Thursday, October 9, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

இந்தத் தலைப்பு நிச்சயமா நீங்கள் கடந்து வராத மனிதர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு.

தவசித்தேவர்

விருமாண்டி மாதிரி முரட்டுத்தனமான ஆள் கெடையாது.

ரொம்ப அமைதியான, பழய காலத்து காங்கிரஸ்காரர், 80 வயதை தாண்டிய இளைஞர். மடிச்சுக்கட்டின வேட்டி, முழங்கை வரை வர்ற சட்டை, தோள்ல ரெண்டுபக்கமும் தொங்கும் நீளமான துண்டு அவர் முழங்காலுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் வரும்.

காலைல மதுரை பைபாஸ் ரோட்ல வாக்கிங்வரும் அவர் காலில் செருப்பு அணிவது கிடையாது. முனியப்பன் அவரிடம் என்னய்யா கால்ல செருப்பு இல்லாம நடக்குறீங்க ? அப்படின்னதுக்கு அவரோடு பதில் 'அப்பேர்ப்பட்ட மனுன் காந்தியே மதுரைல வந்து மக்களை பாத்து சட்டையை கழட்டிட்டு இனிமே சட்டை போட மாட்டேன்னுட்டார். நம்மளுக்கு எதுக்கு கால்ல செருப்பு' அப்படின்னார். கிட்டத்தட்ட 40 வருஷமா கால்ல செருப்பு போடாம நடக்கிறார். அவர் பேரன் பேத்திகள்லாம் தேசிய அளவுல உலக அளவுல இந்தியாவுக்காக செஸ் விளையாட்டு விளையாடுறவுங்க. அவங்களை அவர் செஸ் விளையாட அழைச்சிட்டு போயிருக்கார். அப்பவும் செருப்பு போட்டதில்ல டெல்லில குளிர்காலத்துல கூட அவர் கால்ல செருப்பு போட்டதில்லை.

அவர் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் 'விருவீடு' எனும் ஊருக்கு அருகில் உள்ள விராலிமாயன்பட்டி.

மதுரையில தனது மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்தான் கோடாங்கி. தை பொங்கலுக்கு அடுத்த நாளும், மாசி பச்சையிலும் (மகா சிவராத்திரி) கையில் சூலாயுதத்துடன் ஊரில் சாமியாடுவார்.

அவர் மகள் வயிற்றுப் பேரன் தான் தீபன் சக்கரவர்த்தி. செஸ்ஸில் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர்.

7 comments:

குசும்பன் said...

அடே வித்தியாசமான மனிதராக இருக்கிறாரே!

வால்பையன் said...

எங்க ஊரும் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள கன்னியம்பட்டி தான்.
என்னுடைய தாத்தாவும் அங்கே ஒரு கோயிலுக்கு பூசாரியாக இருந்தாராம்.
வருடம் ஒருமுறை மட்டுமே செல்லுவோம்.

சென்ஷி said...

அருமையான வாசிப்பாக அமைந்தது நண்பரே.. இன்னமும் தாங்கள் சந்தித்த மனிதர்களை பற்றி எழுதுங்கள்.... அறிய ஆவலாகிறேன்.

முரளிகண்ணன் said...

very nice post. keep it up.

(tamil fond not working. so comment in English)

Don't mistaken me

Anonymous said...

அருமையான வாசிப்பாக அமைந்தது நண்பரே..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

Muniappan Pakkangal said...

Thank u Kusumban,Vaalpaiyan,Shenshe,Muralikannan,,Kadayam Anand,Ravishankar for ur visit.MY blog will definitely be different with real personalities.Nandri.