Wednesday, February 25, 2009

ஆஸ்கார் - A.R. ரகுமான் - கமல்

ஆஸ்கார் - A.R. ரகுமான் - கமல்

உலக திரைப்பட விருதுகளில் முதன்மையானது அமெரிக்காவில் வழங்கப்படும் Academy விருதான OSCAR. இந்தியாவிற்கு அந்த விருதை பெற்றுத்தந்த A.R. ரகுமானுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் 2 ஆஸ்கார் விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 1. Original music 2. Original song இந்த இரண்டிலும் அவர் வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

A.R. ரகுமான் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே இசைக்காக தேசிய விருது பெற்றார். அவர் இசையுலகில் அவரது 12 வயதிலேயே அடியெடுத்து வைத்தவர். "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கடவுளுக்கு நன்றி சொல்லும் A.R. ரகுமான் தாய்ப்பாசம் மிக்கவர்.

இந்த வேளையில் நமது கமலைப் பற்றியும் சில விஷயங்களை மன வருத்தத்தோடு பகிர்ந்தாக வேண்டும். பால்ய வயதிலேயே திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் நமது கமல். அவர் நடிப்பாற்றல் மிக்கவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

"Oscar கதவைத் தட்டுபவர்" என்று கமலைப் பற்றி பத்திரிகைச் செய்திகள் அவரைத் திருப்திப் படுத்தவா ?, அவருடைய பில்ட் அப்பா? "உலக நாயகனே" .... கடைசியாக வெளிவந்த கமலோட தசாவதாரப் பாடல். உலக நாயகன்கிற வார்த்தை யாரை ஏமாற்ற கமலையா ? அவரது ரசிகர்களையா ?

கொஞ்ச காலத்துக்கு முன்னால இந்தியாவுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கலை அப்படிங்கிற ஒரு கேள்விக்கு கமல் சொன்ன பதில் "அமெரிக்கர்களுக்கு அமெரிக்கர்களால் வழங்கப்படும் விருது Oscar". அவங்களை இங்க வரச்சொல்லி நாம அவங்களுக்கு விருது கொடுப்போம்னு விரக்தியா சொல்லியிருந்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவில் தயாரான படம். எட்டு Oscar விருதுகளைப் பெற்றுள்ளது. அதில் 4 விருதுகளைப் பெற்றவர்கள் இந்தியர்கள், ரகுமானுக்கு 2, பாட்டு எழுதிய குல்சாருக்கு 1, ஒலிக்கலவைக்கு கேரளாவின் பூக்குட்டிக்கு 1. இது போக டாக்குமெண்டரி படத்துக்காக உதடு பிளவுபட்ட கருத்தை வைத்து எடுத்த படத்துக்கும் 1 Oscar விருது. ஆக மொத்தம் இந்தியர்கள் மூலமாக இந்த வருடம் பெற்ற Oscar விருதுகளின் எண்ணிக்கை 5.

நடிப்புக்காக வழங்கப்படும் 4 விருதுகளில், 3 விருதுகள் அமெரிக்கர் அல்லாதோர் பெற்றுள்ளனர். Oscar விருது அமெரிக்கர்களுக்காக வழங்கப்படும் விருது என்று கமல் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது. மொத்தம் உள்ள 24 ஆஸ்கார் விருதுகளில், 4 விருதுகள் இந்தியர்களுக்கும் 1 விருது இந்தியச் சிறுமியை வைத்து எடுக்கப்பட்ட Documentaryக்கு (short film) ஒரு Oscar விருது, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் விதமாக அமைந்துள்ளது 2009 ஆம் வருட அமெரிக்க Academy விருதுகள் (Oscar).

A.R. ரகுமான் 2 Oscar விருது வாங்குனதுக்கு திரை உலகில் உள்ளவர்கள் பேட்டி குடுக்கறாங்க. சூர்யா சொல்றார் "+2 பாஸ் பண்ண சந்தோஷம்"கிறார். டைரக்டர் சங்கர் சொல்றார். "A.R. ரகுமான் ஞாயிற்றுக்கிழமை கூட work பண்ணுவார். ஓய்வுங்கறது ரொம்ப ஆபூர்வம்". இப்ப நம்மாளு கமல் என்ன சொல்றார் "தமிழராயிருக்கது மட்டுமில்ல, தகுதிய வளத்துக்கிட்டார்."

இப்ப கமலுக்கு ஒரு கேள்வி, நீங்க ஏன் Oscarக்கான ஒங்க தகுதிய வளத்துக்கிடலை?. கமல் ஒங்களை நெறைய கேள்வி கேக்கலாம்? இங்கிலாந்து ராணி queen எலிசபெத்தை வச்சி பூஜை போட்டீங்களே 'மருதநாயகம்'. அது என்ன ஆச்சு? இப்ப கூட ஒங்க மர்மயோகிய காணோம்.!

கமல், ஒங்களுக்கு ஒரு வேண்டுகோள். "உண்மையிலேயே Oscar விருதுக்கான ஆசை உங்களுக்கு இருந்தால் " அதுக்கான தகுதிய வளத்துக்குங்க, முயற்சில எறங்குங்க. சும்மா ஒலக நாயகன்கிற வார்த்தையை use பண்ணாதீங்க. நீங்க நடிப்பாற்றல் மிக்கவர். Oscar விருதைக் கைப்பற்றும் திறமை உங்களுக்கு உண்டு. நீங்கள் Oscar விருது பெறும் நாளை தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

என்ன, முனியப்பன் கமல் மேல காட்டமாய்ட்டார்னு பாக்கறீங்களா? இது ஒரு வகையான அன்பு, அப்படித்தான் சொல்ல முடியும். முனியப்பன் பரமக்குடில spm காலணில 8ம் நம்பர் வீட்டில 3 வருஷம் இருந்தப்ப 1ம் நம்பர் வீட்டுக்காரர் நம்ம கமல். கமலும், முனியப்பனும் long long ago பம்பரம், பச்சைக் குதிரை, ஓடிப்பிடிச்சு, கிரிக்கெட், கிட்டி வெளையாண்டவங்க. அந்த பால்ய நட்போட ஆதங்கம் தான் இது.

12 comments:

ஹேமா said...

//கமல், ஒங்களுக்கு ஒரு வேண்டுகோள். "உண்மையிலேயே Oscar விருதுக்கான ஆசை உங்களுக்கு இருந்தால் " அதுக்கான தகுதிய வளத்துக்குங்க, முயற்சில எறங்குங்க. சும்மா ஒலக நாயகன்கிற வார்த்தையை use பண்ணாதீங்க. நீங்க நடிப்பாற்றல் மிக்கவர். Oscar விருதைக் கைப்பற்றும் திறமை உங்களுக்கு உண்டு. நீங்கள் Oscar விருது பெறும் நாளை தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.//

நானும் ஆமோதிக்கிறேன்.
ஓ..முனியப்பன் நம்ம கமலோட நண்பரா.சந்தோஷமாயிருக்கு.
முனியப்பன் நானும் கமலின் ரசிகை.எங்கள் ஈழத்தைப் பொறுத்த மட்டில் கோபம் அது ஒரு பக்கம்.கலைஞன் என்ற வகையில் சிறந்த அற்புதமான நடிகன்.
அவருக்கும் நிறைந்த பேரும் புகழும் கிடைக்க எனக்குள்ளும் ஆசை.

Muniappan Pakkangal said...

Kamal is a good actor,but he is not on track for Oscar,hope hereafter he will try for it.

வண்ணத்துபூச்சியார் said...

இந்த நூற்றாண்டின் இணையற்ற கவிஞனான கண்ணதாசன் ஒருபோதும் தேசிய விருதால் கௌரவிக்கப்பட்டதேயில்லை. அதனால் அவர் கவியரசர் இல்லையா..??

நாகேஷ் ஒரு அற்புத கலைஞன். அவரை இவ்வளவு புறக்கணித்த பெருமை இந்தியரை விட யார் இருக்க முடியும் ..??

கமலும் ஒரு அற்புத நடிகர். நடிகர் மட்டுமல்ல இய்க்குநரும் கூட. அவருக்கு சுவாசமும் சினிமாதான்.

ஆஸ்கரை தாண்டிய தொழில் நுட்பமும் தெரிந்தவர்.

இந்தியாவில் அதுவும் தமிழ் திரையுலகில் இவ்வளவும் சாதித்தவர்.

உலக நாயகனும் ஒரு மார்க்கெட்டிங் மந்திர சொல்லே.. Just to satisfy his fans & Producers..


விருது மட்டுமே அங்கீகாரமாகாது. அது ஒரு மகிழ்ச்சியே..

மருதநாயத்திற்கும் மர்மயோகிக்கும் தயாரிப்பாளர்கள் கிடைப்பது அரிது. கிடைத்தவர்களும் பாதியிலேயே ஒடி விட்டார்கள்.

அப்படியே கிடைத்தாலும் எக்கசக்க Comprimise செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கில் பணம் போடுவரை முதலில் திருப்தி படுத்த வேண்டும். கமல் வேண்டுமென்றால் ஆஸ்கருக்காக படம் எடுக்க துணியலாம். தயாரிப்பாளர்கள் துணிய மாட்டார்கள்.

மல மல மருதமலைக்கும், டோலு டோலுதான் அடிக்கிறான் போன்ற சமூக கருத்துள்ள தத்துவ பாடல்க்ளுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கும் தமிழ் ரசிகர்கள்..
அவரின் ஹே ராமிற்கும், குருதி புனலுக்கும் நாம் கொடுத்த அங்கீகாரம் என்ன..??


இன்றுள்ள அனேக வலைபதிவர்களில் விரும்பிய சினிமாவில் மட்டுமே அன்பேசிவம் இடம் பெற்றுள்ளது.


A manufacturing company with thousands workers and staffs which engaged in manufacturing, sales, marketing, administration are producing NET LOSS at the end of the year.

Indian Cinema which can earn few hundred crores within 3 -6 months.

Indian Cinema is quick money concept. No one willing to do service here. Education, Medicine etc., etc. போன்ற சேவைகள் அனைத்தும் வியாபாரமான பாழாய் போன சமூகம் இது. இங்கு வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ..???

Indian Cinema is a hardcore business. Even corporate companies jumping into Indian Cinema to make this quick money.


கமலோடு கோலி குண்டு விளையாடிய டாக்டர் துணிந்து தயாரிப்பாளராக ஆனால் ஒரு வேளை கமல் யோசிப்பார்.


மர்மயோகியும் மருதநாயகமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். ஆஸ்காரும் வெல்லலாம். We too can celebarate...

முதலில் டாக்டர் யோசிக்க வேண்டும்.....

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

aathangam purigirathu....Muni...

Athey aathangaththoduthaan naanum kaathirukkiren.....

But im sure He will Definately.. achieve it....

and thanks u very much for ur comments in my blog....

vinoth gowtham said...

kamal kandipa oru naal vanuvaru.

Muniappan Pakkangal said...

Nandri butterfly for ur comments.First i want to make it clear one thing,this post is with a good intention for Kamal to get an oscar award.Kannadasan & Nagesh have gone without National recognition,their time is different.Now we can plan & get what we target.Kamal as an Actor & technical expert can aim for an Oscar as he has been projected as an Oscar achiever for a long time.

Muniappan Pakkangal said...

Butterfly,as you have mentioned Indian cinema is few hundred crores in short span,how many films achieve this? More than 85% are failures.I wont accept the word Ulaga Nayagan is for marketing kamal.Do Kamal require this sort of marketing?Has Kamal got into Oscar final round? If kamal has been into Oscar competition,that itself would have satisfied his fans & wellwishers.

Muniappan Pakkangal said...

Butterfly,you know abt Adlabs & Pyramid saimira,the corporate companies who are not in production now.I have a story for Kamal with Rajini,can kamal do it?Oscar awards are projected as for Americans,this has been shattered this year,In the 4 awards for acting 3 have gone for Non americans.so Kamal has to take it as a challenge & do it.will he?

Muniappan Pakkangal said...

Ellorukkum athe aathangamthaan,iraivan eppa Kamaluukku Oscar koduppan? nandri Dyena for ur visit.

Muniappan Pakkangal said...

nandri Vinoth gowtham,Kamal will get it,there is no doubt abt it.

Dikshith said...

Muyarchi udayar igazhchi adayar enbadhai kamal kaadhil naam ellorume pottu vaypom.

Muniappan Pakkangal said...

Nalla karuthu Dikshith.