Friday, October 17, 2008

முனியப்பனின் காதலி

நங்கையை பற்றிய
நாலெட்ஜ் இல்லாத
முனியப்பன் வாழ்க்கையில்
காதல் காற்று வீசியது
வீசியவள் பேரழகியில்லை
வளைவுகள் சரிவரப் பெற்றவள்
ஒரே துறையில், ஒரே இடத்தில், இருக்கவும்
ஒரே வேகமான காதல்
முனியப்பன் பாடத்தை பற்றிய பேச்சாளனல்லவா
பேசுவதற்கு குறிப்பெடுப்பாள் பேதையவள்
வக்கனை காட்டுபவள்
வஞ்சிக்காமல் சிரிக்கவும் செய்வாள்
படிக்கட்டுகளில் வளர்ந்த காதல்
இக்கட்டில் சிக்காமல் வளர்ந்தது
ஓட்டலுக்கு சாப்பிடப் போனால்
பில் கட்டுபவள் அவள்தான்
டீ குடிக்க போனால் சேலைகட்டிய இடுப்பில்
காடிச்சீப்பில் காசு வைத்திருப்பவளும் அவள்தான்
அய்யா அம்மா என்று
பணிபுரிபவர்கள் அழைக்க
அம்சமான காதல் வளர்ந்தது
சொல்லால் கொள்ளாமல் ஒருநாள்
காணாமல் போனான் முனியப்பன்
காதலனை காணாமல் தவித்தாள்
காரணம் புரியாமல் மயக்கம் போட்டாள்
பதறிய தோழிகள், மேலதிகாரிகள்
மருத்துவ காரணம் தேடினால்
மயக்கத்திற்கான காரணம் ஒன்றுமில்லை
அவர்களுக்கு தெரியுமா காதலின் அருமை
முனியப்பன் காணாமல் போகவில்லை
காதலியிடம் சொல்லாமல்
அறுவை சிகிச்சையில் இருந்தான்
அசராமல் தேடியவள்
கண்டு பிடிக்காமல் விடுவாளா என்ன?
கண்டு பிடித்து போனும் போட்டாள்
மீண்டும் வந்தவனை
கண்டு துள்ளி ஓடினாள்
காதருகே ஒற்றை ரோஜாவுடன்
காதலும் வளர்ந்தது
பிரச்சினைகளும் வளர்ந்தது
காதல் பயணம் சுகமானது
கப்பல் கவிழாதவரை
நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்காது
சொன்னவள் அவள்
விதி எனும் சூறாவளியில்
சிக்கிய காதல் சின்னாபின்னமானது
விதி விளையாடிய விளையாட்டு
காதலர் இருவரையும் புரட்டிப் போட்டது
உள்ளத்தை கொடுத்து
உதடுகளையும் கொடுத்தவளுக்கு
உதவவில்லை காலம்
தொழில் படிப்பால் பணத்தில்
துவளவில்லை இருவரும்
வெவ்வேறு இடங்களில்
வேறொரு துணையோடு வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வீசிய
காதல் தென்றல் மறக்குமா?
முனியப்பன் காதலை, காதலியை மறக்கவில்லை
காதலியும் மறந்திருக்க மாட்டாள்
காதல் புதைக்கப்படும் போது, அழுத
கண்ணீர் வற்றும் போது
காதல் வரலாறாகிறது.

6 comments:

Harikaran S said...

முனியப்பன்,

தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. ரசிக்கும் படியும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டும் உள்ளன. என்னை உங்களின் ரசிகனாக்கி விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்....

Chandravathanaa said...

ரசித்தேன்.
கருத்தும், நயமும் கலந்து அழகாக இருக்கிறது

Unknown said...

தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன.

Muniappan Pakkangal said...

Nandri Hariharan.s,karthik b.s,& sahothari chandravadhana.

ஹேமா said...

//வெவ்வேறு இடங்களில்
வேறொரு துணையோடு வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வீசிய
காதல் தென்றல் மறக்குமா?//
முனியப்பன் ஏதோ,சுவாரஷ்யமாக இருக்குதே என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன்.காதலின் வலியோடு கவிதை முடிகிறது.

Muniappan Pakkangal said...

thank u Hema.Pl visit Kathal Postmortem in another post.