Friday, November 26, 2010

மழை ஸ்கூல் அமர் அஷீ

அதிகமா மழை பெஞ்சா ஸ்கூல் பிள்ளைக கஷ்டப்படக்கூடாதுன்னு அரசாங்கமே லீவு விட்டுருவாங்க.

இப்ப மதுரைல தீபாவளிக்கப்புறம் மழை பெங்சுசிட்டேயிருக்கு.அதுலயும் இந்த 4 நாள் மழை ஊத்திக்கிட்டிருக்கு. செவ்வாய்க்கிழமை கவர்ன்மெண்ட்ல லீவு விட்டாங்க.புதன்கிழம ஸ்கூல்ல லீவு விட்டாங்க. அந்த ரெண்டு நாளும் பகல்ல மழை பெய்யல.

வியாழக்கிழம காலைல இருந்து மழை. அமரும் அஷீவும் ஸ்கூலுக்கு கெளம்பி போயிட்டாங்க. 11 மணிக்கு பிள்ளைகளை கூப்பிட்டு போங்கன்னு ஸ்கூல்ல இருந்து sms. அஷ¥வும் அமரும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தாச்சு.

அமர் "லீவுன்னு சொல்லிட்டாங்கன்னா மழை பெய்ய மாட்டேங்குது", லீவு விடலேன்னா மழை பெய்யும்பா" அப்படின்னு சொன்னார்.

வெள்ளிக்கிழமை காலை இருந்து மழை. நம்ம ஜோக் குட்டி, "மழை பெஞ்சுகிட்டே இருந்தா, லீவு விட்ருவாங்களான்"னு அஷ¥வுக்கே உள்ள Trade mark சிரிப்ப விட்டார்.

ஸ்கூல் லீவு விடல. மழை பெஞ்சுகிட்டே இருக்கு. இப்ப அமரும், அஷ¥வும் ஸ்கூல்ல.

அமருக்குத்தான் வருத்தம் "ஸ்கூல்ல படிப்பு போயிருச்சு, எழுத முடியாது, Friends அ பார்க்க முடியாது.

மழை ஸ்கூல் லீவு அஷ¥, அமர் contrast கருத்துக்கள்

விருந்தும் மருந்தும் 3 நாளைக்குதான். School நாள்ல, School லீவு விட்டா எப்படி தாங்க முடியும் அமருக்கு.

10 comments:

Thenammai Lakshmanan said...

அமர் நல்ல பொறுப்பான பிள்ளைதான்.. முனியப்பன் சார்..:))

எஸ்.கே said...

இந்த மாதிரியும் சிறுவர்கள் இருக்காங்க!:-)

ஆ.ஞானசேகரன் said...

//அமர் "லீவுன்னு சொல்லிட்டாங்கன்னா மழை பெய்ய மாட்டேங்குது", லீவு விடலேன்னா மழை பெய்யும்பா" அப்படின்னு சொன்னார்.//

ம்ம்ம்ம்... அட ஆமாம்

Dikshith said...

Aaha ARUMAI ARUMAI : : : >

Muniappan Pakkangal said...

Nandri Thenammai,Amar is a responsible boy.

Muniappan Pakkangal said...

Nandri Sk,most of the school children nowadays want to go to school without break.

Muniappan Pakkangal said...

Yes Gnanseharan,the metereology dept announcements are like that.

Muniappan Pakkangal said...

Enna Dikshith ,ore varthaila comment ?

வீணாபோனவன் said...

அமர் மீது மிக்க பாசம் போலும்? இருப்பினும், இந்த வயதிலும் சும்மா கழை கட்டுறிங்க... தொடரட்டும் அன்பு மழை...

என்றும் அன்புடன்,
-கணேஷ்.

Muniappan Pakkangal said...

Nandri Veenaa ponavan.