Monday, September 27, 2010

மார்ஷல் அமர் ஸ்டார்ட்







மார்ஷல் அமர் ஸ்டார்ட்

அமர், அஷீவோட அண்ணன். 9 வயசாகுது. நல்ல Photographer. அவர் எடுத்த photos பின்னால ஒரு பதிவுல வரும்.

மார்ஷல் அமரோட அண்ணன், செல்லம். மார்ஷலுக்கு வயசு 2. மார்ஷல் கன்னிங்கற வகைய சேர்ந்த வேட்டை நாய். கன்னிங்கறது திருநெல்வேலி, ராஜபாளையம், அம்பாசமுத்திரம் பகுதில உள்ள வேட்டை நாய். அவ்வளவு அறிவு, பாசம் உள்ள நாய். வீட்ல உள்ள பொருட்கள், உயிரினங்களை ஒண்ணும் செய்யாது. காவலுக்கு கெட்டிகாரன். வேற யாரும் மூச்.


முனியப்பன் வீட்ல அமருக்காக வாங்குனதுதான் மார்ஷல். கன்னிவகை. மார்ஷலை ஒருநாள் குட்டில இருந்தே வளத்து வருவது வீட்ல உள்ள எல்லோரும்தான். இருந்தாலும் மார்ஷல், அமர் நட்பு தனி. மார்ஷலும், அமரும் ஓடி பிடிச்சு விளையாடுவாங்க கொஞ்சுவாங்க.

இப்ப கொஞ்ச காலமா புது வெளையாட்ட வெளையாடுறாங்க மார்ஷலும் அமரும். அமர் காலைல குளிச்சு ஸ்கூல் யூனிபார்ம் மாட்டுன ஒடனே முனியப்பன் அமருக்கு இட்லி ஊட்டுவார். இப்ப வெளையாட்டே அந்த இட்லிய வச்சுதான்.

மார்ஷல பின்னால கட்டிப் போட்டுருப்பாங்க. "ரெடி, ஸ்டார்ட்" ன ஒடனே, அமர் வீட்ல பின்னால போய் சந்து வழியா முன்னால வருவார், இல்ல பின் பக்கமே வந்துருவார். அவர் வர்ற பக்கத்தை மார்ஷல் காட்டிக் குடுத்துரும். மார்ஷல் அமர் எந்தப் பக்கம் போறாரோ அந்தப் பக்கம் திரும்பிரும்.சே அப்படின்னு சொல்லிகிட்டே அமர் இட்லிய சாப்பிடுவார்.

இப்ப ஒரு மூணு நாளா மார்ஷல் தோத்திருது. காரணம் அமர் வளக்குற 2 பூனை. 2 பூனையும் வீட்ல பின்னால தோட்டத்துக்கு வந்துருது. மார்ஷல் அமரை பாக்குமா, பூனைய பாக்குமா. மார்ஷலோட கவனம் பூனை பக்கம் போயிர்றதால அமர் win பண்ணிர்றார். அதுவும் 50%தான். பூனை disturb பண்ணியும் மார்ஷல் 50% அமர் மேல கவனம் வச்சிருக்கும்.

மார்ஷல் முனியப்பன் வீட்ல எல்லாருக்கும் செல்லம். வீட்டுக்கு சரியான காவல்காரன் மார்ஷல். வெளி ஆள். வேற ஆள் யாரும் உள்ள enter ஆக முடியாது. அமர் மார்ஷலை அண்ணண்னுதான் கூப்பிடுவார். மார்ஷல் அமர் உறவு ஒரு தனி காவியம்

13 comments:

மோகன்ஜி said...

நாய் போட்டோக்கள் ரொம்ப நல்லா இருக்குங்க..விளையாட்டும் சுவாரஸ்யமா இருக்கு!

எஸ்.கே said...

நாய் ஒரு அற்புதமான உயிரினம். மனிதனுக்கு அதற்கும் உள்ள ஒரு உறவு-உணர்வு விளக்க முடியாத ஒன்றுதான். உங்கள் பதிவுகள் சாதரணமாக இருப்பதுபோல் தோன்றினாலும் ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் அவை எங்கள் உணர்வை அசைக்கின்றன. வாழ்த்துக்கள் சார்!

Muniappan Pakkangal said...

Nandri Mohanji.itz a game btwn Amar & Marshall.Photos are by Amar.

Muniappan Pakkangal said...

Nandri SK.I post normal articles which are close to the heart.If u are moved by my articles itz close to you.

ஹேமா said...

ரொம்ப நாளா அஷூக்குட்டியோட பதிவைக் காணோமேன்னு யோசிச்சேன்.அழகான சந்தோஷமான பதிவு வந்திருக்கு.நன்றியுள்ள மார்ஷல்.அண்ணன் மார்ஷலுக்கும் அமருக்கும் என் அன்பைச் சொல்லிவிடுங்கள் டாக்டர்.

Muniappan Pakkangal said...

Nandri Hema,Marshall & Amar are fine.

Dikshith said...

Manidanukku 6 ARIVU dogukku 5 ARIVU enbadhu pazhaya kootru. AANAAL IPPOVELLAM MANIDHANUKKU 5 ARIVU DOGGUKKU 6 ARIVU. Anytime dog is considered as the BEST COMPANION TO HUMAN LIFE. Naanum oru dog vachirukken. DALMATION variety. Viraivil oru blog varum.

Muniappan Pakkangal said...

nandri Dikshith.dog is more affectionate than the people we come across.you r having a superbreed dalmatian.

ஹுஸைனம்மா said...

நல்லா எஞ்சாய் பண்றீங்க போல பேரப்பசங்களோட!! சந்தோஷம்.

Muniappan Pakkangal said...

Nandri Hussainamma,you have to relax in btwn in life for perfection in profession.Itz god's gift tome in my sister's boys.I'll b a grandpa in the next 3 years.My boy is just 22 years.

வீணாபோனவன் said...

உங்கள் எழிமையான தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கு... I really like your colloquial Thamil Sir. Keep it up.

-Ganesh.

வீணாபோனவன் said...

உங்கள் எழிமையான தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கு... I really like your colloquial Thamil Sir. Keep it up.

-Ganesh.

Muniappan Pakkangal said...

Nandri Veenaponavan.I like narrating in what we speak.