Thursday, January 1, 2009

CASE SHEET (தாய்-மகன்)

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை இன்னைக்கும் மக்கள் பயப்படுற வியாதி. மஞ்சள் காமாலை வந்தா பாதிப்பேர் என்ன, முக்காவாசிப் பேர் நாட்டு மருந்து சாப்பிடப் போயிருவாங்க.

புதுத் தாமரைப் பட்டில கண்ணுல மருந்து ஊத்துவாங்க. அச்சம்பத்துல தலைல பத்து போடுவாங்க, காரைக்குடில உள்ளுக்கு மருந்து கொடுத்து "வயித்தால (Diarrhoea) போகும். பயப்படாத" அப்படின்னு சொல்லி அனுப்புவாங்க. உசிலம்பட்டி பக்கத்தில முன் கைல (Forearm) wrist-க்கு பக்கத்துல வட்டமா சூடு போடுவாங்க.

ஆங்கில வைத்தியம் தனி. முனியப்பன் பாத்த தாயும் மகனும் அசத்திட்டாங்க. தாய்க்கு வயசு 80, மகனுக்கு வயசுக்கு 60. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மஞ்சள் காமாலை. இரத்தத்தில பிலிருபின் அளவு அதிகமாக இருக்கறதால ரெண்டு பேரையும் பெட்ல அட்மிட் பண்றார் முனியப்பன். ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் ரூம்.

மஞ்சள் காமாலைக்கு முக்கியமா ரெஸ்ட் தேவை, அதுனால முனியப்பன் ஸ்ட்ரிக்டா ரெண்டு பேருக்கும் சொல்லிட்டார். ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, அவங்கவங்க ரூம்லயே இருக்கணும்னு. தாய்-மகன் எதிர் எதிர் ரூம். அப்படியிருந்தும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்காம 10 நாள் ஓடுது. இரத்தத்துல ரெண்டு பேருக்குமே பிலிருபின் 10க்கு மேல, மஞ்சள் காமாலை டூமச். அதுனால தான் ஒருத்தரை ஒருத்தர் பாக்க தடா, அப்புறம் ரெண்டு பேருக்கும் சுகமாச்சு, அப்பத்தான் ரெண்டு பேரையும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க விட்டார் முனியப்பன்.

முனியப்பன் டூமச் கண்ட்ரோலா இருக்கக் காரணம் தாய்-மகன், ரெண்டு பேரும் நல்லபடியாகனும்னு தான். அதே மாதிரி தாய் மகன் ரெண்டு பேரும் முனியப்பன் பேச்சை இம்மி பிசகாம கடைப் பிடிச்சு நல்லா சுகமா வீட்டுக்குத் திரும்பினாங்க.

தாய்ப்பாசம், பிள்ளைப் பாசம் ரெண்டையும் தாண்டி, தாய் மகன் ரெண்டு பேரும் இருந்தது ரொம்பப் பெரிய விஷயம்.

6 comments:

ஹேமா, said...

முனியப்பன் நீங்க பொல்லாத டொக்டராக்கும்.எனக்கும் என்னவோ வருத்தம் வந்ததுக்கு கையில சூடு போட்டாங்க.நீங்க சொன்னதும் ஞாபகம் வந்திச்சு.என்னாத்துக்கு ன்னுதான் ஞாபகம் வரமாட்டுதாம்.
டொக்டர் ஞாபக மறதிக்கு என்ன மருந்து?

நட்புடன் ஜமால் said...

3 மாதங்களுக்கு மேற்பட்டு இருந்தது எனக்கு

மஞ்சள் காமாலை

கீழ்வாநெள்ளி மட்டுமே பருகினேன் ...

Muniappan Pakkangal said...

I am strict with my patients for their welfare,and they also like to be instructed.Ungal kaiyil soodu,pl remember,it may be due to some mischief by you.For forgetfulness,there is no medicine.You are not a forgetting person,as i see your blogs which contain good materials.Nandri Hema.

Muniappan Pakkangal said...

Thank u Athirai Jamal.Jaundice requires complete rest first.Keezha Nelli is a good native medicine,which i also include in my patients list to be taken daily.I advice them to take it twice in a day grinding it.Hope you took Keezha Nelli & complete rest.

Dikshith said...

Dr orusila idaththula manjakaamalaikku paththiyam pottu okkaravechu mandhiram moolamaaga kinnaththula irukkira thanniya manjala maathuraangale adhaypatri???

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,itz news to me.Plz tell me abt it.