Thursday, April 12, 2012

காலை 5 மணி குளியல் - அஷூ

நம்ம அஷூக்குட்டி தூங்கும் போது கூட சட்டை போட்டுத் தான் தூங்குவார். இதுல பொத்திக்கிறதுக்கு கம்பளி வேற.

முனியப்பன் காலைல 6 மணிக்கு அஷூ, அமர எழுப்புறதுக்கு மாடிக்குப் போயிருவார், டென்னிஸ் விளையாடத் தான். இப்ப முழுப் பரீட்சை ஆரம்பிச்சிருச்சு. அதுனால டென்னிஸ் கிடையாது.

இன்னைக்கு 7 மணிக்கு எழுப்பப் போனார், அப்ப அஷூவோட அம்மா, அதான் முனியப்பன் தங்கச்சி சிரிச்சிட்டே சொல்லுச்சு, அஷூ காலைல 5 மணிக்கு குளிச்சிட்டு தூங்குதுன்னு.

அஷூ எந்திரிச்சி வந்த ஒடனே கேட்டப்ப, அஷூவுக்கு குளிச்ச ஞாபகம் இல்லை. மதியம் ஸ்கூல் முடிச்சு வந்த உடனே கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொல்லி முடிச்சிட்டார்.

இப்பல்லாம் பவர்கட் காலைல 6 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் 7 - 8 மணி நேரம். இரவு 12 மணியில் இருந்து காலைல 6 மணிக்குள்ள 3 தடவை 3 மணி நேரம். பகல்ல கரண்ட் கட்டானா வெக்கையத் தணிக்க இளநீர், தண்ணீர் பழம், ஐஸ் கிரீம் இப்படி சாய்ஸ்ல நிறைய இருக்கு.

இரவு பவர் கட்ல வெக்கை தாங்கமுடியாம அஷூ என்ன செய்வார்? அவருக்குத் தெரிஞ்ச ஐடியா குளியல்.

தமிழ்நாட்ல உள்ள பிள்ளைகளோட தவிப்பு இது.

4 comments:

Dikshith said...

idha oru copy collector sagayathukku anupunga enna seiraar nu paappom. Avar dhan madhurai le nadakkara aneedhigalai thattik ketkum pradhinidhi. Chennai le 2 hrs dhan powewrcut kuduthu vacha aasaaminga.

ஆ.ஞானசேகரன் said...

//இரவு பவர் கட்ல வெக்கை தாங்கமுடியாம அஷூ என்ன செய்வார்? அவருக்குத் தெரிஞ்ச ஐடியா குளியல்.

தமிழ்நாட்ல உள்ள பிள்ளைகளோட தவிப்பு இது.//

என்ன கொடுமை...
எப்படி இந்த கோடையை தள்ள போகின்றோம் என்று தெரியவில்லை சார்

Muniappan Pakkangal said...

Sagayathukkum ithukkum samapntham illa Dikshith.Naama pesama chennai poyiruvoma ?

Muniappan Pakkangal said...

Kodaiya samalichu thaan ahanum Gnanaseharan.Vera vali illa