Friday, December 5, 2008

பள்ளி விடுதி நாட்கள்

மறக்க முடியாத நாட்கள்
மறக்க முடியாத நினைவுகள்

காலை ஓட்டம், பின்னால்
கையில் பிரம்புடன் வார்டன்
காலை குளியல், அங்கும் வார்டன்
குளிக்க 4 விசில், கொடுமையய்யா கொடுமை

வகுப்பு மாறும் நேரத்தில்
வயிற்றில் மறையும் Day Scholor உணவுகள்
அடுத்தவன் உடையை
அணிந்த அழகான நாட்கள்

அன்னை தந்தை வரவை
ஆவலோடு எதிர்பார்த்த நாட்கள்
ஹோம் சிக்னஸ் நாட்கள்

கோஷ்டி சண்டைகள்
கண்களில் வேப்பம் பழத்தை பிழிந்து
கண்கள் சிவக்க வைத்து வீட்டுக்கு ........

பெல்ட் போட்டு ஷூ போட்டு
பிராசோ போட்டு பாலிஷ் ஏற்றி
NCC பரேடில்
நிமிர்ந்து நடந்த நாட்கள்

முறைப்பு, முரட்டு வார்த்தைகள்
முட்டல் மோதல், பின் நட்பு
நட்புக்கு இலக்கணம் வகுத்த
நண்பர்கள் ..............

அரசியல் மாற்ற காலத்தில்
அதிரடியாய் சாலையில் போர்க்களம்
உள்ளிருப்புப் போராட்டம்
உரிமைகளுக்காக உணர்வுகளுக்காக ..........

உரிமை, பேச்சு சுதந்திரம்
திரைப்படம் மாதம் ஒருமுறை
படிப்பு இல்லாமலா ............... ?
படிப்புதான் முக்கியமானதே


வெளி உலகம் அறிய ஆரம்பித்த நாட்கள்
வருங்காலத்தின் அடிப்படை நாட்கள்
பயமறியா பள்ளி நாட்கள்
பல காலம் கழித்தும் நினைவில் .....................................

6 comments:

ஹேமா, said...

நினைக்க மட்டுமே இனிமையாக,
நினைத்தாலும் மீண்டும் கிடைக்க முடியாத சுக அனுபவம்.வாழ்வில் எத்தனை சந்தோஷம் கிடைத்தபோதும் பாடசாலைச் சந்தோஷத்திற்கு ஈடு இணையே இல்லை.அருமையான நினைவுப் பதிவு கவிதையாக.

Dikshith said...

kaalathaal azhiyadavai irandu. ondru varalaru 2.malarum ninaivugal

Muniappan Pakkangal said...

I agree with u Hema.School life is unforgettable.

Muniappan Pakkangal said...

Thank u Dikshith for ur comments.

vellaisamy said...

READ SCHOOL HOSTEL DAYS. VERY IMPRESSIVE AND LIVE MEMORRIES.

Muniappan Pakkangal said...

Thank u Vellaisamy.