாது.ஆனால் அவர்கள் ஒரு விஷயமும் சொன்னார்கள்."அந்த ஆஸ்பத்திரியில மார்ச்சுவரி கெடயாது சார்.அதான் அவன் இங்கே கொடுத்து அனுப்பிட்டான்.நீங்களும் தெரியாம எடுத்துகிட்டு வந்திட்டீங்க"
ஆஹா! என்ன பாடம் கேட்டீர்களோ!
ஆக்சிடெண்டில் இறந்து போனவர்களை ஆஸ்பத்திரியில் சேக்கும் முன்னே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு.
சின்ன வயதில் யாரும் சாகக் கூடாது.அதிலும் ஆக்சிடெண்டில் கண்டிப்பா கூடாது.ஏனென்றால் ஆச்பத்திரிகாரர்களும் போலீஸ்காரர்களும் .... ச்சே! பிணம் தின்னும் கழுகுகள் !
MUTTUVANCHERI NATARAJAN