Tuesday, July 21, 2009

பேரன் பொறந்தாச்சு - V

V - மதுரைல TNSTC அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர். மதுரை to சென்னை பஸ் ஓட்டுறது TNSTC டிரைவர்களுக்கு ஒரு கெளரவம். மதுரை - சென்னை டூட்டி பாக்குற டிரைவர்கள்ல நம்மாளு Vயும் ஒருத்தர்.

முனியப்பன், முன்னால சென்னைக்குப் போகும்போது V- டூட்டில போவார். போற வழில டிரைவர் கண்டக்டருக்கு ஓட்டல் சாப்பாடு ஃப்ரீ. முனியப்பன் V கூடப் போறதால டிரைவர் கண்டக்டர் பகுதில ஒக்காந்து அவங்களோடு சாப்பிடுவார். முனியப்பன் மதுரை ரிட்டர்னும் V கூடத்தான். முனியப்பன் தங்கியிருக்க ரூமுக்கே வந்து முனியப்பனைக் கூப்பிட்டுப் போவார் V.

Vக்கு வாரத்துக்கு 2 டூட்டி. மதுரைலருந்து சென்னை போக ஒரு நாள். நைட்ல பஸ்ஸ ஓட்டிட்டுப் பகல்ல தூக்கம். ஒரு டூட்டிங்கறது 2 நாள். Vக்கு வாரத்துக்கு 2 டூட்டி - 4 நாள் வேல. மீதியெல்லாம் ரெஸ்ட். நடுவுல வேற ஏதாவது ஒரு வண்டி OT (Over Time) பாப்பாரு. வண்டிலருந்து டூட்டிய முடிச்சு மதுரைல எறங்கிட்டா தண்ணி தான். டூட்டில தண்ணிய தொடமாட்டாரு.

தண்ணி அடிக்கிறதுக்கு ஏதாவது வரணுமில்ல. Vக்கு சுகர் வந்துருச்சு. "தண்ணிய நிப்பாட்டுங்க. Diabetesக்கு ஆகாதுன்னு" முனியப்பன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு V. தலை வெடிச்சுரும்ல. 200ல ஆரம்பிச்ச Blood Sugar 400க்குப் போயிருச்சு.

வாழ்க்கை எப்பயும் ஒரே மாதிரி ஓடிக்கிட்டிருக்காது. Twist & Turn வரும்ல. அது Vக்கும் வந்துச்சு. V மகனுக்குக் கல்யாணம் முடிஞ்சு பேரன் பொறந்தாச்சு. பேரன் சென்னைல. V மதுரைல. சென்னைக்கு டூட்டில போற V, பேரனைப் பாக்காம எப்படி வருவாரு? பேரனைப் பாத்து கொஞ்சிட்டுத்தான் வருவார்.

ரொம்ப நாள் கழிச்சு V முனியப்பனைப் பாக்க வந்தாரு. V யோட மூஞ்சி தெளிவாயிருந்துச்சு. "என்ன திடீர்னு மாற்றம்" அப்படின்னு கேட்டதுக்கு V சொல்றாரு - "இப்பல்லாம் தண்ணியடிக்கறதுல அளவைக் கொறைச்சாச்சு. பேரனப் பாக்கப் போகும் போது சிகரட்டும் அடிக்கிறதில்ல."

6 மாசப் பேரனுக்கு தண்ணி வாட, சிகரட் வாட ஆகாதாம். ஆளப் பாருங்க, இளம் தளிரின் வரவு Vக்குள்ள எவ்வளவு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கு பாருங்க... பேரனுக்காகத் தண்ணிய, சிகரட்ட V கொறைக்க ஆரம்பிச்சிருக்காரு. சீக்கிரமா totalஆ நிப்பாட்டிருவாருன்னு நம்புவோமாக.

15 comments:

வினோத் கெளதம் said...

நல்ல விஷயம் தான் சார் நடந்து இருக்கு..

Muniappan Pakkangal said...

Yes Vinoth Gowtham,itz an appreciable one.

Dikshith said...

Idhile rendu vishayam 1) Enakku therinchu trainle TTE thannile dhan duty pakraru - Heavy machineryle work pannravanga thannile duty paakranga - Trainoda rngine driver thanni pottu than vandi eduppar - Aana bus driver thanni potu vandi oatna enna aagum - idhu V oda oru nalla pazhakkam idhu dhan ivara maara vatchirukku. 2)Pachilam pinju kuzhandaikkaaga avar vittukoduthadhu avarudaya perundhanmaya kaatudhu Aana appavum maganum serndhu thanni adikaranga dham podaranga avanga ellam indha V a parthu thirundhanum.

velusamymohan said...

Ungal karuthu correct Dikshith.Most of the railway people work with alcohol.Bus driver with alcohol,i'll repost my previous post for you.Ilanthalirin varavu, niraya maatrangalai kudumbathil undu pannuthu.

தமிழ்ப்பிரியா said...

அந்த குட்டி பையனுக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு 'ஒ' போடுங்க

Muniappan Pakkangal said...

Yes, done TamilPriya.

ஹேமா said...

//6 மாசப் பேரனுக்கு தண்ணி வாட, சிகரட் வாட ஆகாதாம். ஆளப் பாருங்க, இளம் தளிரின் வரவு Vக்குள்ள எவ்வளவு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கு பாருங்க... பேரனுக்காக...//

இதுதான் உறவுகளின் வலு-பெருமை.
நானும் சேந்துக்கிறேன்"ஓ"போட.

Muniappan Pakkangal said...

"O " again,Nandri Hema.

ஆ.ஞானசேகரன் said...

//பேரனுக்காகத் தண்ணிய, சிகரட்ட V கொறைக்க ஆரம்பிச்சிருக்காரு. சீக்கிரமா totalஆ நிப்பாட்டிருவாருன்னு நம்புவோமாக//

நல்ல மாற்றம்...
மகிழ்ச்சியான பகிர்வு சார்...
இது மழலைக்கு கிடைத்த பரிசு

Muniappan Pakkangal said...

Little ones make a lot of changes in the house,There are so many V's in the society Gnanaseharan.

வினோத் கெளதம் said...

தல விருது கொடுத்து இருக்கிறேன் நேரம் இருக்கும் பட்சதில் நம் பக்கம் வரவும்..

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham.

ஹேமா said...

எங்கே டாக்டர் ரொம்ப நாளா பதிவு ஒண்ணையும் காணோம்.ரொம்ப வேலையா.சரி...சரி.

Muniappan Pakkangal said...

Yes Hema,Nandri for your concern.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan.